சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 1 படிக்க
ஊடகத்துறையில் தீவிரவாத செயல்களை முஸ்லீம்கள் செய்தாலோ அல்லது முஸ்லீம்கள் செய்ததாக குற்றம் (பொய் குற்றம்) சாட்டப்பட்டாலோ வரிந்து கட்டிக் கொண்டு தங்களின் பத்திரிக்கை தர்மத்தை(?) காக்க போட்டி போட்டுக் கொண்டு செய்திகளை வெளியிடும் செய்தி ஊடகமும், காட்சி ஊடகமும் முஸ்லீம்கள் ஒரு நல்ல விஷயத்திற்காக போராடினால் அதை வெளியிடுவதில்லை. கடந்த காலத்தில் ஒரு அமைப்பு இட ஒதுக்கீட்டுக்காக போராட்டத்தை அறிவித்து வெற்றிக்கரமாக முடித்த வேளையில் அதை பற்றி செய்தி ஊடகத்திலோ அல்லது காட்சி ஊடகத்திலோ பெரிதாக பேசப்படாதது மட்டுமல்ல செய்தியாக கூட சொல்லாதது மனதிற்கு மிகவும் வருத்ததை அளிக்கிறது (அந்த ஊர் பதிப்பகத்தில் சில செய்தித்தாள்களில் வந்ததை தவிர). அதே போல் முஸ்லீம்களின் தலைவர் நபி(ஸல்) அவர்களை பற்றி யாரேனும் ஏதேனும் தவறாக கூறினால் அதை பரிசீலப்படுத்தாமல், முஸ்லீம் மக்கள் காயப்படுவார்களே என்று கூட நினைக்காமல் அப்படியே வெளியிட்டு தங்களின் முஸ்லீம் விரோத போக்கை அப்பட்டமாக சில செய்தி ஊடகங்கள் உலகுக்கு உணர்த்துகினறன.