Wednesday, 9 February 2011

சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 4

to prove patriotism
சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 1 பகுதி - 2 பகுதி - 3

கல்வித் துறையில் - பள்ளிகளில் முஸ்லீம் விரோத போக்கு:
 
முஸ்லீம் விரோத போக்கு கல்வித் துறையில் தொற்றி இருக்கிறது என்பதை நினைக்கும் போது தான் மனம் மிகுந்த வேதனைப்படுகிறது. ஏற்கனவே பள்ளிகளில் வரலாற்று பாடங்களில் முஸ்லீம்களுடைய உண்மையான தேசபக்தியை வெளிகாட்டாமல் விட்டதில் ஆரம்பித்து, பல வரலாற்று நிகழ்வுகளை மறைத்தது வரை முஸ்லீம் விரோத போக்கை நடத்திக் காண்பித்ததை, நடத்திக் கொண்டிருப்பதை அனைவரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. 


Thursday, 3 February 2011

கோவலனா கேவலனா?கி.வீரமணி அவர்கள் பெரியாரோடு நெருங்கி பழகியவர். நன்றாக அரசியல் நாகரிகம் தெரிந்தவர். பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பின்னர் தி.கவில் இணைந்து பல வருடங்களாக பொது வாழ்க்கையில் இருந்து வருபவர். ஆசியாவிலேயே பெண்களுக்காக தனி பொறியியல் கல்லூரி ஆரம்பித்தவர், பின்னர் அதில் தொழில் நுட்ப பாடத்திட்டத்தையும் சேர்த்து பெண் பிள்ளைகள் தனியாக, சுதந்திரமாக, பாதுகாப்பாக படிப்பதற்கு வழிவகை செய்தவர். 

அந்த மகாகணம் பொருந்திய பெரியாரின் போர்வாள் அரசியல் கூட்டணியின் தர்மம் காக்க மக்களை முட்டாளாக்கும் நோக்கத்துடன் அறிக்கை விடுவது மனதிற்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. பெரியாரின் பாசறையில் வளர்ந்த வீரமணி பெரியார் அரசியலில் கடைப்பிடைத்த குறைந்தபட்ச நாகரிகத்தை கூட கடைபிடிக்கவில்லை. வரலாற்று சிறப்புமிக்க சிலப்பதிகாரத்தில் கூட கோவலன் கொல்லப்பட்ட பிறகு தான் கோவலன் தவறு செய்யவில்லை என்று தெரியவந்தது. ஆனால் ராசா கைது செய்யப்பட்டு இருக்கும் போதே, விசாரணை முழுவதுமாக முடியாத போதே ராசா கோவலன் போல் நிரபராதி என்று யாரோ பகுததறிவாளரான வீரமணிக்கு வெற்றிலையில் மை போட்டு சொல்லிவிட்டார்களோ என்று நினைக்க தோன்றுகிறது. 


Tuesday, 1 February 2011

சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 3சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 1 பகுதி 2  


நீதித்துறையின் முஸ்லீம் விரோத போக்கு: 

முஸ்லீம்கள் சந்தித்த பல வழக்குகளில் நிரபராதி என்று அறிவிக்கப்பட்ட பல அப்பாவிகள் சிறைச்சாலையிலேயே பல வருடங்கள் செய்யாத குற்றத்திற்கு விசாரணை கைதிகளாகவே தண்டனை அனுபவித்த கொடுமை (சிலர் சிறைச் சாலையிலேயே விசாரணை கைதியாகவே இறந்த கொடுமை) ஏராளம். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கைதானவர்கள் பலர் விசாரணை கைதிகளாகவே தங்களுடைய வாழ்க்கையை சிறையிலேயே கழித்தது உச்சகட்டம். ஏதாவது ஒரு பிரச்சனை, குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் பத்திரிக்கைக்கும், காவல் துறைக்கும் எப்படி செய்தி போகும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் இதைப் பற்றியெல்லாம் சிறிதும் யோசிக்காத நீதிமன்றங்கள் குற்றம் சுமத்தப்பட்ட அப்பாவிகளை விசாரணை கைதிகாளாகவே சிறையிலேயே காலம் தள்ளி தங்களின் விரோத போக்கை கடைபிடித்தனர். ஒரு சிறுபான்மை சமுதாயத்தின் இயக்கங்கள் தவறு செய்ததாக நிரூபிக்கப்படாத போதும் அதன் மீது குற்றம் சுமத்தப்பட்ட காரணத்திற்காக (உ.ம். simi) அந்த இயக்கத்தை பல தடவை தடை செய்த நீதிமன்றம், பெரும்பான்மை சமூகத்தின் இயக்கங்கள் தவறு செய்ததாக நிரூபிக்கப்பட்டாலும் அதனை தடை செய்வதில்லை. 

கோயம்புத்தூர் கலவரம், குஜராத் கலவரம், பாபர் மஸ்ஜிதை இடித்தது, அதை தொடர்ந்து வந்த கலவரங்கள், பாபர் மஸ்ஜித் தீர்ப்பு, மதானியின் தற்போதைய கைது, கைதிகளை தலைவர்களின் பிறந்த நாளின் போது விடுவித்தலில் பாரபட்சம் போன்ற விஷயங்கள் உட்பட நீதிமன்றங்கள் ஒரு தலைபட்சமாகவே செயல்படுகிறது என்பதை நடுநிலைமையாளர்கள் அறிவர். 

செப்டம்பர் 2010 16-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் 8 பேர் லஞ்சப் பேர்வழிகள்' என்கிற குற்றச்சாட்டை முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான சாந்திபூஷண் முன்வைத்தபோது, நாடே அதிர்ந்தது. Template by - Abdul Munir | Daya Earth Blogger Template