Sunday, 12 February 2012

காங்கிரஸின் இட (வாக்கு) ஒதுக்கீடு


நாட்டில் மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மை சமுதாயத்தினரை முன்னேற்றும் விதமாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை சிறுபான்மையினருக்கு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது என்று 23 டிசம்பர் தேதி நாளிட்ட செய்திகளில் வந்துள்ளது அனைவரும் அறிந்ததே. Thursday, 9 February 2012

கதீஜா

நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை

கதீஜா

அன்று ஞாயிற்று கிழமை, வீட்டை ஒழுங்குப்படுத்தலாம் என்று எண்ணி கதீஜா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். கதீஜா, வயது 35, BCom பட்டதாரி, ஒரு சின்ன பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து விட்டு தற்போது வீட்டை மட்டும் கவனித்து கொண்டிருக்கிற சாதாரண குடும்ப பெண்மணி. ஒரு ஆண் பிள்ளை, 9 வது படிக்கிறான், கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். ரொம்ப நாட்களாக ஒரு அட்டை பெட்டியில் பொருட்கள் இருப்பது கண்டு அதை பரணில் போடலாம் என எண்ணி ஒரு நாற்காலியின் மேல் ஏறி பெட்டியை பரணில் வைக்கும் போது ‘பொத்’ என்று பேலன்ஸ் இல்லாமல் கீழே விழ தலையில் சிறிது அடிபட்டு பின்னர் தைலம் தடவி தலைவலி இல்லாமல் போனது. பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு இதே போல் தலைவலி வர இந்த தடவை மாத்திரை போட்டு தலைவலியை போக்கினார். அதன் பிறகு வலியை பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. 10 நாட்கள் கழித்து மறுபடியும் தலைவலி வரவே பயந்து போய் மருத்துவமனைக்கு சென்று MRT ஸ்கேன் எடுத்து பார்த்த பிறகு டாக்டர் சொன்ன செய்தி கேட்டு ஒரு நிமிஷம் என்ன செய்வதென்றே தெரியாமல் வித்தியாசமான மன ஓட்டத்தில் அதிரிச்சியாகி விட்டார். 


Tuesday, 7 February 2012

சீரியல்களா? சீரழிவுகளா?நம் தமிழ்நாட்டு கலாச்சாரம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து வருவதை நாம் அறிகிறோம். கட்டிய கனவனை விட்டு மற்றவனோடு வாழும்/ ஓடும் பெண்களையும், கட்டிய பெண்டாட்டியை மதிக்காமல் திமிறாக ஓபனாகவே சின்ன வீடு வைத்துக் கொள்ளும் கனவன்மார்களையும் நாம் நித்தம் செய்தித்தாள்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இறுதியில் இது எங்கு போய் முடியுமா என்று பயப்படும் அளவிற்கு போய்விட்டது. 

அதிலும் திருமணமாகாத இளம்பெண்கள் கர்ப்பமாவதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் இன்று சர்வ சாதரணமாகி விட்டது (திருமணத்திற்கு முன்பு பாலுறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று சொன்ன குஷ்புவை தான் வெளியில் விட்டுவிட்டார்களே). சமீபத்தில் பரவியிருக்கும் Living Together கலாச்சாரம் நம்முடைய இந்திய கலாச்சாரத்திற்கு ஒரு மணிமகுடம். திருமணமாகாத கல்லூரி பெண்கள் கர்ப்பமாவது என்ற காலம் தொடங்கி இப்போது பள்ளிப் பெண்களும் கர்ப்பமாகிக் கொண்டிருப்பது நம் அனைவரையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. 


Sunday, 5 February 2012

துன்பங்கள் சூழ்ந்தது தான் வாழ்க்கை


நாமெல்லாம் ஒரு சாதரண பிரச்சணை என்றாலே மனம் உடைந்து என்ன செய்வது என்று கவலைப்பட்டு கொண்டிருப்போம். ஆனால் சிலர் என்ன பிரச்சனை நடந்தாலும் வாழ்க்கை சென்று கொண்டு தான் இருக்கும் என்று மனதை திடப்படுத்தி கொண்டு தைரியமாக இருப்பர், அப்படி ஒரு நண்பரை இந்த தடவை விடுப்பில் இந்தியா சென்றிருக்கும் போது சந்தித்தேன். இந்த விடுப்பில் என்னுடைய குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நலக் குறைவால் 5 நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனக்கோ பயங்கர வருத்தம். விடுப்பில் இருக்கும் போது மருத்துவமனையில் வந்து தங்கி இருக்கிறோமே என்று வருந்தி இறைவனிடம் சீக்கிரம் வீட்டிற்கு செல்ல பிராத்தித்து கொண்டு இருந்தேன். அப்போது ஒரு மாற்று மத சகோதரர் குங்குமம் வார இதழ் படித்துக் கொண்டிருந்தார். அவருடன் பேச்சு கொடுத்தேன். எந்த ஊர், என்ன தொழில் புரிகிறீர்கள் என்பது போன்ற பரஸ்பர விசாரிப்புகளுக்கு அவர் சொன்ன செய்தி இதோ.


Template by - Abdul Munir | Daya Earth Blogger Template