இன்றைய மக்களின் ஜீவாதார தேவையான சுத்தமான காற்று எங்கு காணிலும் கிடைக்கவில்லை, ஏனெனில் அந்த காற்றை நாம் தான் வர வேண்டாம்னு சொல்லி தடுத்திட்டோம். சுத்தமான காற்றை தரக்கூடிய மரங்களை நாம் வெட்டுவதின் காரணமாக சுத்தமான காற்றை நாமே விரட்டுகிறோம். மரம் நடுவது என்பது உயிர் வாழ்வதற்கு ஒப்பாக தற்போது கருதப்படுகிறது. பூமி வெப்பமயமாதலை தடுப்பதற்கு மரம் வளர்ப்பும் ஒரு முக்கிய தேவையாகி இருக்கிறது.
இறைவனின் வேதமும் தூதர் மொழியும் மட்டுமே ஈருலக வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்
Showing posts with label சமுதாயம். Show all posts
Showing posts with label சமுதாயம். Show all posts
Saturday, 8 June 2013
Monday, 3 June 2013
அகவை தொண்ணூறு தொட்ட மாபெரும்(?) கலை(?)ஞர்
கலைஞர் என்ற வார்த்தை கருணாநிதிக்கே பொருந்தும். ஏனெனில் கலைகளிலே நாடக கலையில் மிகவும் கை தேர்ந்தவராயிற்றேJ
கலைஞர் 90 வயதை அடந்து விட்டார் என்று எங்கெங்கிலும் அவருக்கு புகழ் மாலை சூட்டப்படுகிறது.
ஒருவர் 90 வயது வரை வாழ்ந்தால் அவர் செய்த தவறுகள் ஒன்றும் இல்லாமல் ஆகாது. எத்துனை எத்துனை துரோகங்கள் எம் முஸ்லீம் சமுதாயத்திற்கு.
கலைஞர் 90 வயதை அடந்து விட்டார் என்று எங்கெங்கிலும் அவருக்கு புகழ் மாலை சூட்டப்படுகிறது.
ஒருவர் 90 வயது வரை வாழ்ந்தால் அவர் செய்த தவறுகள் ஒன்றும் இல்லாமல் ஆகாது. எத்துனை எத்துனை துரோகங்கள் எம் முஸ்லீம் சமுதாயத்திற்கு.
Wednesday, 17 October 2012
நீங்க சென்னையா தமிழ் நாடா?
எங்கு திரும்பினாலும் பவர் கட் பேச்சு தான். பவர் ஸ்டார் கைது பற்றி பரபரப்பு செய்தி பற்றி கொண்ட போது அதிகம் பற்றி கொண்டு எரிந்தது (பின்னே, இரண்டு பவரையும் ஒரே நேரத்துல கட பண்ணுனா சும்மா விடுவாய்ங்களா:)). சமீபத்தில் வந்த செய்திகளில் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் அறிவித்த / அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் நடந்து கொண்டு இருக்கின்றன சென்னையை தவிர. அப்ப சென்னை தமிழ்நாட்டுல இல்லையா?
Tuesday, 7 February 2012
சீரியல்களா? சீரழிவுகளா?
நம் தமிழ்நாட்டு கலாச்சாரம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து வருவதை நாம் அறிகிறோம். கட்டிய கனவனை விட்டு மற்றவனோடு வாழும்/ ஓடும் பெண்களையும், கட்டிய பெண்டாட்டியை மதிக்காமல் திமிறாக ஓபனாகவே சின்ன வீடு வைத்துக் கொள்ளும் கனவன்மார்களையும் நாம் நித்தம் செய்தித்தாள்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இறுதியில் இது எங்கு போய் முடியுமா என்று பயப்படும் அளவிற்கு போய்விட்டது.
அதிலும் திருமணமாகாத இளம்பெண்கள் கர்ப்பமாவதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் இன்று சர்வ சாதரணமாகி விட்டது (திருமணத்திற்கு முன்பு பாலுறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று சொன்ன குஷ்புவை தான் வெளியில் விட்டுவிட்டார்களே). சமீபத்தில் பரவியிருக்கும் Living Together கலாச்சாரம் நம்முடைய இந்திய கலாச்சாரத்திற்கு ஒரு மணிமகுடம். திருமணமாகாத கல்லூரி பெண்கள் கர்ப்பமாவது என்ற காலம் தொடங்கி இப்போது பள்ளிப் பெண்களும் கர்ப்பமாகிக் கொண்டிருப்பது நம் அனைவரையும் நிலைகுலையச் செய்திருக்கிறது.
Thursday, 19 January 2012
நாடும் நடப்பும் - பகுதி 1
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் குறுகிய விடுமுறையில் (70 நாட்கள்) இந்தியா சென்று திரும்பியதால் நான் கண்டவை / ரசித்தவை / பாதித்தவை மற்றும் என்னை பாதித்தவைகளை பற்றி .
விண்ணை முட்டும் விலைவாசி
![]() |
| Courtesy : news.vikatan.com |
ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும் போதும் விலைவாசி நினைத்து கொஞ்சம் இருப்பை அதிகம் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து போன தடவை சிலவுக்காக ஒதுக்கிய நிதியை விட ஒவ்வொரு தடவையும் அதிகம் எடுத்து சென்றாலும் அதையும் தாண்டி இருக்கும் சிலவுகளை பார்க்கும் போது எப்படி நாம் ஊரில் வந்து செட்டில் ஆக போகிறோம் என்று மலைக்க தோன்றுகிறது. ஆனால் ஊரிலேயே வியாபாரம் செய்யும் சிலரோ சந்தோஷமாக கிடைக்கும் வருமானத்தை வைத்து சிலவு செய்வதை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. ஆம் அதில் ஒரு பேருண்மை இருக்கிறது, அதாவது ஊரிலேயே இருக்கும் பலர் வீண் அநாவசிய சிலவுகள் செய்வதில்லை, நாம் தான் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என்று வீண் சிலவுகள் செய்து கையை கடித்துக் கொள்கிறோம்.
Monday, 13 June 2011
KPN விபத்து - தொடரும் தீர்வில்லா பயணம்
![]() |
| KPN Bus - After accident |
கடந்த ஜூன் 8ஆம் தேதி KPN ஆம்ணி பஸ்ஸில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால், கட்டுப்பாட்டை இழந்த KPN ஆம்ணி பேருந்து, இடதுபுறம் பேருந்தைத் திருப்பியதால் விபத்து நேரிட்டதாக ஓட்டுனர் கூறியிருக்கிறார். காவேரிப்பாக்கம் அருகே அவலூர் என்ற இடத்தில் நேற்று இரவு விபத்துக்குள்ளான கேபிஎன் பேருந்து சென்னையிலிருந்து எட்டரை மணியளவில் திருப்பூருக்குக் கிளம்பியது.
Tuesday, 7 June 2011
சாலை மறியல் - பிரச்சனைக்கான தீர்வல்ல
| சாலை மறியல் (sample) |
சாலை மறியல் பண்ணுவது என்பது இப்போது மிகவும் பிரபலமாகி(?) விட்டது.
மின்சாரம் தடையா – உடனே சாலை மறியல்
வெள்ள / மழை நிவாரனம் கிடைக்கவில்லையா – உடனே சாலை மறியல்
கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் வரவில்லையா / தண்ணீர் லாரி வரவில்லையா – உடனே சாலை மறியல்
தொலைபேசி இணைப்பு துண்டிப்பா – உடனே சாலை மறியல்
சாலை விபத்தா, காவல் துறை கண்டுகொள்ளவில்லையா? – உடனே சாலை மறியல்
பஸ் ஸ்டாப்ல பஸ் நிக்கலையா – உடனே சாலை மறியல்
கொலை நடந்துவிட்டதா, விசாரணை தேவையா? – உடனே சாலை மறியல்
Monday, 23 May 2011
தலைவலியும் காய்ச்சலும் (கனிமொழியும் ஸ்பெக்ட்ரமும்)
கோவையில் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்ட பின் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட, முழுக்க முழுக்க காவல்துறையின் தலைமையில் நடத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தில் பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். பல கோடி முஸ்லீம்களின் சொத்துக்கள் நாசமாகின. ஆனால் கலவரத்தை தடுக்க வேண்டிய காவல்துறையோ கை கட்டி நின்று வேடிக்கை பார்த்தது. சமுதாய மக்கள் கொத்து கொத்தாக மடிந்ததை பார்த்து அகமகிழ்ந்தது.
Wednesday, 18 May 2011
+2 முடித்த மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
![]() |
| +2 அடுத்தது என்ன? |
+2 தேர்வு முடிவுகள் வந்து விட்டன, பல மாணாக்கர்கள் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி தெளிவான சிந்தனையோடு இருந்தாலும் சிலருக்கு துறையை தேர்ந்தெடுப்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாதது வருத்தத்திற்குரியதே. வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது என்று ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் விதமாக பல இயக்கங்கள், கழகங்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற ஆரோக்கியமான கருத்தரங்கங்களை நடத்தினாலும் அது எல்லா இடத்திலேயும், எல்லா மாணாக்கர்களிடேயேயும் போய் சேறுகின்றதா என்று கேட்டால், நம்மால் 100 சதிவிகிதம் பாஸிட்டிவான பதிலை சொல்ல முடியவில்லை.
Monday, 16 May 2011
Monday, 11 April 2011
பெண்கள் யாருக்கு ஓட்டு போட போகிறீர்கள்? ஒரு அவசர வேண்டுகோள்
![]() |
| வாக்களிக்க காத்திருக்கும் பெண்கள் |
படித்த பெண்களை பொருத்தவரை நாட்டின் இன்றைய சூழலில் யார் ஆட்சிக்கு வந்தால் நாடு நலமாக இருக்கும் என்று சிந்திக்கின்ற ஆற்றலை வைத்து வரும் தேர்தலில் வாக்களிப்பர். ஆனால் படிக்காத உலகம் / அரசியல் அறியாத பெண்கள் தற்போது நாட்டின் நிலைமை என்ன? யாருக்கு ஓட்டு போட்டால் நம்ம தொகுதி சிறப்பாக இருக்கும்/ அல்லது நமது நாடு நலமாக இருக்கும் என்று சிந்திப்பது மிக குறைவு.
Monday, 4 April 2011
குறைந்த செலவில் MBA, M.E/ M.Tech , MCA படிக்க TANCET நுழைவு தேர்வு
| TANCET |
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள், அண்ணால் பல்கலை கழககங்கள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் TANCET என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இந்த தேர்வை எழுதி, நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்கலாம் . இதில் முஸ்லீம்களுக்கு 3.5% இட ஒதுத்கீடு உள்ளது.
பெரும்பாலும் மாணவர்கள் பட்ட படிப்பை முடித்தவுடனே MBA, M.E/ M.Tech , MCA படிக்க வேண்டும் என பெற்றோர்களிடம் சொல்வார்கள். இதற்க்கு பல லட்சம் செலவாகும். எனவே பெற்றோர்கள் மாணவர்களிடம் இந்த TANCET நுழைவு தேர்வை எழுதுமாறு வழியுறுத்துங்கள், இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெறுமாறு கூறுங்கள். இதன் மூலம் உங்களின் பல லட்ச ரூபாய் மிச்சமாகும். நல்ல கல்லூரியில் படிப்பதன் மூலம் நல்ல சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைக்கும்.
பெரும்பாலும் மாணவர்கள் பட்ட படிப்பை முடித்தவுடனே MBA, M.E/ M.Tech , MCA படிக்க வேண்டும் என பெற்றோர்களிடம் சொல்வார்கள். இதற்க்கு பல லட்சம் செலவாகும். எனவே பெற்றோர்கள் மாணவர்களிடம் இந்த TANCET நுழைவு தேர்வை எழுதுமாறு வழியுறுத்துங்கள், இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெறுமாறு கூறுங்கள். இதன் மூலம் உங்களின் பல லட்ச ரூபாய் மிச்சமாகும். நல்ல கல்லூரியில் படிப்பதன் மூலம் நல்ல சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைக்கும்.
Saturday, 19 March 2011
தேர்தலில் முஸ்லீம் கட்சிகள் – பகுதி - 3
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தேர்தல் சூழ்நிலை களைகட்டியிருக்கும் இச்சூழலில் மூன்றாம் அணியின் பயத்தை உணர்ந்து அதிமுக உஷாராக கேட்ட தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து தங்களுடைய நிலையை தமிழக வரலாற்றில் நிலைநிறுத்த போராடிக் கொண்டிருப்பதையும், கூட்டணி உடைந்தால் வெற்றி நிச்சயம் என்று திமுக பகல் கனவு கண்டது வீணாகி தங்களுடைய நிலையை நினைத்து வருந்தி வருவதையும் அனைவரும் அறிவீர்கள்.
தொகுதிகள் பங்கீடு முடிந்து முஸ்லீம் கட்சிகளின் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் வெளிவந்துவிட்டன. முஸ்லீம் லீக், மமக, SDPI ஆகிய கட்சிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடுவது எனவும் சகோதரர் பாக்கர் தலைமையில் உள்ள இந்திய தவ்ஹீத் ஜமாத் வெளியில் இருந்து ஆதரவு தருவதென்றும் முடிவில் உள்ளன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு என்னெவென்று தெரியவில்லை.
Saturday, 12 March 2011
இந்திய யூணியன் முஸ்லீம் லீக் - தேர்தல் பார்வை
![]() |
| IUML - DMK - Election Meet |
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நோக்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது அல்ல. முஸ்லிம் சமுதாயத்தினருக்கு சேவையாற்றும் சரியான பிரதிநிதிகளை உருவாக்கும் பயிற்சி தளமாகவே இயங்கி வருவதே அதன் நோக்கம் என தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 64-வது நிறுவன தினத்தை சிறப்பிக்கும் வகையில் சென்னை சி.என்.கே. சாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் கூறியதாவது-
தி.மு.க தலைமையிலான கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 64-வது நிறுவன தினம் இன்று தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக் கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமது கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
Thursday, 10 March 2011
தேர்தலில் முஸ்லீம் கட்சிகள் – பகுதி - 2
![]() |
| TN election 2011 |
ஒரே கூட்டணிக்கு முஸ்லீம் கட்சிகள் ஆதரவு அளிப்பது பற்றி சென்ற தொடரில் பார்த்தோம்.
ஒரே கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதால் ஓற்றுமை, சகோதரத்துவம் தழைத்தோங்குவது மட்டுமின்றி இந்த தேர்தலில் கிடைத்த ஐந்து தொகுதிகளிலும் இறைவனின் அருளால் வெற்றி வாகை சூடினால் வருங்காலத்தில் இன்னும் அதிக இடங்கள் ஒரே கட்சியின் கீழ் கிடைக்க அல்லது இதைப்போன்றே இரு கட்சிகளின் வாயிலாக கிடைக்க உதவியாக இருக்கும்.
Wednesday, 9 March 2011
தேர்தலில் முஸ்லீம் கட்சிகள் – பகுதி - 1
![]() |
| iuml & tmmk |
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, தத்தமது கட்சிகள், இயக்கங்கள், மத/சாதி சார்ந்த அமைப்புகள் அனைத்தும் முழு மூச்சோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், இந்த தேர்தலில் சற்று வித்தியாசமாக தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து தான் முடிவுகள் வரும் என்பது ஒரு வியக்கத்தக்க விஷயம். ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும், தொகுதி பங்கீடுகளை அலசி ஆராய்ந்து தங்களது கூட்டணியை பலுபடுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். இது ஒருபக்கம் இருக்க உதிரி கட்சிகள்-இயக்கங்கள், மத- சாதி சார்ந்த கட்சிகள் –இயக்கங்கள் தங்களின் நிலையை உறுதிபடுத்திக் கொள்ளவும், தமிழக அரசியலில் புதிதாக கால் பதிக்கவும், கால் பதித்தவர்கள் உறுதியாக நிற்கவும் முயற்சி செய்கின்றனர்.
சிறுபான்மை என்று சொல்லப்படுகின்ற முஸ்லீம் சமுதாயமும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதில் இருவகையான பிரிவுகள், இரு கட்சிகளாக போட்டியிடுகின்றனர்.
1. இந்திய யூணியன் மூஸ்லீம் லீக் – திமுக அணி
2. மனிதநேய மக்கள் கட்சி – அதிமுக அணி
Wednesday, 2 March 2011
IAS, IPS படிக்க Civil Services தேர்வு
![]() |
| UPSC |
கனவை நினைவாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!
இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான நுழைவு தேர்வை
மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான (IAS, IPS, IFS etc...) முதல் கட்ட நுழைவு தேர்வு Civil Services Preliminary Examination 2011 விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவையே நிர்வகிக்கும் முக்கிய அரசு பதவிகளுக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், கண்கானிப்பாளர் போன்ற பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். இந்த தேர்வை எழுதி வெற்றி பெறுவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும், காவல் துறை ஆணையராகவும், உள்துறை, உளவுத்துறை என இந்தியாவின் முக்கிய அதிகார பொருப்புகளில் அமர முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.
Wednesday, 9 February 2011
சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 4
![]() |
| to prove patriotism |
கல்வித் துறையில் - பள்ளிகளில் முஸ்லீம் விரோத போக்கு:
முஸ்லீம் விரோத போக்கு கல்வித் துறையில் தொற்றி இருக்கிறது என்பதை நினைக்கும் போது தான் மனம் மிகுந்த வேதனைப்படுகிறது. ஏற்கனவே பள்ளிகளில் வரலாற்று பாடங்களில் முஸ்லீம்களுடைய உண்மையான தேசபக்தியை வெளிகாட்டாமல் விட்டதில் ஆரம்பித்து, பல வரலாற்று நிகழ்வுகளை மறைத்தது வரை முஸ்லீம் விரோத போக்கை நடத்திக் காண்பித்ததை, நடத்திக் கொண்டிருப்பதை அனைவரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.
Tuesday, 1 February 2011
சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 3
முஸ்லீம்கள் சந்தித்த பல வழக்குகளில் நிரபராதி என்று அறிவிக்கப்பட்ட பல அப்பாவிகள் சிறைச்சாலையிலேயே பல வருடங்கள் செய்யாத குற்றத்திற்கு விசாரணை கைதிகளாகவே தண்டனை அனுபவித்த கொடுமை (சிலர் சிறைச் சாலையிலேயே விசாரணை கைதியாகவே இறந்த கொடுமை) ஏராளம். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கைதானவர்கள் பலர் விசாரணை கைதிகளாகவே தங்களுடைய வாழ்க்கையை சிறையிலேயே கழித்தது உச்சகட்டம். ஏதாவது ஒரு பிரச்சனை, குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் பத்திரிக்கைக்கும், காவல் துறைக்கும் எப்படி செய்தி போகும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் இதைப் பற்றியெல்லாம் சிறிதும் யோசிக்காத நீதிமன்றங்கள் குற்றம் சுமத்தப்பட்ட அப்பாவிகளை விசாரணை கைதிகாளாகவே சிறையிலேயே காலம் தள்ளி தங்களின் விரோத போக்கை கடைபிடித்தனர். ஒரு சிறுபான்மை சமுதாயத்தின் இயக்கங்கள் தவறு செய்ததாக நிரூபிக்கப்படாத போதும் அதன் மீது குற்றம் சுமத்தப்பட்ட காரணத்திற்காக (உ.ம். simi) அந்த இயக்கத்தை பல தடவை தடை செய்த நீதிமன்றம், பெரும்பான்மை சமூகத்தின் இயக்கங்கள் தவறு செய்ததாக நிரூபிக்கப்பட்டாலும் அதனை தடை செய்வதில்லை.
கோயம்புத்தூர் கலவரம், குஜராத் கலவரம், பாபர் மஸ்ஜிதை இடித்தது, அதை தொடர்ந்து வந்த கலவரங்கள், பாபர் மஸ்ஜித் தீர்ப்பு, மதானியின் தற்போதைய கைது, கைதிகளை தலைவர்களின் பிறந்த நாளின் போது விடுவித்தலில் பாரபட்சம் போன்ற விஷயங்கள் உட்பட நீதிமன்றங்கள் ஒரு தலைபட்சமாகவே செயல்படுகிறது என்பதை நடுநிலைமையாளர்கள் அறிவர்.
செப்டம்பர் 2010 16-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் 8 பேர் லஞ்சப் பேர்வழிகள்' என்கிற குற்றச்சாட்டை முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான சாந்திபூஷண் முன்வைத்தபோது, நாடே அதிர்ந்தது.
Thursday, 27 January 2011
சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 2
சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 1 படிக்க
ஊடகத்துறையில் தீவிரவாத செயல்களை முஸ்லீம்கள் செய்தாலோ அல்லது முஸ்லீம்கள் செய்ததாக குற்றம் (பொய் குற்றம்) சாட்டப்பட்டாலோ வரிந்து கட்டிக் கொண்டு தங்களின் பத்திரிக்கை தர்மத்தை(?) காக்க போட்டி போட்டுக் கொண்டு செய்திகளை வெளியிடும் செய்தி ஊடகமும், காட்சி ஊடகமும் முஸ்லீம்கள் ஒரு நல்ல விஷயத்திற்காக போராடினால் அதை வெளியிடுவதில்லை. கடந்த காலத்தில் ஒரு அமைப்பு இட ஒதுக்கீட்டுக்காக போராட்டத்தை அறிவித்து வெற்றிக்கரமாக முடித்த வேளையில் அதை பற்றி செய்தி ஊடகத்திலோ அல்லது காட்சி ஊடகத்திலோ பெரிதாக பேசப்படாதது மட்டுமல்ல செய்தியாக கூட சொல்லாதது மனதிற்கு மிகவும் வருத்ததை அளிக்கிறது (அந்த ஊர் பதிப்பகத்தில் சில செய்தித்தாள்களில் வந்ததை தவிர). அதே போல் முஸ்லீம்களின் தலைவர் நபி(ஸல்) அவர்களை பற்றி யாரேனும் ஏதேனும் தவறாக கூறினால் அதை பரிசீலப்படுத்தாமல், முஸ்லீம் மக்கள் காயப்படுவார்களே என்று கூட நினைக்காமல் அப்படியே வெளியிட்டு தங்களின் முஸ்லீம் விரோத போக்கை அப்பட்டமாக சில செய்தி ஊடகங்கள் உலகுக்கு உணர்த்துகினறன.
Subscribe to:
Posts (Atom)
குழந்தைகள் ATM மெஷின்களா?
அஸ்ஸலாமு அலைக்கும் நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...
-
model accident சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ...
-
ஏக இறைவனின் திருப்பெயரால் நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம். திறந்து விசாரிக்கும் போது, 'எனது தாயார் கார் விபத்து காரணமாக மருத்துவமனை...
-
நாமெல்லாம் ஒரு சாதரண பிரச்சணை என்றாலே மனம் உடைந்து என்ன செய்வது என்று கவலைப்பட்டு கொண்டிருப்போம். ஆனால் சிலர் என்ன பிரச்சனை நடந்தாலும் வாழ்...














