Sunday, 11 March 2012

மின்சார ஜோக்ஸ்

அப்பா : ஏண்டா ஆஃபிஸ்ல இருந்து ஒரு வாரமா வீட்டுக்கே வரல 

பையன் : ஆஃபிஸ்ல கரண்ட பிரச்சனை இல்லப்பா, ஒவர்டைம்னு சொல்லி அங்கேயே படுத்துக்குவோம், தண்ணீர் பிரச்சனை, கொசு பிரச்சனை, கரண்டு பிரச்சனைனு எதுவுமே இல்லப்பா 

அப்பா: இப்ப மட்டும் ஏண்டா வந்தே? 

பையன் : இன்னைக்கு sunday, ஆஃபீஸ் லீவு 

-*-
அப்பா: ஏண்டா படிக்கல? 

பையன்: எனக்கு படிக்க பிடிக்கலப்பா? 

அப்பா: ஏண்டா? 

பையன்: நாளைக்கு இயற்பியல் பரிட்சை, அதுல அனுவ பத்தி வருது, நாம தான் அனு உலை வேணானு சொல்றோமே, அதனால எங்க கிளாஸ் பசங்க எல்லாம் இயற்பியல் பரிட்சையை புறக்கணிக்கிறோம்னு சொல்லிட்டோம். 

அப்பா : ?? 

-*-
அப்பா: ஒழுங்கா கஷ்டப்பட்டு படிடா. பின்னாடி கஷ்டப்பட மாட்ட, சொன்னா புரிஞ்சுக்கோடா 

பையன்: எப்படிப்பா, எப்படியாயிருந்தாலும், இப்ப நீங்க படி படினு சொல்றா மாதிரி, வேலைக்கு சேர்ந்தவுடனே டேமஜரு (மேனஜரு) வேலை பாருனு வேலை பாருனு சொல்வாருல்ல. 

அப்பா: நல்லா படிச்சேன்னா உனக்கு EB ல வேலை வாங்கி தருவேன். 

பையன்: ஹையா EB ல வேலை. அப்படின்னா வேலையே பாக்க வேணாம், ஜாலி. 

-*-
EB லைன்மேன்1: சார் கரண்ட் கம்பில ஏதோ fault னு நினைக்கிறேன், கரண்ட் பாஸாகுல சார், 

EB லைன்மேன்2: யோவ் யாரோ, கரண்ட் கம்பி கட் பண்ணிட்டு துணி காய வைக்கிற கம்பிய கனெக்ட் பண்ணிட்டு போயிருக்காங்கய்யா? 

பொதுமக்கள் : மின்வெட்டு மின்வெட்டுனு சொல்வாய்ங்களே, அது இது தானா?? 
-*-
EB லைன்மேன் மனைவி : என்னங்க, உங்க டூல்ஸ் பாக்ஸ மறந்துட்டு போறீங்க? 

EB லைன்மேன்: டிபன் பாக்ஸுக்கு வேலை இருக்கு, எடுத்துட்டு போறேன், டூல்ஸ் பாக்ஸுக்கு வேலை இல்லை எடுத்துட்டு போகலை !!

-*- 
பாபு : ரன்வேல ஏன் அரிக்கேன் லைட்ட காமிச்சிக்கிட்டு இருக்காரு 

கோபு : ஏர்போர்ட்ல பவர் இல்லையாம், அதான் ஃபிளைட்டுக்கு சிக்னல் தராரு! 

-*-
கட்சிக்காரர்1: ரயில் மறியல்ல கைவிட சொல்லி கலெக்டரே போன் பண்ணி சொன்னதுக்கொசரமும் 10 to 12 தலீவர் தண்டவாளத்துல படுத்துட்டாராமே? தில்லு தான்யா 

கட்சிக்காரர்2: ஏய் சாவுக்கிராக்கி, 10 to 12 ஏரியாவாண்ட கரண்ட் கட்டு, ப்ளான் பண்ணி ரயில் வராதுன்னு தெரிஞ்டுக்கின்னே போய் படுத்துக்கின்னாரு!

-*-


அப்பா : மேலே படிக்கும் பெண்களில் ஒருவரிடம், ஏன் தாயி, நீங்களும் உங்க ஃப்ரண்ட்ஸும் இப்படி மொழுகுதிரி வெளிச்சத்துல என்ன படிக்கிறீங்க??

மகள் :மின்சார உற்பத்தி பண்ணுவது எப்படினு படிச்சிக்கிட்டு இருக்கோம்பா?

அப்பா : விளங்கிடும்
-*-
கணவன் : திடீர்னு கல்யாணத்துக்கு மொய் வைக்கனம்னு காசு கேட்டா நான் என்னா பன்னுவேன், பால் பில், கரண்ட் பில், மளிகை பில், டெலிபோன் பில், ஸ்கூல் பீஸ், டியூசன் பீஸ் அப்படினு ஏகப்பட்ட செலவு இருக்கு. 

மனைவி : கரண்ட் பில்லுக்கு வச்சிருக்குற பணத்த எனக்கு குடுத்துடுங்க, கரண்டே இல்லாததுக்கு எப்படி கரண்ட் பில் போடுவாய்ங்க 

கணவன் : ??
-*-

EB லைன்மேன் 1: யோவ் அந்த போர்ட(மேலே உள்ள போர்ட காட்டி) கழட்டி தூக்கி எறிஞ்சிடுயா?

EB லைன்மேன் 2: ஏன்யா

EB லைன்மேன் 1: அத பாத்துட்டு எல்லோரும் நம்ம கேவலமா ஒரு பார்வை பாக்குறானுவோயா
-*-

பொதுக்கூட்டத்தில் தலீவர் : எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் மீது அக்கறை உண்டு. விலைவாசி ஏறிக் கொண்டு இருக்கிறது. ஏழைகள், நடுத்தர மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று எங்கள் அமைப்பு யோசித்து எப்படி பணத்தை மிச்சப்படுத்தலாம் என்று நினைத்து தான் மின்வெட்டை ஆரம்பித்துள்ளோம். நீங்கள் அனைவரும் இனி மின்சார கட்டணம் கட்ட தேவை இல்லை. 

பொதுக்கூட்டத்தில் மக்கள் : ங்கே !


சந்தடி சாக்கில் TTDC கொடுத்த விளம்பரம்

என்னா வில்லத்தனம்??
டிஸ்கி :மேலே குறிப்பிட்டுள்ளவைகள் அனைத்தும் சிரிப்பதற்கே சிந்திப்பதற்கு அல்ல (சிந்திப்பவர்களுக்கு மட்டும்) :) 

(வீட்டுக்கு சுமோ, ஸ்கார்பியோ அனுப்பிராதீங்கனு எப்படில்லாம் சொல்ல வேண்டி இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:) )

தோழமையுடன்
அபு நிஹான்

10 comments:

 1. சலாம் சகோ...
  அந்த ஆபிஸ் ஜோக் சூப்பர்...அந்த ஆபிஸ் எங்கே இருக்குன்னு சொல்லுங்களே..

  ReplyDelete
 2. ஹா..ஹா..ஹா..

  இது ஜோக் வாரமா!

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்

  :) :)

  ReplyDelete
 4. சலாம் அபு நிஹான்,

  ஜோக்ஸ் லாம் நல்லா இருக்கு. சில ஜோக்ஸ் மொக்கை. நேத்தே உங்களுக்கு கமெண்ட் போடணும்னு நெனச்சேன். ஹி..ஹி..ஹி.. கரண்ட் இல்ல(சும்மா.....).

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

  :) :-) :-))

  ReplyDelete
 6. அலைக்கும் ஸலாம் அதிரடி ஹாஜா,

  அந்த ஆஃபிஸ தான் நானும் தேட்க்கிட்டு இருக்கேன் :)

  ReplyDelete
 7. கருத்துரையிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

  ReplyDelete
 8. சலாம் சகோ...

  கடி செம கடி..
  அதிலும் இது அதவிட கடி
  //அந்த ஆஃபிஸ தான் நானும் தேட்க்கிட்டு இருக்கேன் :)//

  ReplyDelete
 9. //கரண்ட் பில்லுக்கு வச்சிருக்குற பணத்த எனக்கு குடுத்துடுங்க, கரண்டே இல்லாததுக்கு எப்படி கரண்ட் பில் போடுவாய்ங்க//இந்த வருடத்தின் செம காமெடி...எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

  ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...