Wednesday 19 November 2014

வியாபாரம் பாரமா - ஒரு உற்சாக தொடர் - பகுதி - 3


அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்! - அல் குர்ஆன் 2:42


தொழில் செய்யும் இடத்தில் அரட்டை கூடாது:


சிலர் தொழில் செய்யும் இடத்தில் வீண் அரட்டை, அரசியல் என்று சகலமும் பேசுவார்கள். அவர்கள் கடையில் எப்போதும் ஒரு வெட்டி ஆஃபிஸர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இப்படி இருந்தால் தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியாது. அரட்டை அடிக்கும் அப்பாடக்கர்கள், வேலை இல்லாத வெட்டி ஆஃபிஸர்களுக்கு பொழுது கழிக்க வேறு இடம் இல்லாததால் அவர்கள் உங்கள் கடையை நோக்கி வருகிறார்கள். முகதட்சனை பார்க்காமல் இங்கு கடை வியாபாரத்தை கெடுக்க வேண்டாம் என்று சொல்லி உங்கள் நண்பர்களுக்கு பறிய வையுங்கள். 
no chat

இப்படி எந்நேரமும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருந்தால் உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்து கொண்டே வருவார்கள்; எப்படி? 

Monday 17 November 2014

வியாபாரம் பாரமா - ஒரு உற்சாக தொடர் - பகுதி - 2



அனுபவம் இல்லாத தொழிலை செய்ய கூடாது:

அனுபவம் இல்லாத வேலையை ஆரம்பிக்க கூடாது. உதாரணத்திற்கு நீங்கள் ஹோட்டல் வைத்தால் உங்களுக்கு புரோட்டாவும் போடத் தெரிய வேண்டும், டீயும் போடத் தெரிய வேண்டும். டீ / புரொட்டா மாஸ்டர் வரவில்லையென்றால் களத்தில் இறங்கி வேலை செய்வதற்கு கேவலமாக எண்ணவும் கூடாது. இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் டீ / புரோட்டா மாஸ்டர்களிடம் கடினமாக நடந்து கொண்டால் / அல்லது அவர்கள் திடீரென்று நோய்வாய்பட்டால் நாம் வேலை செய்ய கற்றிருந்தால் தான் அன்று கடை திறந்திருக்கும். இல்லையேல் கடையை அடைத்து விட்டு வீட்டில் தான் உட்கார்ந்து இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு தொழில் செய்ய ஆசையாக இருக்கிறது, ஆனால் உங்களுக்கு அதில் அனுபவம் இல்லையென்றால் சென்னை போன்ற நகரங்களில் அந்த தொழில் செய்யும் கூடத்தில் ஒரு 6 மாதம் வேலை செய்து தொழிலை கற்று கொண்டு, நெளிவு சுளிவுகளை தெரிந்து கொண்டு தொழிலை ஆரம்பிப்பது நல்லது. இன்று பலர் தொழிலாளிகளை நம்பி தொழிலை ஆரம்பிக்கின்றனர், ஆனால் அந்த நம்பிக்கைக்குரிய தொழிலாளி தன்னுடைய கடையை விட்டு போனவுடன் செய்வதறியாது திகைக்கின்றனர்.

Sunday 16 November 2014

கல்வி முதலீடா

அஸ்ஸலாமு அலைக்கும்.

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நேரத்திலேயும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேரத்திலேயும், அதில் எடுத்த மதிப்பெண்கள் பற்றியும், அதில் தேறிய தவறிய மாணவ மாணவிகள் பற்றியும், தேர்ச்சி சதவிகிதம் பற்றியும் ஒரே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில் நாம் நம்முடைய குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வியை வழங்குகிறோமா? நம்முடைய அடுத்த சந்ததிகளை சரியான முறையில் வழி நடத்துகிறோமா என்று கேட்டால் பெரும்பாலான இடங்களில் அது நேருக்கு மாறாகவே இருக்கிறது. உண்மையான கல்வி என்பது பொய்த்து போய் இன்று பலருக்கும் சங்கடம் தரும் கல்வியாகவே மாறி வருகிறது. இதற்கு பெருகி வரும் கல்வி கூடங்களும், தன் மகனும் / மகளும் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரியில் சேர வேண்டும் என்பது மட்டுமே காரணமாக இருக்கிறது. என்னது என் மகன் / மகள் நல்ல மதிப்பெண் பெறுவது என்பது என் மகன் / மகளுக்கு செய்யும் துரோகமா? என்று நீங்கள் கேட்டால் பெரும்பாலான இடங்களில் அது துரோகமாக தான் இருக்கிறது.

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...