Tuesday, 13 October 2009

ஹிஜாப்





இஸ்லாம் என்பது மனிதகுலம் முழுமைக்கும் இறைவனால் இறக்கிவைக்கப்பட்டது. விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டது. ''அப்படிதானேயொழிய இப்படியும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது முழுமையாக்கப்பட்டுவிட்டது. வாதப்பிரதி வாதங்களுக்கு அப்பாற்பட்டது. ஆகையால், பர்தா பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்றதோ இல்லையோ ஆணையிடப்பட்டுவிட்டது. அணிந்தே தீர வேண்டியது கடமை. உடைகளைப் பொருத்தவரை ஆண்கள் எளிமையான மற்றும் வெண்மையான ஆடைகளை அணிய அறிவுறுத்தப்பட்டனர். மேலும் கைகளில் மணிக்கட்டு வரையும் கால்களில் கணுக்கால் வரையிலும் ஆடை அணிய அறிவுறுத்தப்பட்டனர். பட்டாடைகள் அணிவது ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. பெண்களைப் பொருத்த வரையில் அவர்கள் உடல் முழுவதையும் மறைக்கும் படி ஆடை அணிய அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் முகத்தை மறைப்பது கட்டாயமாக்கப்படவில்லை. ஏக இறைவன் இந்த பர்தா பெண்களுக்கு சுதந்திரத்தை அளிக்கின்றது என்று கூறுகின்றான்.

நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளான பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானையை தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும். அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள். இன்னும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 33:59)

மேலும் இறைவன் பர்தாவைப்பற்றி கூறும்போது,

இன்னும் முஃமீனான பெண்களுக்கு நீர் கூறுவீராக!அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளவேண்டும். தங்கள் வெட்கத்தலங்களை பேணிக் காத்துக் கொள்ளவேண்டும்,தங்கள் அலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்)தெரியக்கூடியதைத் தவிர (வேரெதையும்) வெளிக்காட்டலாகாது.இன்னும் தங்கள் முன்றானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் 24:31)

....மேலும் (நபியுடைய மனைவியராகிய) அவர்களிடம் யாதொரு பொருளைக் கேட்க நேரிட்டால், நீங்கள் திரைக்கு அப்பால் இருந்துக் கொண்டே அவர்களிடம் கேளுங்கள். அவ்வாறு செய்வது உங்கள் உள்ளங்களுக்கும் அவர்கள் உள்ளங்களுக்கும் மிகப் பரிசுத்தமானதாகும். (அல்குர்ஆன் 33:53)

மேற்காணும் வசனங்களிலும் ஏக இறைவன் கூறும் போது பெண்கள் பர்தாவை கண்டிப்பாகப் பேணவேண்டும் என்பதைக் கூறி அதனால் நீங்கள் (பெண்கள்) கண்ணியமானவர்களாகக் கருதப்படுவீர்கள் என்றும் கூறுகின்றான். ஆக பெண்களை சுதந்திரமானவர்களாக இருக்கும் பொருட்டே பர்தாவை இறைவன் கட்டாயப்படுத்தியுள்ளான்.

'பெண்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும்' என்ற அல்குர்ஆனின் கட்டளை அருளப்பட்டபோது பெண்கள் தம் மெல்லிய ஆடைகளை கைவிட்டனர். தடித்த (கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளைத் தயாரித்துக் கொண்டனர் என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். (அபூதாவுத்)

எவ்வாறு ஹிஜாப் இருக்கவேண்டும்?

ஹிஜாபை இறைவன் கடமையாக்கியதற்க்கு முதல் காரணம் தீய பார்வையை, எண்ணத்தை, நடவடிக்கையை தடுக்கக் கூடியதாக உள்ளது.

இரண்டாவது, பெண்கள் சுதந்திரமாக தங்களுடைய தேவையை பூர்த்திசெய்துக் கொள்ளவும் இந்த பர்தா ஏதுவாக அமைந்துள்ளது.

முக்கியமாக இந்த பர்தாவையே அலங்காரமாகவும் அணியக்கூடாது. மேலும் இந்த பர்தாவை நபி(ஸல்) அவர்களின் மனைவியரும், சஹாபியப் பெண்களும் எவ்வாறு அணிந்து வந்தனர் என்பதை இனி பார்ப்போம்.

"நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இஹ்ராமுடைய சமயத்தில் இருக்கும் போது, குதிரை வீரர்கள் எங்களைக்கடந்து செல்லும் போது நாங்கள் எங்கள் தலையிலிருக்கும் துணியை முகத்தின் மீது இழுத்து மூடிக்கொள்வோம். அவர்கள் கடந்து சென்றதும் நாங்கள் (முகத்திரையை) விலக்கிக் கொள்வோம்"அறிவிப்பவர்: அயிஷா(ரலி) - ஆதாரம்: அபூதாவூத் 1833

"நாங்கள் ஆண்களுக்கு முன்னால் முகத்தை மூடுபவர்களாக இருக்கிறோம்".  அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபூபக்கர்(ரலி), ஆதாரம்: இப்னு குஸைமா, ஹாகிம்.

இவை நபி(ஸல்) அவர்களால் கூறப்படாவிட்டாலும் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையிலும், அவர்களின் காலக்கட்டத்திலும் நடந்தேறியுள்ளது. இதைநபியவர்கள் தடுக்கவில்லை. இருப்பினும் சில ஹதீஸ்களில் பெண்கள் முகத்தை மூடாமலும் இருந்துள்ளனர். உதாரணத்திற்கு நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்து இந்த கறுப்பு நிற பெண்மணி பொறுமையின் காரணத்தால் இவர் சுவனவாசி என்றுள்ளார்கள்.

ஆகவே இவற்றைக் கொண்டு முகத்தை மூடிக்கொண்டால் எந்த பிரச்சினையும் வராது என்று கூறிவிடமுடியாது. அது அவளின் நடவடிக்கையை பொறுத்தேயுள்ளது. ஆண்கள் நம்மை கவனிக்கிறார்கள் அதனால் ஏதும் தீங்கு விளையும் என்று எண்ணினால் முகத்தை மறைக்கலாம்.

இன்றைய ஹிஜாப்:

இன்று ஹிஜாப் என்ற பெயரில் அதிக வேலைப்பாடு கொண்ட பர்தாக்களை பெண்கள் அணிகின்றார்கள். அதனால் அது பெண்களை பாதுகாக்கப்படுவதற்க்கு பதில் பெண்கள் மேல் அதிகம் ஈர்க்கக்கூடிய நிலையை உருவாக்குகிறது. இதை போல் பர்தா அணிவதற்கு மார்க்கத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

நாம் அணியும் பர்தா அடுத்தவரை கவரக்கூடியதாக இருக்கக்கூடாது என்பதில் நாம் கவனம் கொள்ள வேண்டும். மார்க்கத்தில் பிடிப்பாக இருப்பவர்கள் கூட இந்த விஷயத்தில் தன் மனைவி சொல்வதை, தன் தங்கை சொல்வதை, தம் தாயார் சொல்வதை கேட்டு அதன் படி அவர்கள் விரும்பும் மாடல்களில் பர்தா வாங்கி கொடுக்கின்றனர். வளைகுடா நாடுகளில் வாழும் அன்பர்கள் இந்த தவறை அதிகம் செய்கின்றார்கள். கல் புர்கா, எம்ப்ராய்டரி புர்கா, ஜமிக்கி புர்கா என்று புது வகையாக கடைகளில் பல மாடல்கல் கிடைக்கிறது. அதில் புது மாடல் தங்களுடைய வீட்டில் தான் அறிமுகமாக வேண்டும் என்று சில பெண்கள் விருப்பப்படுகிறார்கள். அதற்க்காக மார்க்கத்தில் சொல்லிய வரம்புகளை மீறி தங்களுடைய பர்தாவையே அலங்காரம் ஆக்கிக்கொள்ளும் பழக்கம் நம் சகோதரிகளிடையே பரவிக் கொண்டிருப்பது ஆபத்தானது. நம் உடலை மறைக்ககூடிய பர்தா எவ்வளவு சாதராணமாக இருக்க வேண்டும் என்ற அளவுகோளை ஒவ்வொரு முஸ்லீமும் அறிந்து அவற்றை நடைமுறையில் செயல்படுத்த வேண்டும். 

சில பர்தாக்கள், பட்டன் வைத்து கோட் மாடலில் தைத்து இருக்கிறார்கள். பேருந்தில் போகும் போது அதை பயன்படுத்தினால், பர்தா விலக, உடைகள், மற்றும் உடல் உறுப்புகள் தெரிய வாய்ப்புகள் இருக்கின்றது. அது பார்ப்பவர்களுடைய மன ஓட்டத்தில் உள்ளது என்று யாரும் சப்பை கொட்டு சொல்ல முடியாது. அதற்க்காக நாம் அதைப் போன்ற பர்தாவை பேருந்தில் போகும் போது மட்டும் தவிர்த்துக் கொள்ளலாம் என்று தவறாக எண்ணக் கூடாது. அதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

சில எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் உடல் பகுதியிலும், மார்பக பகுதியிலும்,  வயிற்று பகுதியிலும் செய்யப்பட்டு அந்த பர்தாவை நம் சகோதரிகள் அண்யும் போது, அது அடுத்தவர்களை கவறுவதாக இருக்கிறது. இதனால் புர்காவின் கண்ணியம் குறைந்து மதிக்கப்படுகிறது.

இதைப்போன்று தஞ்சை, நாகை மற்றும் சில மாவட்டங்களில் துப்பட்டி என்னும் ஹிஜாப் பழக்கத்தில் இருந்து வருகிறது. அதிலும் பெண்கள் அதிக வேளைப்பாடுடன் கூடிய துப்பட்டிகளை அணிகின்றனர். அதுவும் இஸ்லாத்திற்க்கு எதிரானதே. சில துப்பட்டிகள் உடல் தெரியும் அளவுக்கு மெல்லிய துனிகளால் உருவாக்காப்பட்டிருக்கிறது. இதை போன்ற துப்பட்டிகளையும் பெண்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.

'சிலவேளை ஒரு பெண் மற்றவரின் கவனத்தை ஈர்க்கும் எண்ணத்துடன் தலையை மூடும் துணியை பளிச்சிடும் பல வண்ண நிறத்தில் கவர்ச்சிகரமாக அணிந்தால் அதுவும் தடை செய்யப்பட்ட கவர்ச்சிகாட்டலாகும்;'

இதனால் நம் தாவா பனியும் கூட பாதிக்கின்றது. நாம் நம்முடைய இஸ்லாமிய மரபுகளை, மார்க்க ஒழுங்குகளை பற்றி நம் மாற்று மத சகோதரர்களிடம் சொல்லி தாவா செய்தால் அவர்கள் நம் பர்தாவின் அலங்காரத்தை பார்த்து எள்ளி நகையாடுகின்றனர். இது தான் உங்களுடைய பர்தாவின் ஒழுங்குகளா? என்று கேட்கின்றனர்.

நன்றி:


அன்புடன்
அபு நிஹான்




Sunday, 4 October 2009



ஒரு நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்பது நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகிய நான்கு தூண்களே என நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த ஒவ்வொரு துறையும் நமது நாட்டில் தத்தமது கடமைகளைச் சரிவர செய்திருக்குமேயானால் அமெரிக்காவின் எடுபிடியைப் போல் நமது நாடு மாறி இருக்காது. உலகின் தலைசிறந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்கியிருக்கும். ஆனால், நமது நாட்டின் ஜனநாயகத் தூண்களான நான்கு துறைகளும் தமது கடமைகளிலிருந்து ஒதுங்கி நிற்கின்றன என்றும் சொல்லலாம்; அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் சொல்லலாம்.

நாடாளுமன்றம்:
நமது நாட்டின் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளைப் பார்த்தால், இதை நாடாளுமன்றம் என்று சொல்லுவதைவிட மக்கள் பிரதிநிதிகள்(?) கூடிக் கலையும் இடம் என்றுதான் சொல்ல வேண்டும். சட்டங்கள் இயற்றுவது முதல் கொள்கை முடிவுகள் எடுப்பது வரை ஏறக்குறைய அனைத்து அரசு முடிவுகளும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. அதிலும் குறிப்பாக குற்றவாளிகளையும் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதமேந்திய இந்துத்துவ பயங்கரவாதிகளையும் தண்டிப்பதில் நாடாளுமன்றம் எந்தவிதத்திலும் பணியாற்றவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தண்டச் சம்பளத்தைச் சட்டப்பூர்வமாகப் பெருவதற்கே பெரிதும் துணை நிற்கிறது. இதன் மீது நாம் கேள்விகள் தொடுப்பது பலனளிக்காது என்பது கடந்த கால அனுபவம்.

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...