Monday, 23 May 2011

தலைவலியும் காய்ச்சலும் (கனிமொழியும் ஸ்பெக்ட்ரமும்)

கோவையில் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்ட பின் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட, முழுக்க முழுக்க காவல்துறையின் தலைமையில் நடத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தில் பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். பல கோடி முஸ்லீம்களின் சொத்துக்கள் நாசமாகின. ஆனால் கலவரத்தை தடுக்க வேண்டிய காவல்துறையோ கை கட்டி நின்று வேடிக்கை பார்த்தது. சமுதாய மக்கள் கொத்து கொத்தாக மடிந்ததை பார்த்து அகமகிழ்ந்தது. 


Sunday, 22 May 2011

நர்ர்ரேந்திர ஜெ..! (மெளனம் ஆன நம் உணர்வுகள்)


இதை நான் எழுதவில்லை, ஆனால் இவர் எழுதியது போன்ற ஆயிரக்கணக்கான கேள்விகள் என்னில் எழாமல் இல்லை. அது எழுத்தில் வராமல் போக, என்னுடைய நண்பர் முஹம்மத் ஆஷிக் அவர்கள் எழுதிய பதிவை உங்களுடன் பகிர்கிறேன்.

அந்த பதிவு இதோ.... 

செல்வி.ஜெயலலிதா, தன்னை ஒரு அப்பட்டமான "பாஸிச வெறி கொண்ட, ஆர்.எஸ்.எஸ். அபிமான, தீவிர ஹிந்துத்வா அரசியல்வாதி" என அவ்வப்போது அடையாளம் காட்டிக்கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை என்றுமே தவற விட்டது இல்லை...! அதுதான் ஜெ..!


Wednesday, 18 May 2011

+2 முடித்த மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?


+2 அடுத்தது என்ன?
+2 தேர்வு முடிவுகள் வந்து விட்டன, பல மாணாக்கர்கள் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி தெளிவான சிந்தனையோடு இருந்தாலும் சிலருக்கு துறையை தேர்ந்தெடுப்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாதது வருத்தத்திற்குரியதே. வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது என்று ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் விதமாக பல இயக்கங்கள், கழகங்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற ஆரோக்கியமான கருத்தரங்கங்களை நடத்தினாலும் அது எல்லா இடத்திலேயும், எல்லா மாணாக்கர்களிடேயேயும் போய் சேறுகின்றதா என்று கேட்டால், நம்மால் 100 சதிவிகிதம் பாஸிட்டிவான பதிலை சொல்ல முடியவில்லை. 


Monday, 16 May 2011

+2 முடிச்சாச்சு அடுத்தது என்ன? பொறியியல் மற்றும் மருத்துவத்துறை

அடுத்தது என்ன?
வந்தாச்சு +2 ரிசல்ட். பாஸ் செய்திருப்பவர்களின் அடுத்த இலக்கு பொறியியல் அல்லது மருத்துவப் படிப்புதான். பெற்றோர்களின் எதிர்கால கனவுளை நனவாக்கத் தயாராகும் மாணவர்களுக்கு கவுன்சலிங்தான் முதல் படிக்கல்.
இடம் கிடைக்குமா? என்ன கோர்ஸ்? எந்தக் கல்லூரியில் சேரலாம் என்கிற டென்ஷன்.


Tuesday, 10 May 2011

ஓ.! பயங்கரவாத சைத்தானே.! உலகம் இன்னும் உன்னை நம்புதேடா..!


ஜப்பான்- ஹிரோஷிமா- 1945- ஆகஸ்ட்-6 காலை 8.15.

அன்றுதான்... அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும், கலாச்சாராத்திலும், கல்வியிலும் முன்னேறிய... அமெரிக்கா என்ற உலக மக்கள் விரும்பும் ஒரு அதி புத்திசாலி நாடு, இந்த நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் அப்பாவி மக்கள் மண்டையில் அணுகுண்டு போட்டு மனிதம் இழந்து பயங்கரவாதி ஆன நாள்..! அந்த அணுகுண்டிற்கு அது ஜாலியாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (little boy). அன்று அந்த ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 அப்பாவி பொதுமக்கள் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள். சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக ஒன்றுமின்றி முற்றாக அழிந்தது.


இவ்வளவு பெரிய நாசத்தை கண்டு விட்டு, கதிகலங்கி உலகமே நிலை குலைந்து திக்பிரமை பிடித்து செயலற்று நெஞ்சு விம்ம துக்கத்தில் இருக்க, ஜப்பனோ... என்ன செய்வது என்றே புரியாமல் அப்படியே உறைநிலையில் சிலையாகிக் கிடக்க... மூன்று நாட்கள் கழித்து...

ஜப்பான்- நாகசாகி- 1945- ஆகஸ்ட்-9.

0.0000000000....1% கூட மனிததன்மையோ, குற்ற உணர்ச்சியோ... இன்னும் மனிதன் என்றால் அவனிடம் குறைந்த பட்சம் என்ன என்ன தன்மைகள் எல்லாம் இருக்க வேண்டுமோ அதெல்லாம் எதுவுமே இல்லாத ஒரு சாத்தானாய்... "உலகத்தின் அதிகாரபூர்வ பயங்கரவாதி-அமெரிக்கா" மீண்டும் இங்கே இன்னொரு அணுகுண்டை போட்டான். முன்பை விட இங்கே அழிவு கூட இருக்க வேண்டும் என்று ‘குண்டு மனிதன்’ (fat man) என தெனாவட்டாய் இதற்கு பெயரும் இட்டான். அதன் தீ ஜுவாலை மேகத்தை தாண்டி, குண்டு போட்ட விமானத்தின் உயரத்தையும் கூட தாண்டியது..! 74,000 அப்பாவி பொதுமக்கள் நாகசாகியில் நாசமாகினர்.


மனித வரலாற்றில் நினைத்தும் பார்த்திராத இந்த அகோர குண்டு வீச்சுகள் மூலம் ஏற்பட்ட மனித இறப்பும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. குண்டு விழுந்த பிறகு வருடக்கணக்காக மக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். கதிர்வீச்சு பாதிப்புகள் இன்றும் தலைமுறையாக தலைமுறையாக தொடர்கிறது.Template by - Abdul Munir | Daya Earth Blogger Template