Thursday 19 January 2012

IIT IIM மாணவர்களின் விந்தனு தேவை - கலாச்சார சீரழிவு

சமீபத்தில் வெளியான செய்தி கண்டு கொதிப்படைந்தேன். 

அது IIT IIM போன்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் விந்தனு தேவப்படுகின்றது என்ற வினோதமான விளம்பரம். அதில் அந்த விந்தனுவிற்கு 20,000 ரூ வரை தருவதாகவும், தங்களுடைய கைப்பேசி எண், மற்றும் தங்களின் மின்னஞ்சல் முகவரி முதற்கொண்டு கொடுத்து அந்த விளம்பரத்தை கொடுத்திருக்கிறார்கள். இதில் வேதனை என்னவென்றால் இது கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு என்பது தான். 

நாடும் நடப்பும் - பகுதி 1

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் குறுகிய விடுமுறையில் (70 நாட்கள்)  இந்தியா சென்று திரும்பியதால் நான் கண்டவை / ரசித்தவை / பாதித்தவை மற்றும் என்னை பாதித்தவைகளை பற்றி . 

விண்ணை முட்டும் விலைவாசி

Courtesy : news.vikatan.com
ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும் போதும் விலைவாசி நினைத்து கொஞ்சம் இருப்பை அதிகம் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து போன தடவை சிலவுக்காக ஒதுக்கிய நிதியை விட ஒவ்வொரு தடவையும் அதிகம் எடுத்து சென்றாலும் அதையும் தாண்டி இருக்கும் சிலவுகளை பார்க்கும் போது எப்படி நாம் ஊரில் வந்து செட்டில் ஆக போகிறோம் என்று மலைக்க தோன்றுகிறது. ஆனால் ஊரிலேயே வியாபாரம் செய்யும் சிலரோ சந்தோஷமாக கிடைக்கும் வருமானத்தை வைத்து சிலவு செய்வதை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. ஆம் அதில் ஒரு பேருண்மை இருக்கிறது, அதாவது ஊரிலேயே இருக்கும் பலர் வீண் அநாவசிய சிலவுகள் செய்வதில்லை, நாம் தான் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என்று வீண் சிலவுகள் செய்து கையை கடித்துக் கொள்கிறோம். 

Wednesday 18 January 2012

இஸ்லாம் Vs கிறிஸ்தவம் விவாதம் - ஜனவரி 21, 22 தேதிகளில் ...

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பின் சகோதர சகோதரிகளே, 

இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் ஜெர்ரி தாமஸ் தலைமையிலான கிறிஸ்தவ அறிஞர்கள் Vs ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான இஸ்லாமிய அறிஞர்களுக்குமிடையே நடக்கின்ற நேரடி விவாதம் ஆன்லைன்பிஜே இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். 

விவாத தலைப்புக்கள் மற்றும் தேதி விவரம்:

21, 22 தேதிகளில்"பைபிள் இறை வேதமா" என்ற தலைப்பில் விவாதம் நடைபெறும்.

28, 29 தேதிகளில் "குர்ஆன் இறைவேதமா" என்ற தலைப்பில் விவாதம் நடைபெறும்.

இந்த விவாதம் உடனுக்குடன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நடத்தப்படுவதால் தமிழல்லாத பிற மொழி மக்களும் பார்க்கலாம். (கிறிஸ்தவ அறிஞர் சகோ. ஜெர்ரி தாமசுக்கு தமிழ் தெரியாது. சகோ. பீஜே க்கு ஆங்கிலம் தெரியாது. எனவே இரண்டு பக்கமும் மொழி பெயர்ப்பாளர்கள் இருப்பார்கள்)

பாருங்கள், பாக்க தூண்டுங்கள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...