Saturday, 23 July 2011

பணம் பண்ணலாம் வாங்க - ஒரு உற்சாகத் தொடர் - பகுதி - 3

போன பதிவில் விடா முயற்சி, மற்றும் கடும் உழைப்பை பற்றியும் பார்த்தோம். இந்த பகுதியில் சரியான திட்டமிடல் பற்றி எனக்கு தெரிந்த விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இன்று பலரும் தொழில் செய்ய ஆர்வப்பட்டு என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்திருக்கையில் எல்லோருக்கும் தோன்றுவது அந்த ஊரிலேயே இலாபம் தரக்கூடிய தொழில் எது என்று கூர்ந்து கவனித்து அந்த தொழிலை ஆரம்பிப்பது. இப்படி பார்த்து மட்டும் தொழிலை ஆரம்பிக்க கூடாது. 


தொழில் தொடங்கும் போது யோசிக்க வேண்டியது


  • ஆரம்பிக்கும் தொழிலை பற்றிய நுன்னறிவு நம்மிடம் இருக்கிறதா? 
  • தொழிலை ஆரம்பிக்க தேவையான பணம் மற்றும் தகுந்த இடம் போன்றவை கைவசம் இருக்கிறதா? 
  • இந்த தொழிலில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? 
  • தொழில் ஆரம்பிக்கும் முன் ஏதெனும் தடங்கள் வந்தால் வேறு தொழில் செய்வதற்கான மாற்று சிந்தனை. 
  • தொழிலில் மேற்கொண்டு முதலீடு ஏதேனும் செய்ய வேண்டுமானால் அதற்கு தேவையான பணம் நம்மிடத்தில் இருக்கிறதா? 
  • செய்யும் தொழிலில் எந்த ஆள் துணை இல்லாமல் இருந்தாலும் தன்னால் மட்டும் கூட அந்த தொழிலை நடத்த முடியுமா? என்று ஆராய்வது மிக முக்கியம். உதாரணத்திற்கு ஹோட்டல் வைத்து நடத்துபவர்கள் திடிரென்று புரொட்டா மாஸ்டர் ஹோட்டலுக்கு வராமல் விடுப்பு எடுத்தாலோ அல்லது வேலையை விட்டு நின்றாலோ முதலாளிக்கு புரோட்டா போட தெரிந்திருக்க வேண்டும். (இது எல்லா தொழிலுக்கும் ஒத்துவராது, சொல்லவந்தது தொழிலை பற்றிய அறிதல் வேண்டும்) 


Thursday, 21 July 2011

Drunken Drive - ஒழிக்க என்ன வழி?

Dont drunk & Drive
தமிழ்நாட்டில் விபத்துகள் அதிமாகி கொண்டே வருகின்றன. அதை பற்றி தேவையான அளவு பல பதிவர்கள் எழுதியும் விவாதித்தும் விட்டார்கள். Drunken Drive என்று சொல்லக்கூடிய மது குடித்துவிட்டு போதையில் வண்டி ஓட்டுவது கூடாது என்று மோட்டார் வாகன சட்டம் கூறுகிறது. 


Wednesday, 20 July 2011

பணம் பண்ணலாம் வாங்க - ஒரு உற்சாகத் தொடர் - பகுதி - 2

முந்தைய பதிவுகள் : பதிவு - 1

போன பதிவில் ஜித்தாவில் ஒரு பெண்மனி எப்படி தொழில் செய்ய கற்றுக் கொண்டு கணவனுக்கு உறுதுணையாய் இருந்து வாழ்வில் முன்னேறினார் என்று பார்த்தோம். இந்த பதிவிலும், இன்னும் தொடரும் பதிவிகளிலும் தொழில் பற்றிய எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன். 

நம்மில் பெரும்பாலோர் தொழில் செய்வதில் அதிகம் ஆர்வம் செலுத்துவதில்லை. ஏனெனில் தொழில் செய்வதில் சாதகங்கள் இருப்பது போல் பாதகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கொஞ்சம் உஷாராக இல்லாது போனால் முதலுக்கு மோசம் வரும் சூழ்நிலைதான். 


Tuesday, 19 July 2011

பணம் பண்ணலாம் வாங்க - ஒரு உற்சாகத் தொடர்

நடுத்தர வயதுடைய ஒரு குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி, ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்கல்வி மட்டுமே படித்திருந்த தன் மனைவியிடம் ஒருநாள், “திடீரென்று நான் மௌத்தாயிட்டா நீ என்ன செய்வே?” என்று கேட்க, பதறிப் போனார் மனைவி!

“ஏன் இப்படி அமங்கலமாப் பேசுறீங்க?” என்று அவர் பாசத்துடன் கடிந்துகொள்ள, மனைவியை சமாதானப் படுத்திய அவர், மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்!

“மௌத் மனிதனுக்கு எந்த நேரத்திலும் நேரலாம்… அதை எதிர்கொள்ள ஒரு முஸ்லிம் எல்லா வகையிலும்- எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் …குடும்பார்த்தக் கடமைகளை ஒத்தி போடாமல், முடிந்தவரை முடித்துக் கொள்ள வேண்டும் …நம்முடைய தொழிலை உருவாக்க நான் பட்ட கஷ்டத்தை நீ அறிவாய் ! அந்தத் தொழில் எனக்குத் திடீரென ஏதாவது நிகழ்ந்துவிட்டாலும் தொடர்ந்து நடக்க வேண்டும்! திறம்பட நிர்வகிக்கப் பட வேண்டும் – அதனால்தான் கேட்கிறேன்… அப்படியான ஒரு சந்தர்ப்பம் நேரிட்டால், நீ என்ன செய்வாய்?”Template by - Abdul Munir | Daya Earth Blogger Template