Monday, 17 October 2011

தமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ?

டெரர்கும்மியில் அடித்த நகைச்சுவை பதிவிற்கு சகோதரர் இரமணிதரன் அளித்த பதில் பதிவர்களை பலரை மிகவும் வருத்தமடையச் செய்தது. இதோடு நில்லாமல் இஸ்லாமியர்கள் கூறும் அழகிய முகமனை கேலி செய்யும் விதமாக 

"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்" 

என்று கூறி முஸ்லீம்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டது. அதற்கு விளக்கமளிக்குமாறு தமிழ்மணத்தின் நிர்வாகியை தொடர்பு கொண்ட போது சகோதரர் இரமணிதரனுக்கும், தமிழ்மணத்திற்கும் சம்பந்தமே இல்லாதது போல் பொறுப்பற்ற பதில் வந்தது. அதுமட்டுமல்லாமல் நாகரிகமாக தனிப்பட்ட முறையில் மெயிலில் விளக்கம் கேட்டதை நக்கலடித்து உச்ச கட்டம். ஒரு வேளை அவர்களுக்கு நாகரிகம் என்றால் என்ன என்று தெரியாததால் தானோ என்னவோ? 


பொறுப்பற்ற பதில்:


பதிவருக்கு,

இரமணிதரனின் எங்கோ ஒரு தனிப்பதிவிலே சொன்ன அவரின் தனிப்பட்ட சொல்லாடல் உங்களைக் கேலி செய்கின்றதென்று கருதிக்கொண்டால், அதற்கு எதற்காகத் தமிழ்மணம் விளக்கம் சொல்லவேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்? இரமணிதரன் அங்கே இச்சொல்லாடலைச் செய்தபோது, தமிழ்மணம் சார்பிலே சொல்கிறேனென்று சொல்லியிருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்தாமல் 

எதற்காகத் தமிழ்மணத்துக்கு அனுப்புகின்றீர்கள்? 


ஆனாலும், ஏனென்றால், இரமணிதரன் சம்பந்தப்பட்ட விடயத்திலே இரமணிதரனே பதில் சொல்வது நியாயமில்லை என்பதாலே மற்றைய நிர்வாகிகளுக்கும் அனுப்பியிருக்கின்றேன். 


/இந்த மெயில் தமிழ்மணத்தில் இணைந்துள்ள பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களுக்கு bcc போடப்பட்டுள்ளது/
இதற்கு தமிழ்மணம் என்ன செய்யவேண்டும்? 


==
புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

இரமணிதரன், க.
தமிழ்மணம் உதவிக்குழு 

இப்படி ஒரு பொறுப்பற்ற பதிலைத்தான் சகோ இரமணிதரன் (தமிழ்மணம் சார்பாக) எழுதியிருக்கிறார். தவிர டெர்ரர் கும்மியில் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்மணம் சார்பாக எழுதிவிட்டு, இப்போது அது இரமணிதரன் தனிச்சையாக எழுதியது என்று சப்பை கொட்டுகிறார். 

கமெண்ட் போட்டதில் தமிழ்மணத்திற்கும் சகோ இரமணிதரனுக்கும் சம்பந்தமில்லை என்றால் கீழே உள்ளதுக்கு என்ன அர்த்தம்??சகோ இரமணிதரனுக்கு புரியவில்லையா? அல்லது தந்திரமாக பேசுவதாக நினைத்து மொக்கையாக காரணம் சொல்கிறாரா? தெரியவில்லை?

இதற்கு கண்டிப்பாக தமிழ்மணம் பதில் சொல்லியே ஆக வேண்டும். தவிர சக பதிவர்களை மரியாதை இல்லாத வார்த்தைகளில் பேசியது, வரம்பு மீறி வசை மழ பொழிந்தது போன்றவைகளுக்கு கண்டிப்பாக தமிழ்மணம் பதில் சொல்லியே ஆக வேண்டும். 

”..நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்" - குர்ஆன் 5:2 

பதிவர்கள் ஓற்றுமை ஓங்குக 

கண்டனம் தெரிவிக்க விரும்புபவர்கள் admin@thamizmanam.com என்ற இணையதளத்திற்கு மின்னஞ்சல் அனுப்பவும். 

நான் தமிழ்மண ஓட்டுப்பட்டையை தூக்குவது பற்றி முடிவு செய்து விட்டேன் (தூக்குவதென்று). அப்ப நீங்க?? 

இது சம்பந்தமாக மற்ற பதிவர்களின் பட்டைய கிளப்பும் பதிவுகள் அபு நிஹான்

டிஸ்கி : இந்த வருட கேவலமான பஞ்ச் டையலாக் : புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

Thursday, 29 September 2011

இருதயம் காப்போம்

டாக்டர் அனுராதா கிருஷ்ணன்


இதயத் தன்மை உள்ளவர்களே! உடலினை உறுதி செய்யும் நான்காம் படி நிலையான கொழுப்பின் இரகசியங்களை இன்னமும் புரிந்து கொள்வோம். இருதயத்தின் இயங்கு தன்மை என்பது இரத்த குழாய்களின் மென் தன்மையைப் பொருத்தது என்று சென்ற இதழில்பார்த்தோம். அன்பர்களே! நமது உடலில் 90,000 மைல்களுக்கு இரத்த குழாய்கள் பிரிந்து, கிளைத்து விரிந்து கிடக்கின்றன. இத்தனை மைல்களில் எங்கு கெட்ட கொழுப்பின் பிசிர் தட்டினாலும் இருதயத்திற்கு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தத்தை நீக்க நமது இருதயம் சற்று கூடுதலாக தன் பிழிந்து உறிஞ்சும் செயலை அதிகப்படுத்தி நீக்க முயற்சிக்கும். நாம் உண்ணும் உணவில் எவ்வித மாற்றங்களும் செய்யாது இருந்தும், பழக்க வழக்கங்களில் எவ்வித மாற்றமும் செய்யாமல் இருப்பதாலும், கெட்ட கொழுப்பானது இரத்த குழாய்களில் துரு ஏறுவதுபோல் படிமமாக (Sedimentation) ஏறத்தான் செய்யும். நாம் முன்னமே பார்த்தது போல் கெட்ட கொழுப்பு கடினத்தன்மை கொண்டது என்று தெரியும் தானே? இதனால் இரத்த குழாய்கள் கடினத்தன்மையாக மாறி சுருங்கி விரியும் தன்மையை படிபடியாக இழக்கின்றன. இப்படிப்பட்ட குழாய்களில் இருந்து இருதயம் இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ள மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். இந்த அதிகப்படியான பிரயத்தனமே இரத்த அழுத்தமாக இரத்த குழாய்களிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் உணர்கிறோம். இதன் காரணமாக ஒருவித அவசரத்தனமும் பதட்ட நிலையும் நம்முள்ளே ஏற்படுகிறது. இதனால் நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் நிலைக்கு ஆளாகிறோம். இந்த நிலையில் தான் உங்களுக்கு ஆட இருப்பதாக கண்டறிகிறார்கள். உங்கள் மருத்துவரும் உங்களுக்கு ஆட மாத்திரைகள் கொடுக்க ஆரம்பிக்கிறார். இந்தப் பிரச்சனை எப்போது தீரும் என்று நீங்கள் கேட்கும்போது, உங்கள் மருத்துவர் கூறும் பதில் என்ன தெரியுமா? “Long Life வாழவேண்டுமானால், Long Life BP மாத்திரைகள் சாப்பிட வேண்டும்” என்பதே! இதில் உண்மை இருக்கிறதா? அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

Tuesday, 16 August 2011

பணம் பண்ணலாம் வாங்க - ஒரு உற்சாகத் தொடர் - பகுதி - 4


போன பதிவில் சரியான திட்டமிடலை பற்றி பார்த்தோம். இந்த பதிவில் தொழிலை பற்றிய நுண்ணறிவு மற்றும் தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளை நமக்கு நம்பகமான அந்த பிரச்சனை பற்றிய அறிவுள்ள நண்பர்களிடம் கலந்தாலோசிப்பது பற்றி எனக்கு தெரிந்ததை கூறுகிறேன். நீங்கள் செய்யும் தொழில் எதுவாயினும் அதைப் பற்றிய அறிவும், எப்படி சிறப்பாக செய்ய வேண்டும் என்ற யுக்தியும் இருக்க வேண்டியது அவசியம். எங்களுடைய ஊரின் அருகே ஒருவர் ஒரு நான்கு சக்கர மெக்கானிக் ஷாப் (கேரேஜ்) வைத்திருந்தார். வெளிநாடுகளை போல எல்லாம் ஒரே இடத்தில் வைத்து தொழில் செய்யலாம் என்று ஆரம்பித்தார். ரிப்பேரிங், வல்கனைசிங், டிங்கரிங், பெயிண்டிங் என்று எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைத்து சிறப்பாக தொழிலை ஆரம்பித்தார். சிறிது காலத்தில் அவரால் திறம்பட நடத்த முடியாமல மூடிவிட்டார். இதை பற்றி நான் இன்னொரு நண்பரிடம் கேட்ட போது அவருடைய சிந்தனை, அந்த தொழிலை பற்றிய அவரின் அறிவு என்னை யோசிக்க வைத்தது. 

Saturday, 23 July 2011

பணம் பண்ணலாம் வாங்க - ஒரு உற்சாகத் தொடர் - பகுதி - 3

போன பதிவில் விடா முயற்சி, மற்றும் கடும் உழைப்பை பற்றியும் பார்த்தோம். இந்த பகுதியில் சரியான திட்டமிடல் பற்றி எனக்கு தெரிந்த விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இன்று பலரும் தொழில் செய்ய ஆர்வப்பட்டு என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்திருக்கையில் எல்லோருக்கும் தோன்றுவது அந்த ஊரிலேயே இலாபம் தரக்கூடிய தொழில் எது என்று கூர்ந்து கவனித்து அந்த தொழிலை ஆரம்பிப்பது. இப்படி பார்த்து மட்டும் தொழிலை ஆரம்பிக்க கூடாது. 


தொழில் தொடங்கும் போது யோசிக்க வேண்டியது


  • ஆரம்பிக்கும் தொழிலை பற்றிய நுன்னறிவு நம்மிடம் இருக்கிறதா? 
  • தொழிலை ஆரம்பிக்க தேவையான பணம் மற்றும் தகுந்த இடம் போன்றவை கைவசம் இருக்கிறதா? 
  • இந்த தொழிலில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? 
  • தொழில் ஆரம்பிக்கும் முன் ஏதெனும் தடங்கள் வந்தால் வேறு தொழில் செய்வதற்கான மாற்று சிந்தனை. 
  • தொழிலில் மேற்கொண்டு முதலீடு ஏதேனும் செய்ய வேண்டுமானால் அதற்கு தேவையான பணம் நம்மிடத்தில் இருக்கிறதா? 
  • செய்யும் தொழிலில் எந்த ஆள் துணை இல்லாமல் இருந்தாலும் தன்னால் மட்டும் கூட அந்த தொழிலை நடத்த முடியுமா? என்று ஆராய்வது மிக முக்கியம். உதாரணத்திற்கு ஹோட்டல் வைத்து நடத்துபவர்கள் திடிரென்று புரொட்டா மாஸ்டர் ஹோட்டலுக்கு வராமல் விடுப்பு எடுத்தாலோ அல்லது வேலையை விட்டு நின்றாலோ முதலாளிக்கு புரோட்டா போட தெரிந்திருக்க வேண்டும். (இது எல்லா தொழிலுக்கும் ஒத்துவராது, சொல்லவந்தது தொழிலை பற்றிய அறிதல் வேண்டும்) 

Thursday, 21 July 2011

Drunken Drive - ஒழிக்க என்ன வழி?

Dont drunk & Drive
தமிழ்நாட்டில் விபத்துகள் அதிமாகி கொண்டே வருகின்றன. அதை பற்றி தேவையான அளவு பல பதிவர்கள் எழுதியும் விவாதித்தும் விட்டார்கள். Drunken Drive என்று சொல்லக்கூடிய மது குடித்துவிட்டு போதையில் வண்டி ஓட்டுவது கூடாது என்று மோட்டார் வாகன சட்டம் கூறுகிறது. 

Wednesday, 20 July 2011

பணம் பண்ணலாம் வாங்க - ஒரு உற்சாகத் தொடர் - பகுதி - 2

முந்தைய பதிவுகள் : பதிவு - 1

போன பதிவில் ஜித்தாவில் ஒரு பெண்மனி எப்படி தொழில் செய்ய கற்றுக் கொண்டு கணவனுக்கு உறுதுணையாய் இருந்து வாழ்வில் முன்னேறினார் என்று பார்த்தோம். இந்த பதிவிலும், இன்னும் தொடரும் பதிவிகளிலும் தொழில் பற்றிய எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன். 

நம்மில் பெரும்பாலோர் தொழில் செய்வதில் அதிகம் ஆர்வம் செலுத்துவதில்லை. ஏனெனில் தொழில் செய்வதில் சாதகங்கள் இருப்பது போல் பாதகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கொஞ்சம் உஷாராக இல்லாது போனால் முதலுக்கு மோசம் வரும் சூழ்நிலைதான். 

Tuesday, 19 July 2011

பணம் பண்ணலாம் வாங்க - ஒரு உற்சாகத் தொடர்

நடுத்தர வயதுடைய ஒரு குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி, ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்கல்வி மட்டுமே படித்திருந்த தன் மனைவியிடம் ஒருநாள், “திடீரென்று நான் மௌத்தாயிட்டா நீ என்ன செய்வே?” என்று கேட்க, பதறிப் போனார் மனைவி!

“ஏன் இப்படி அமங்கலமாப் பேசுறீங்க?” என்று அவர் பாசத்துடன் கடிந்துகொள்ள, மனைவியை சமாதானப் படுத்திய அவர், மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்!

“மௌத் மனிதனுக்கு எந்த நேரத்திலும் நேரலாம்… அதை எதிர்கொள்ள ஒரு முஸ்லிம் எல்லா வகையிலும்- எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் …குடும்பார்த்தக் கடமைகளை ஒத்தி போடாமல், முடிந்தவரை முடித்துக் கொள்ள வேண்டும் …நம்முடைய தொழிலை உருவாக்க நான் பட்ட கஷ்டத்தை நீ அறிவாய் ! அந்தத் தொழில் எனக்குத் திடீரென ஏதாவது நிகழ்ந்துவிட்டாலும் தொடர்ந்து நடக்க வேண்டும்! திறம்பட நிர்வகிக்கப் பட வேண்டும் – அதனால்தான் கேட்கிறேன்… அப்படியான ஒரு சந்தர்ப்பம் நேரிட்டால், நீ என்ன செய்வாய்?”

Monday, 13 June 2011

KPN விபத்து - தொடரும் தீர்வில்லா பயணம்

KPN Bus - After accident
கடந்த ஜூன் 8ஆம் தேதி KPN ஆம்ணி பஸ்ஸில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த KPN ஆம்ணி பேருந்து, இடதுபுறம் பேருந்தைத் திருப்பியதால் விபத்து நேரிட்டதாக ஓட்டுனர் கூறியிருக்கிறார். காவேரிப்பாக்கம் அருகே அவலூர் என்ற இடத்தில் நேற்று இரவு விபத்துக்குள்ளான கேபிஎன் பேருந்து சென்னையிலிருந்து எட்டரை மணியளவில் திருப்பூருக்குக் கிளம்பியது.

Sunday, 12 June 2011

அமீரகத்தில் வெயில் கால மதிய இடைவேளை

Ministry of Labour - Midday break Icon

அமீரகத்தில் வரும் ஜூன் 15 ஆம் தேதியில் இருந்து வெயில் காலத்திற்கான மதிய இடைவேளை (12.30 – 3.00) ஆரம்பிக்க இருக்கிறது. நான் இந்தியாவில் இருந்து அமீரகம் வந்தவுடன் பல விஷயங்களை பார்த்து வியந்து இருக்கிறேன். அடுக்குமாடி கட்டிடங்கள் என்னை பெரிதும் வியப்படைய செய்யவில்லை. ஆனால் அமீரகத்தில் குறிப்பாக துபையில் நாம் வாழ்வது இந்தியாவில் வாழ்வது போன்ற தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியது. எங்கு திரும்பினாலும் இந்தியர்கள், அரசு அலுவலகங்களில் கூட இந்தியர்கள், இந்தி பேசும் அமீரக குடி உரிமைகள் என பல விஷயங்களில் இந்தியாவை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும். வெற்றிலை முதல் மல்லிகைப்புவை வரை இங்கு கிடைப்பது பல இந்தியர்களுக்கு ஆச்சர்யமளிக்கும்.

Tuesday, 7 June 2011

சாலை மறியல் - பிரச்சனைக்கான தீர்வல்ல

சாலை மறியல் (sample)

சாலை மறியல் பண்ணுவது என்பது இப்போது மிகவும் பிரபலமாகி(?) விட்டது. 

மின்சாரம் தடையா – உடனே சாலை மறியல் 

வெள்ள / மழை நிவாரனம் கிடைக்கவில்லையா – உடனே சாலை மறியல் 

கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் வரவில்லையா / தண்ணீர் லாரி வரவில்லையா – உடனே சாலை மறியல் 

தொலைபேசி இணைப்பு துண்டிப்பா – உடனே சாலை மறியல் 

சாலை விபத்தா, காவல் துறை கண்டுகொள்ளவில்லையா? – உடனே சாலை மறியல் 

பஸ் ஸ்டாப்ல பஸ் நிக்கலையா – உடனே சாலை மறியல் 

கொலை நடந்துவிட்டதா, விசாரணை தேவையா? – உடனே சாலை மறியல் 

Monday, 23 May 2011

தலைவலியும் காய்ச்சலும் (கனிமொழியும் ஸ்பெக்ட்ரமும்)

கோவையில் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்ட பின் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட, முழுக்க முழுக்க காவல்துறையின் தலைமையில் நடத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தில் பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். பல கோடி முஸ்லீம்களின் சொத்துக்கள் நாசமாகின. ஆனால் கலவரத்தை தடுக்க வேண்டிய காவல்துறையோ கை கட்டி நின்று வேடிக்கை பார்த்தது. சமுதாய மக்கள் கொத்து கொத்தாக மடிந்ததை பார்த்து அகமகிழ்ந்தது. 

Sunday, 22 May 2011

நர்ர்ரேந்திர ஜெ..! (மெளனம் ஆன நம் உணர்வுகள்)


இதை நான் எழுதவில்லை, ஆனால் இவர் எழுதியது போன்ற ஆயிரக்கணக்கான கேள்விகள் என்னில் எழாமல் இல்லை. அது எழுத்தில் வராமல் போக, என்னுடைய நண்பர் முஹம்மத் ஆஷிக் அவர்கள் எழுதிய பதிவை உங்களுடன் பகிர்கிறேன்.

அந்த பதிவு இதோ.... 

செல்வி.ஜெயலலிதா, தன்னை ஒரு அப்பட்டமான "பாஸிச வெறி கொண்ட, ஆர்.எஸ்.எஸ். அபிமான, தீவிர ஹிந்துத்வா அரசியல்வாதி" என அவ்வப்போது அடையாளம் காட்டிக்கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை என்றுமே தவற விட்டது இல்லை...! அதுதான் ஜெ..!

Wednesday, 18 May 2011

+2 முடித்த மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?


+2 அடுத்தது என்ன?
+2 தேர்வு முடிவுகள் வந்து விட்டன, பல மாணாக்கர்கள் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி தெளிவான சிந்தனையோடு இருந்தாலும் சிலருக்கு துறையை தேர்ந்தெடுப்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாதது வருத்தத்திற்குரியதே. வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது என்று ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் விதமாக பல இயக்கங்கள், கழகங்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற ஆரோக்கியமான கருத்தரங்கங்களை நடத்தினாலும் அது எல்லா இடத்திலேயும், எல்லா மாணாக்கர்களிடேயேயும் போய் சேறுகின்றதா என்று கேட்டால், நம்மால் 100 சதிவிகிதம் பாஸிட்டிவான பதிலை சொல்ல முடியவில்லை. 

Monday, 16 May 2011

+2 முடிச்சாச்சு அடுத்தது என்ன? பொறியியல் மற்றும் மருத்துவத்துறை

அடுத்தது என்ன?
வந்தாச்சு +2 ரிசல்ட். பாஸ் செய்திருப்பவர்களின் அடுத்த இலக்கு பொறியியல் அல்லது மருத்துவப் படிப்புதான். பெற்றோர்களின் எதிர்கால கனவுளை நனவாக்கத் தயாராகும் மாணவர்களுக்கு கவுன்சலிங்தான் முதல் படிக்கல்.
இடம் கிடைக்குமா? என்ன கோர்ஸ்? எந்தக் கல்லூரியில் சேரலாம் என்கிற டென்ஷன்.

Tuesday, 10 May 2011

ஓ.! பயங்கரவாத சைத்தானே.! உலகம் இன்னும் உன்னை நம்புதேடா..!


ஜப்பான்- ஹிரோஷிமா- 1945- ஆகஸ்ட்-6 காலை 8.15.

அன்றுதான்... அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும், கலாச்சாராத்திலும், கல்வியிலும் முன்னேறிய... அமெரிக்கா என்ற உலக மக்கள் விரும்பும் ஒரு அதி புத்திசாலி நாடு, இந்த நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் அப்பாவி மக்கள் மண்டையில் அணுகுண்டு போட்டு மனிதம் இழந்து பயங்கரவாதி ஆன நாள்..! அந்த அணுகுண்டிற்கு அது ஜாலியாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (little boy). அன்று அந்த ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 அப்பாவி பொதுமக்கள் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள். சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக ஒன்றுமின்றி முற்றாக அழிந்தது.


இவ்வளவு பெரிய நாசத்தை கண்டு விட்டு, கதிகலங்கி உலகமே நிலை குலைந்து திக்பிரமை பிடித்து செயலற்று நெஞ்சு விம்ம துக்கத்தில் இருக்க, ஜப்பனோ... என்ன செய்வது என்றே புரியாமல் அப்படியே உறைநிலையில் சிலையாகிக் கிடக்க... மூன்று நாட்கள் கழித்து...

ஜப்பான்- நாகசாகி- 1945- ஆகஸ்ட்-9.

0.0000000000....1% கூட மனிததன்மையோ, குற்ற உணர்ச்சியோ... இன்னும் மனிதன் என்றால் அவனிடம் குறைந்த பட்சம் என்ன என்ன தன்மைகள் எல்லாம் இருக்க வேண்டுமோ அதெல்லாம் எதுவுமே இல்லாத ஒரு சாத்தானாய்... "உலகத்தின் அதிகாரபூர்வ பயங்கரவாதி-அமெரிக்கா" மீண்டும் இங்கே இன்னொரு அணுகுண்டை போட்டான். முன்பை விட இங்கே அழிவு கூட இருக்க வேண்டும் என்று ‘குண்டு மனிதன்’ (fat man) என தெனாவட்டாய் இதற்கு பெயரும் இட்டான். அதன் தீ ஜுவாலை மேகத்தை தாண்டி, குண்டு போட்ட விமானத்தின் உயரத்தையும் கூட தாண்டியது..! 74,000 அப்பாவி பொதுமக்கள் நாகசாகியில் நாசமாகினர்.


மனித வரலாற்றில் நினைத்தும் பார்த்திராத இந்த அகோர குண்டு வீச்சுகள் மூலம் ஏற்பட்ட மனித இறப்பும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. குண்டு விழுந்த பிறகு வருடக்கணக்காக மக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். கதிர்வீச்சு பாதிப்புகள் இன்றும் தலைமுறையாக தலைமுறையாக தொடர்கிறது.

Monday, 11 April 2011

பெண்கள் யாருக்கு ஓட்டு போட போகிறீர்கள்? ஒரு அவசர வேண்டுகோள்


வாக்களிக்க காத்திருக்கும் பெண்கள்
படித்த பெண்களை பொருத்தவரை நாட்டின் இன்றைய சூழலில் யார் ஆட்சிக்கு வந்தால் நாடு நலமாக இருக்கும் என்று சிந்திக்கின்ற ஆற்றலை வைத்து வரும் தேர்தலில் வாக்களிப்பர். ஆனால் படிக்காத உலகம் / அரசியல் அறியாத பெண்கள் தற்போது நாட்டின் நிலைமை என்ன? யாருக்கு ஓட்டு போட்டால் நம்ம தொகுதி சிறப்பாக இருக்கும்/ அல்லது நமது நாடு நலமாக இருக்கும் என்று சிந்திப்பது மிக குறைவு.

Thursday, 7 April 2011

பிள்ளைகளுக்கு விடுமுறை – என்ன செய்ய போகிறீர்கள் பெற்றோர்களே?
summer coaching classes (பெரிது படுத்தி பார்க்க படத்தை கிளிக்குங்கள்)
 மாணவ மணிகளுக்கு வரும் தேர்தலுக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க அரசு முடிவெடுத்து ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளி தேர்வுகளும் முடுவுக்கு வந்து விடும். வழக்கம் போல் பெற்றோர்கள் பிள்ளைகளின் நலன்(?) கருதி அவர்களை விடுமுறை நாட்களை பயனுள்ளதாக கழிக்க ஏதாவது கம்ப்யூட்டர் வகுப்பு/ ஸ்விம்மிங் வகுப்பு / கராத்தே பயிற்சி / aptitude class / abacus class / painting class/ music class / dance class பயிற்சி என்று சேர்த்துவிட எண்ணும் பெற்றோர்கள் அதிகம் என்பேன். மணிதன் சுதந்திரமாக / சந்தோஷமாக எந்தவித கவலையுமின்றி இருக்கும் காலங்கள் மாணவப்பருவம் தான், அதிலும் காத்துக் கிடந்து பெற்ற வரம் போல் கிடைக்கும் விடுமுறைக் காலங்கள் தான் அவர்களுக்கு சுதந்திரத்தையும், சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் தரும் காலங்கள். அப்போது அவர்கள் எந்தவித கவலையுமின்றி ஆசிரியரின் தொல்லையின்றி / வீட்டுப்பாடங்களின் தொல்லையின்றி / ரெக்கார்ட் தொல்லையின்றி / அசைன்மெண்ட் (assignment) தொல்லையின்றி பவனி வரும் நாட்கள்.

Monday, 4 April 2011

குறைந்த செலவில் MBA, M.E/ M.Tech , MCA படிக்க TANCET நுழைவு தேர்வுTANCET
தமிழகத்தில் உள்ள  அரசு கல்லூரிகள், அண்ணால் பல்கலை கழககங்கள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில்  MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் TANCET என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இந்த தேர்வை எழுதி, நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்கலாம் . இதில் முஸ்லீம்களுக்கு 3.5% இட ஒதுத்கீடு உள்ளது.

பெரும்பாலும் மாணவர்கள் பட்ட  படிப்பை முடித்தவுடனே MBA, M.E/ M.Tech , MCA படிக்க வேண்டும் என பெற்றோர்களிடம் சொல்வார்கள். இதற்க்கு பல லட்சம் செலவாகும். எனவே பெற்றோர்கள் மாணவர்களிடம் இந்த TANCET நுழைவு தேர்வை எழுதுமாறு வழியுறுத்துங்கள், இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெறுமாறு கூறுங்கள். இதன் மூலம் உங்களின் பல லட்ச ரூபாய் மிச்சமாகும். நல்ல கல்லூரியில் படிப்பதன் மூலம் நல்ல சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைக்கும். 

Thursday, 31 March 2011

தேமுதிக தேர்தல் பிரச்சாரம் – எகிப்தில் கடாஃபிக்கு(?) எதிரான போர் பற்றி கேப்டன்
கேப்டன்
 அதாவது விஜயகாந்த் வேட்பாளர் அடித்தது பெரிய பிரச்சனையாகும் என்று அடித்த கேப்டனும் நினைத்து இருக்க மாட்டார், அடி வாங்கின பாஸ்கரனும் தான் இவ்வளவு ஃபெமிலியர் ஆவோம் என்று நினைத்திருக்க மாட்டார், அந்தளவிற்கு பிரச்சனையை மக்கள் தொலைக்காட்சி கொண்டு சென்று விட்டது.

உஷார்: ஆர்குட்’, 'ஃபேஸ்புக்’, 'டிவிட்டர்’... உபயோகிப்பவரா நீங்கள்??social networking
சில புரட்சிக்கு வழி வகுத்த சமூக வலைதளங்களான  ஃபேஸ்புக்’, 'டிவிட்டர் போன்றவற்றை எண்டெர்டெய்ன்மெண்டுக்காக பயன்படுத்துபவர்கள் அவசியம் படியுங்கள்

ஆர்குட்’, 'ஃபேஸ்புக்’, 'டிவிட்டர்’... இவையெல்லாம்தான் இன்றைய ஃபேஷன் பரபரா!

''நீ எந்த சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ல இருக்க..?' என்ற கேள்விக்கு, ''எதுலயும் எனக்கு அக்கவுன்ட் இல்ல...' என்று சொல்பவர்களை, டெக்னோ உலகில் இருந்து ஏதோ கண்காணாத தொலைவில் இருப்பவர்களைப் போல பரிகாசத்துடன் பார்ப்பதுதான் இப் போதைய நிலைமை!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவில் இருந்து... பக்கத்து வீட்டு ப்ளஸ் டூ பெண் வரை ஆண்களையும், பெண்களையும் தங்கள் பக்கம் ஈர்க்கும் தொழில் நுட்ப ஜனரஞ்சக ஹீரோவான இந்த சமூக வலைதளங்களில் அக்கவுன்ட் ஆரம்பிக்கும் ஒருவர்... அதில் தன் புகைப்படம், -மெயில் .டி, தொலைபேசி எண் போன்றவற்றை விரும்பினால் கொடுக்கலாம். அதைப் பார்த்து அந்த வலைதளத்தில் உலவும் மற்றவர்கள் (பள்ளி, கல்லூரி, அலுவலக நட்புகள் என ஏற்கெனவே அறிமுகமானவர்களும் இருக்கலாம், புதியவர்களும் இருக்கலாம்), அவருடன் ஃப்ரெண்ட்ஷிப் வைக்க விருப்பம் தெரிவித்து தகவல் அனுப்புவார்கள். ஏற்பதும்... ஏற்காததும் அவரவர் விருப்பம்.

Saturday, 19 March 2011

தேர்தலில் முஸ்லீம் கட்சிகள் – பகுதி - 3


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

தேர்தல் சூழ்நிலை களைகட்டியிருக்கும் இச்சூழலில் மூன்றாம் அணியின் பயத்தை உணர்ந்து அதிமுக உஷாராக கேட்ட தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து தங்களுடைய நிலையை தமிழக வரலாற்றில் நிலைநிறுத்த போராடிக் கொண்டிருப்பதையும், கூட்டணி உடைந்தால் வெற்றி நிச்சயம் என்று திமுக பகல் கனவு கண்டது வீணாகி தங்களுடைய நிலையை நினைத்து வருந்தி வருவதையும் அனைவரும் அறிவீர்கள். 

தொகுதிகள் பங்கீடு முடிந்து முஸ்லீம் கட்சிகளின் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் வெளிவந்துவிட்டன. முஸ்லீம் லீக், மமக, SDPI ஆகிய கட்சிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடுவது எனவும் சகோதரர் பாக்கர் தலைமையில் உள்ள இந்திய தவ்ஹீத் ஜமாத் வெளியில் இருந்து ஆதரவு தருவதென்றும் முடிவில் உள்ளன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு என்னெவென்று தெரியவில்லை.   

Monday, 14 March 2011

2011 தேர்தல் நகைச்சுவை

தேர்தல் நேரம் நெருங்கி விட்டாலே கூட்டணி பேச்சு வார்த்தை, தேர்தல் செய்திகள், அட்ரஸ் இல்லாத ஆளும் அறிக்கை விடுகிறேன் பார் என்று அடிக்கும் கூத்துகள் பயங்கர காமெடியாக இருக்கும், அப்படி நான் படித்த அறிக்கைகளை செய்திகளை என்னுடைய நகைசுவை உணர்வோடு பகிர்ந்து இருக்கிறேன், இது எந்தவித கட்சி/இயக்க சார்பற்ற பதிவு, யாரையும் புண்படுத்தும் நோக்கோடு எழுதப்படவில்லை.  


நம்பர மாத்துக்கங்கப்பா? படிக்கிறவுங்க தப்பா படிச்சிறப்போறாங்க


ஆமா இப்படி பறிமுதல் செஞ்ச பணத்த எல்லாம் என்ன செய்வாங்க?? 


என்ன கேப்டன் இப்படி பண்னிட்டாங்களே, படுபாவி பசங்க, இப்ப சமயோக புத்தியோடு(?) முடிவெடுத்தது போல லோக்குசபா தேர்தல்ல முடிவெடுத்திருந்தா, அட்லீஸ்ட் சின்னத்தையாவது காப்பாற்றி இருக்கலாம். 

Saturday, 12 March 2011

இந்திய யூணியன் முஸ்லீம் லீக் - தேர்தல் பார்வை

IUML - DMK - Election Meet
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நோக்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது அல்ல. முஸ்லிம் சமுதாயத்தினருக்கு சேவையாற்றும் சரியான பிரதிநிதிகளை உருவாக்கும் பயிற்சி தளமாகவே இயங்கி வருவதே அதன் நோக்கம் என தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 64-வது நிறுவன தினத்தை சிறப்பிக்கும் வகையில் சென்னை சி.என்.கே. சாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் கூறியதாவது- 

தி.மு.க தலைமையிலான கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 64-வது நிறுவன தினம் இன்று தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக் கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமது கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். 

Thursday, 10 March 2011

தேர்தலில் முஸ்லீம் கட்சிகள் – பகுதி - 2

TN election 2011

ஒரே கூட்டணிக்கு முஸ்லீம் கட்சிகள் ஆதரவு அளிப்பது பற்றி சென்ற தொடரில் பார்த்தோம். 

ஒரே கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதால் ஓற்றுமை, சகோதரத்துவம் தழைத்தோங்குவது மட்டுமின்றி இந்த தேர்தலில் கிடைத்த ஐந்து தொகுதிகளிலும் இறைவனின் அருளால் வெற்றி வாகை சூடினால் வருங்காலத்தில் இன்னும் அதிக இடங்கள் ஒரே கட்சியின் கீழ் கிடைக்க அல்லது இதைப்போன்றே இரு கட்சிகளின் வாயிலாக கிடைக்க உதவியாக இருக்கும். 

Wednesday, 9 March 2011

தேர்தலில் முஸ்லீம் கட்சிகள் – பகுதி - 1

iuml & tmmk
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, தத்தமது கட்சிகள், இயக்கங்கள், மத/சாதி சார்ந்த அமைப்புகள் அனைத்தும் முழு மூச்சோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், இந்த தேர்தலில் சற்று வித்தியாசமாக தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து தான் முடிவுகள் வரும் என்பது ஒரு வியக்கத்தக்க விஷயம். ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும், தொகுதி பங்கீடுகளை அலசி ஆராய்ந்து தங்களது கூட்டணியை பலுபடுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். இது ஒருபக்கம் இருக்க உதிரி கட்சிகள்-இயக்கங்கள், மத- சாதி சார்ந்த கட்சிகள் –இயக்கங்கள் தங்களின் நிலையை உறுதிபடுத்திக் கொள்ளவும், தமிழக அரசியலில் புதிதாக கால் பதிக்கவும், கால் பதித்தவர்கள் உறுதியாக நிற்கவும் முயற்சி செய்கின்றனர். 

சிறுபான்மை என்று சொல்லப்படுகின்ற முஸ்லீம் சமுதாயமும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதில் இருவகையான பிரிவுகள், இரு கட்சிகளாக போட்டியிடுகின்றனர். 

1. இந்திய யூணியன் மூஸ்லீம் லீக் – திமுக அணி 
2. மனிதநேய மக்கள் கட்சி – அதிமுக அணி 

Wednesday, 2 March 2011

IAS, IPS படிக்க Civil Services தேர்வு


UPSC

கனவை நினைவாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!


இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான நுழைவு தேர்வை 
மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான (IAS, IPS, IFS etc...) முதல் கட்ட நுழைவு தேர்வு Civil Services Preliminary Examination 2011 விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவையே நிர்வகிக்கும் முக்கிய அரசு பதவிகளுக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், கண்கானிப்பாளர் போன்ற பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். இந்த தேர்வை எழுதி வெற்றி பெறுவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும், காவல் துறை ஆணையராகவும், உள்துறை, உளவுத்துறை என இந்தியாவின் முக்கிய அதிகார பொருப்புகளில் அமர முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.

Wednesday, 9 February 2011

சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 4

to prove patriotism
சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 1 பகுதி - 2 பகுதி - 3

கல்வித் துறையில் - பள்ளிகளில் முஸ்லீம் விரோத போக்கு:
 
முஸ்லீம் விரோத போக்கு கல்வித் துறையில் தொற்றி இருக்கிறது என்பதை நினைக்கும் போது தான் மனம் மிகுந்த வேதனைப்படுகிறது. ஏற்கனவே பள்ளிகளில் வரலாற்று பாடங்களில் முஸ்லீம்களுடைய உண்மையான தேசபக்தியை வெளிகாட்டாமல் விட்டதில் ஆரம்பித்து, பல வரலாற்று நிகழ்வுகளை மறைத்தது வரை முஸ்லீம் விரோத போக்கை நடத்திக் காண்பித்ததை, நடத்திக் கொண்டிருப்பதை அனைவரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. 

Thursday, 3 February 2011

கோவலனா கேவலனா?கி.வீரமணி அவர்கள் பெரியாரோடு நெருங்கி பழகியவர். நன்றாக அரசியல் நாகரிகம் தெரிந்தவர். பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பின்னர் தி.கவில் இணைந்து பல வருடங்களாக பொது வாழ்க்கையில் இருந்து வருபவர். ஆசியாவிலேயே பெண்களுக்காக தனி பொறியியல் கல்லூரி ஆரம்பித்தவர், பின்னர் அதில் தொழில் நுட்ப பாடத்திட்டத்தையும் சேர்த்து பெண் பிள்ளைகள் தனியாக, சுதந்திரமாக, பாதுகாப்பாக படிப்பதற்கு வழிவகை செய்தவர். 

அந்த மகாகணம் பொருந்திய பெரியாரின் போர்வாள் அரசியல் கூட்டணியின் தர்மம் காக்க மக்களை முட்டாளாக்கும் நோக்கத்துடன் அறிக்கை விடுவது மனதிற்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. பெரியாரின் பாசறையில் வளர்ந்த வீரமணி பெரியார் அரசியலில் கடைப்பிடைத்த குறைந்தபட்ச நாகரிகத்தை கூட கடைபிடிக்கவில்லை. வரலாற்று சிறப்புமிக்க சிலப்பதிகாரத்தில் கூட கோவலன் கொல்லப்பட்ட பிறகு தான் கோவலன் தவறு செய்யவில்லை என்று தெரியவந்தது. ஆனால் ராசா கைது செய்யப்பட்டு இருக்கும் போதே, விசாரணை முழுவதுமாக முடியாத போதே ராசா கோவலன் போல் நிரபராதி என்று யாரோ பகுததறிவாளரான வீரமணிக்கு வெற்றிலையில் மை போட்டு சொல்லிவிட்டார்களோ என்று நினைக்க தோன்றுகிறது. 

Tuesday, 1 February 2011

சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 3சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 1 பகுதி 2  


நீதித்துறையின் முஸ்லீம் விரோத போக்கு: 

முஸ்லீம்கள் சந்தித்த பல வழக்குகளில் நிரபராதி என்று அறிவிக்கப்பட்ட பல அப்பாவிகள் சிறைச்சாலையிலேயே பல வருடங்கள் செய்யாத குற்றத்திற்கு விசாரணை கைதிகளாகவே தண்டனை அனுபவித்த கொடுமை (சிலர் சிறைச் சாலையிலேயே விசாரணை கைதியாகவே இறந்த கொடுமை) ஏராளம். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கைதானவர்கள் பலர் விசாரணை கைதிகளாகவே தங்களுடைய வாழ்க்கையை சிறையிலேயே கழித்தது உச்சகட்டம். ஏதாவது ஒரு பிரச்சனை, குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் பத்திரிக்கைக்கும், காவல் துறைக்கும் எப்படி செய்தி போகும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் இதைப் பற்றியெல்லாம் சிறிதும் யோசிக்காத நீதிமன்றங்கள் குற்றம் சுமத்தப்பட்ட அப்பாவிகளை விசாரணை கைதிகாளாகவே சிறையிலேயே காலம் தள்ளி தங்களின் விரோத போக்கை கடைபிடித்தனர். ஒரு சிறுபான்மை சமுதாயத்தின் இயக்கங்கள் தவறு செய்ததாக நிரூபிக்கப்படாத போதும் அதன் மீது குற்றம் சுமத்தப்பட்ட காரணத்திற்காக (உ.ம். simi) அந்த இயக்கத்தை பல தடவை தடை செய்த நீதிமன்றம், பெரும்பான்மை சமூகத்தின் இயக்கங்கள் தவறு செய்ததாக நிரூபிக்கப்பட்டாலும் அதனை தடை செய்வதில்லை. 

கோயம்புத்தூர் கலவரம், குஜராத் கலவரம், பாபர் மஸ்ஜிதை இடித்தது, அதை தொடர்ந்து வந்த கலவரங்கள், பாபர் மஸ்ஜித் தீர்ப்பு, மதானியின் தற்போதைய கைது, கைதிகளை தலைவர்களின் பிறந்த நாளின் போது விடுவித்தலில் பாரபட்சம் போன்ற விஷயங்கள் உட்பட நீதிமன்றங்கள் ஒரு தலைபட்சமாகவே செயல்படுகிறது என்பதை நடுநிலைமையாளர்கள் அறிவர். 

செப்டம்பர் 2010 16-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் 8 பேர் லஞ்சப் பேர்வழிகள்' என்கிற குற்றச்சாட்டை முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான சாந்திபூஷண் முன்வைத்தபோது, நாடே அதிர்ந்தது. 

Thursday, 27 January 2011

சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 2

சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 1 படிக்க

ஊடகத்துறையில் தீவிரவாத செயல்களை முஸ்லீம்கள் செய்தாலோ அல்லது முஸ்லீம்கள் செய்ததாக குற்றம் (பொய் குற்றம்) சாட்டப்பட்டாலோ வரிந்து கட்டிக் கொண்டு தங்களின் பத்திரிக்கை தர்மத்தை(?) காக்க போட்டி போட்டுக் கொண்டு செய்திகளை வெளியிடும் செய்தி ஊடகமும், காட்சி ஊடகமும் முஸ்லீம்கள் ஒரு நல்ல விஷயத்திற்காக போராடினால் அதை வெளியிடுவதில்லை. கடந்த காலத்தில் ஒரு அமைப்பு இட ஒதுக்கீட்டுக்காக போராட்டத்தை அறிவித்து வெற்றிக்கரமாக முடித்த வேளையில் அதை பற்றி செய்தி ஊடகத்திலோ அல்லது காட்சி ஊடகத்திலோ பெரிதாக பேசப்படாதது மட்டுமல்ல செய்தியாக கூட சொல்லாதது மனதிற்கு மிகவும் வருத்ததை அளிக்கிறது (அந்த ஊர் பதிப்பகத்தில் சில செய்தித்தாள்களில் வந்ததை தவிர). அதே போல் முஸ்லீம்களின் தலைவர் நபி(ஸல்) அவர்களை பற்றி யாரேனும் ஏதேனும் தவறாக கூறினால் அதை பரிசீலப்படுத்தாமல், முஸ்லீம் மக்கள் காயப்படுவார்களே என்று கூட நினைக்காமல் அப்படியே வெளியிட்டு தங்களின் முஸ்லீம் விரோத போக்கை அப்பட்டமாக சில செய்தி ஊடகங்கள் உலகுக்கு உணர்த்துகினறன. 

Wednesday, 26 January 2011

சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 1

 நடுநிலைமை(?)
இந்தியாவில் சுதந்தரம் அடைந்ததிலிருந்தே முஸ்லீம்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். அதிகமான காலங்களில் முஸ்லீம்கள் தங்களுடைய நாட்டின் மீதுள்ள பற்றை அடுத்தவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டும் நிரூபித்துக் கொண்டும் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

யாரோ ஒருவர், எங்கோ ஒருவர் திருடினால், கொலை செய்தால், வண்புணர்ச்சி செய்தால், மனைவியை துன்புறுத்தினால், விபச்சாரம் செய்தால், லஞ்சம் வாங்கினால், அடுத்த மதத்தவரிடத்தில் பகைமை கொண்டால், அவர்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தினால், குண்டு வைத்தால், திருட்டு டி.வி.டி விற்றால் அவர்களுடைய மதத்தை மறந்து அவர்களை மட்டும் வசைபாடும் இந்த சமுதாயம் மற்றும் மாஸ் மீடியா என்று சொல்லக்கூடிய அனைத்து ஊடகங்களும் அதே செயலை ஒரு முஸ்லீம் செய்தால் அவன் முஸ்லீம் என்ற காரணத்தினாலே அவனை மதத்தோடு தொடர்புபடுத்தி ஊடகங்களாலும், சமுதாயத்தாலும் வசைபாடப்படுவது நம் அனைவரும் அறிந்ததே.

சுதந்திர போராட்ட வீரத்தாய் - கரூர் நா. பியாரி பீபீஇந்தியாவின் விடுதலைப் போரில் இஸ்லாமியரின் பங்கு மகத்தானது.

நாடெங்கிலும் நடந்த ஆங்கிலேயரின் அடக்குமுறையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அல்லுற்றனர். காந்தி அடிகளின் அறைகூவலை ஏற்று சுதந்திர வேள்வியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏராளம். நேதாஜியின் இந்திய தேசீய இராணுவத்தில் பல இஸ்லாமிய தியாகிகள் தேச விடுதலைக்காகப் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர். தெருவில் இறங்கி ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்த லட்சக் கணக்கான தொண்டர்களை இந்த நாட்டு மக்களும் அரசும் மறந்து விட்டது.

எங்கேயோ வாழ்ந்து இறந்த விடுதலைப் போராட்ட தலைவர்களைப் பற்றிப் பேசி மகிழ்பவர்கள், தங்கள் வசிக்கும் உள்ளூரிலேயே இருக்கும் விடுதலை போராட்ட வீரர்களைப் பற்றியும் அவர்கள் பட்ட துன்பத்தையும் அவர்கள் செய்த தியாகத்தையும் அறியாமல் இருக்கின்றனர். அப்படிப்பட்ட இவர்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தில்லையாடி வள்ளியம்மை என்ற தமிழச்சி தென்ஆப்பிரிக்காவில் வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதை நாம் அறிவோம். இந்த நாடு அறியும்.

Tuesday, 11 January 2011

மருத்துவமனைகளும் பொறுப்பற்ற அரசு அதிகாரிகளும்


மருத்துவமனைகள் இருக்கும் இடத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை பற்றியும் அது எப்படி உதாசீனப்படுத்துகிறது என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம். 

மருத்துவமனை என்பது நம் வீட்டை விட சுத்தமாக இருக்க வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள், தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் என்று அனைவரும் இருக்கும் இடத்தில் ஒட்டுதல் (infection) ஆகாமல் இருக்க என்ன வழி என்பதை அறிந்து அதன்படி செய்லபட வேண்டும். இன்று பல மருத்துவமனைகள் வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இயங்குவதால் அவர்களுக்கு இதன் மீதெல்லாம் கவனம் செலுத்த நேரமில்லை/ தோணவில்லை. 

Monday, 10 January 2011

நைனா! படா உஷாராக்கீனும் (எச்சரிக்கியா இருக்கனும்) - பகுதி - 2

ஏர்போர்ட் கார் பார்கிங் - பழைய போட்டோ 
சென்னை விமான நிலையத்தில் பிச்சை

சென்னைவிமான நிலையத்தில் விரிவாக்க பணிகளால் புறப்பாட்டுக்கும், வருகைக்கும் ஒருபக்க நுழைவாயில் (வெளியே) வைத்ததின் காரணத்தால் விமான நிலையத்தில் இருந்து டிராலியை தள்ளிக் கொண்டு வண்டியருகே வருவது மிகவும் சிரமமாகி விட்டது. ஒருபக்கம் தொடந்து வரும் வண்டிகள், மறுபக்கம் மக்களின் கூட்டம் மற்றும் மழை என்று மிகுந்த சிரமத்தோடு வண்டியை வந்தடைந்தோம். எங்களை தொடந்து கொண்டே வந்த ஒரு நபர் “தான் ஏர்போர்ட்டில் வேலை செய்வதாகவும், எங்களுடைய பொருட்களை (luggages) தான் விமானத்திலிருந்து இறக்க உதவி செய்ததாகவும், தனக்கு ஏதாவது தரும்படியும் (பிச்சை – லஞ்சம்) எங்களிடம் கேட்டார். நான் அவரிடம் உங்களுக்கு ஏன் நாங்கள் பணம் தர வேண்டும், தர முடியாது என்று கடுமையாக சொல்லி விட்டேன். சார் நான் அப்படி கேட்கலை, நீங்க பார்த்து ஏதாவது கொடுங்க (பிச்சை போடுங்க) என்று கேட்டார், நான் இறுதிவரை தர முடியாது என்று கூறியவுடன், சார் நான் கஸ்டம்ஸிலிருந்து வருகிறேன். அவர்கள் தான் என்னை உங்களிடம் அனுப்பினார்கள் என்று தைரியமாக கூறினான். நான் இந்த தடவை மிகவும் சாதரணமாக கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் நாங்கள் கஸ்டம்ஸை தான் கடந்து வந்திருக்கிறோம், ஒன்றும் தர முடியாது என்று கூறியவுடன், நீங்கள் எப்படி செல்கிறீர்கள் என்று நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தெனாவெட்டாக எங்களிடம் சவால் விட்டு அடுத்த மகிழ்வுந்தை நோக்கி ஓடினான். 

Thursday, 6 January 2011

அமீரக அடையாள அட்டை - ஒரு கற்பனை

அமீரக அடையாள அட்டை (என்னுதில்லை)
தற்போது அமீரகத்தில் எல்லோரும் அடையாள அட்டை எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். அபுதாபி போன்ற நகரங்களில் கார், பைக் லைசன்ஸ் எடுப்பதற்கு, விசா புதிப்பதற்கு கூட அடையாள அட்டை தேவையென சொல்லியிருப்பதால் மக்கள் அடையாள அட்டை எடுப்பதற்கான மையங்களை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்து அங்கேயே குடும்பம் நடத்தாத குறையாக காத்து கிடந்தனர். அடையாள அட்டை எடுப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 30 2011 என்று மாற்றிய பிறகு தான் மக்களிடத்தில் டென்ஷன் குறைந்து போனது. 

அப்படி அமீரக அடையாள அட்டையில் என்ன விபரங்கள் இருக்கும், நம்முடைய பாஸ்போர்ட் விபரங்கள், விசா விபரங்கள், நம்முடைய ஸ்பான்ஸர் பெயர், கம்பெணி பெயர், கார், பைக் இருந்தால் – அதனுடைய விபரங்கள், நம்முடைய அலுவலக, இருப்பிட முகவரி, மற்றும் தொலைபேசி எண்கள், கைபேசி எண், நம்முடைய வங்கி கணக்கு என்று நம்முடைய முழு விபரங்களும் அதில் இருக்கும். 

தமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 தேர்வுகள்

TNPSC Office
IAS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆனையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. பட்டம் படித்த யாரும் இந்த தேர்வை எழுதலாம்.

Wednesday, 5 January 2011

நைனா! படா உஷாராக்கீனும் (எச்சரிக்கியா இருக்கனும்) - பகுதி - 1


இந்த தடவை short vocation 15 நாட்கள் விடுப்பு எடுத்து பக்ரீத்தை குடும்பத்துடன் கொண்டாட எண்ணி நானும் என் நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஒரே நாளில் ஊருக்கு விமான சீட்டு (Emirates Airlines இல் ) எடுத்தோம். விமான சீட்டு எடுத்ததிலிருந்து மனம் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகிவிட்டது. ஒரு வழியாக இங்கு (அமீரகத்தில்) பக்ரீதை கொண்டாடி விட்டு மதியம் 2:45 மணிக்கு விமானம் புறப்பட மனம் முழுவதும் வீட்டை நோக்கியே இருக்க மூவரும் அன்று இரவு சந்தோஷமாக சென்னை விமான நிலையத்தை அடைந்தோம். எல்லா வேலையும் (Emigration, Baggage Collection) முடித்துக் கொண்டு கஸ்டம்ஸ் அதிகாரியிடம் கஸ்டம்ஸ் சீட்டை கொடுத்த போது அவர் எங்களுடைய பொருட்களை scan செய்து விட்டு சுமார் 15 முஸல்லா (தொழுக பயன்படும் துணியினால் ஆன விரிப்பு) உள்ள ஒரு பெட்டியை (நண்பனுடையது) மட்டும் மறுபடியும் தனியாக scan செய்ய வேண்டும் என்று கூறி இன்னொரு அதிகாரியிடம் அனுப்பினார். 

Sunday, 2 January 2011

இன்றைய அரசியல் ஒரு பார்வை


ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுதல் தொடரும் அப்படின்னு புரிஞ்சுக்கலாமா?


ஊருக்குள்ள பிரச்சனைன்னா நாட்டாம்மைக்கிட்ட போவோம், ஆனால் அந்த நாட்டாம்மைக்கே பிரச்சனைன்னா??


எந்த வெற்றின்னு உடன் பிறப்புகளுக்கு சொல்லிடுங்க, ஊழல் வெற்றின்னு தவறா புரிஞ்சிக்கப் போறாங்க

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...