Wednesday, 29 September 2010

இணையதளத்தில் கணவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

internet call - sample photo

சகோதர சகோதரிகளே 

உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக 

நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம். இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். 

Wednesday, 22 September 2010

உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் - பகுதி 3

குருதி கொடை கொடுக்க நினைப்பவர்கள் அமீரகத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 

துபை:

குருதி கொடை மையம் – அல் வாசல் மருத்துவமனை – துபை –யு.எ.இ – 

(Blood Donation Center – BDC, Al Wasel Hospital, Dubai) 

தொலைபேசி எண்கள்: 04 – 2192331 

நேரம் : காலை 7:30 முதல் மாலை 6 மணி வரை (ஞாயிறு முதல் வியாழன் வரை) 

அல் பரஹா மருத்துவமனை – 04- 271 0000

குழுவாக இரத்த தானம் செய்ய அல்லது இரத்த தான முகாம்கள் அமைக்க அனுக வேண்டிய தொலைபேசி எண்: 04 2193338 

 அபுதாபி:

அபுதாபி இரத்த வங்கி (Abu Dhabi Blood Bank) 

தொலைபேசி எண்: 02 6656508 

நேரம் : காலை 7:00 மணி முதல் மாலை 8:30 மணி வரை (ஞாயிறு முதல் வியாழன் வரை) 

சனிக்கிழமை : காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை 

ஷார்ஜா:

ஷார்ஜா இரத்தம் மாற்றுதல் மற்றும் ஆராய்ச்சி மையம் (Sharjah Blood Transfusion and Research Center ) 

தொலைபேசி எண் : 06 5582111 

நேரம் : காலை 7:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை (ஞாயிறு முதல் வியாழன் வரை) 

சனிக்கிழமை : காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை 

இரத்த தானம் குழுக்கள் அனுக வேண்டிய தொலைபேசி எண் - 06 – 5582111 

அல் அய்ன் 

இரத்த வங்கி, அல் தவாம் மருத்துவமனை, அல் அய்ன் – 03 – 7075212 

உங்களுக்கு அமீரகத்தில் இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் தன்னார்வத்துடன் இரத்தம் கொடையளிக்க விருப்பட்டாலோ www.UAEDonars.com என்ற இணையதளத்தில் உங்களுடைய விவரங்களை பதிய வைத்து பயனடையலாம்.

நன்றி : கல்ஃப் நியூஸ் இணையதளம் 

தோழமையுடன்

அபு நிஹான்

Monday, 20 September 2010

உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் - பகுதி 2

இரத்தம் கொடுப்பவர்களை இரத்த கொடையாளர்கள் அல்லது குருதி கொடையாளர்கள் (Blood Donars) அன்று அழைப்பர். இரத்தம் கொடுக்க நினைப்பவர்கள் எல்லாம் கொடுக்க இயலாது. அதற்கு பல்வேறு விதமான சோதனைகள் செய்ய வேண்டும். இரத்தக் கொடையாளருக்கு முதற்கட்ட சோதனையாக இரத்த வகை கண்டறியப்பட்டு பின்னர் இரத்த அழுத்தம் சோதனை செய்யப்படும். இரத்த அழுத்த சோதனையிலோ அல்லது இரத்த அனுக்களின் சோதனையிலோ குறைந்த அல்லது அதிகமான அளவில் இருந்தால் இரத்தம் கொடுக்க முடியாது. உதாரணத்திற்கு ஹிமோக்ளோபின் (Hemoglobin) குறைவாக இருந்தாலோ அல்லது இரத்த அழுத்தம் குறைவாக (அ) அதிகமாக இருந்தாலோ தொற்று வியாதிகள், குணமளிக்காத வியாதிகள் இருந்தாலோ குருதி கொடையளிக்க முடியாது. 

Wednesday, 15 September 2010

விமானத்தில் ஸ்கை ரைடர் (Sky Rider in the Flight)

மாப்ள, ஃபிளைட்ல எடமே இல்லை, சரின்னு தொங்கிக்கிட்டே வந்துட்டேன்ன்னு பீலா உட்றவங்கள பார்த்திருப்பீங்க, சில பேர் அட போப்பா, வரும் போது ஃபிளைட்ல ஃபுட்போர்டு அடிச்சேன்னு சொல்வாங்க, இன்னும் அதிகமாக என்னுடைய நண்பர் ஒருவர் ஈராக்கிற்க்கு பிராஜக்ட் விஷயமாக சில மாதங்கள் சென்றிருந்தார். அது அமெரிக்க மிலிட்டரி பிராஜக்ட், ஒரு வழியா, பிராஜக்ட்ட முடித்துவிட்டு, துபாயிக்கு திரும்பி வந்துடலாம்னு பார்த்தா, டிக்கட் இல்லை, கம்பெனி டிக்கட் இப்ப தராது அப்படின்னு காமெடி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதற்குள் செய்தி துபாயில் உள்ள அவரது உறவினருக்கு தெரியவர, அவரும் இங்கிருந்தே அவருக்கு பக்தாத்-துபை டிக்கெட் எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். பிறகு மிலிட்டரி ஃபிளைட்டில் பக்தாதில் இருந்து துபைக்கு 5 பேர் அமரக்கூடிய ஃபிளைட்டில் ஆறாவது ஆளாக (ஆம்னி பஸ்ஸில் டிரைவருக்கு பின்னால் கேபினில் அமர்ந்து வருவது போல்) வந்து சேர்ந்தார்.

Wednesday, 8 September 2010

வீணடிக்கப்படும் பெருநாள் இரவு

அஸ்ஸலாமு அலைக்கும். 

புனித ரமலான் மாதத்தில் நோண்புகள் நோற்று இரவுத் தொழுகையை சிறப்புடன் நிறைவேற்றி பெருநாளுக்காக காத்து இருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் மற்ற அனைத்து முஸ்லீம்களுக்கும் ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்கள். இந்த பெருநாள் கொண்டாட்டத்தின் ஆரம்பமாக பெருநாள் இரவில் இருந்தே சகோதர சகோதரிகள் தங்களின் கொண்டாட்டங்களை திட்டமிட்டு செய்கின்றனர். ஆனால் கொண்டாட்டமானாலும் மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடுவது என்பது அனைவருக்கும் தடுக்கப்பட்டுள்ளது. 

Monday, 6 September 2010

பெருநாள் – உணர்வது எப்போது?

Eid in Dubai
கடிதத்திலும் கார்டிலும் பெருநாள் வாழ்த்து - 1980
டெலிபோனில் பெருநாள் வாழ்த்து - 1990
செல்போனில் பெருநாள் வாழ்த்து - 1999
ஆன்லைனில் பெருநாள் வாழ்த்து - 2007
நேரில் வாழ்த்துவது எப்போது?
இதை நீ உணர்வது எப்போது?


சொந்தங்கள் இருந்தாலும் நீ அனாதை தான்
ஒவ்வொரு பெருநாளின் போதும்
இதை நீ உணர்வது எப்போது?

பெருநாள் தொழுகை முடிந்தவுடன்
துக்கம் நெஞ்சை அடைக்க
மனதில் அழுகையையும், முகத்தில் சிரிப்பையும் காட்டுகிறாய்
இதை நீ உணர்வது எப்போது?

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...