Sunday, 5 February 2012

துன்பங்கள் சூழ்ந்தது தான் வாழ்க்கை


நாமெல்லாம் ஒரு சாதரண பிரச்சணை என்றாலே மனம் உடைந்து என்ன செய்வது என்று கவலைப்பட்டு கொண்டிருப்போம். ஆனால் சிலர் என்ன பிரச்சனை நடந்தாலும் வாழ்க்கை சென்று கொண்டு தான் இருக்கும் என்று மனதை திடப்படுத்தி கொண்டு தைரியமாக இருப்பர், அப்படி ஒரு நண்பரை இந்த தடவை விடுப்பில் இந்தியா சென்றிருக்கும் போது சந்தித்தேன். இந்த விடுப்பில் என்னுடைய குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நலக் குறைவால் 5 நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனக்கோ பயங்கர வருத்தம். விடுப்பில் இருக்கும் போது மருத்துவமனையில் வந்து தங்கி இருக்கிறோமே என்று வருந்தி இறைவனிடம் சீக்கிரம் வீட்டிற்கு செல்ல பிராத்தித்து கொண்டு இருந்தேன். அப்போது ஒரு மாற்று மத சகோதரர் குங்குமம் வார இதழ் படித்துக் கொண்டிருந்தார். அவருடன் பேச்சு கொடுத்தேன். எந்த ஊர், என்ன தொழில் புரிகிறீர்கள் என்பது போன்ற பரஸ்பர விசாரிப்புகளுக்கு அவர் சொன்ன செய்தி இதோ.


அவருடைய சொந்த ஊர் பட்டுக்கோட்டை அடுத்த மீனவ கிராமம், நன்றாக படித்துக் கொண்டிருந்த அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்தி விட்டு கடலுக்குள் செல்ல ஆரம்பித்திருக்கிறார். உயிரை பணயம் வைத்து கடலுக்குள் சென்று மீன் பிடித்து விற்றிருக்கிறார், பிறகு கடலுக்கு செல்ல மனமில்லாமல் கடலுக்குள் பிடித்து வந்த மீன்களை வாங்கி வேறு ஒருவருக்கு விற்று வாழ்ந்து வந்திருக்கிறார். பல தடைகளை தாண்டி தன்னுடைய தங்கைகளை திருமணம் செய்து வைத்து தானும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக ஒரு ஆண் பிள்ளையை இறைவனின் கருணையால் பெற்றெடுத்தார். சிறிது காலத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி கற்பமடைய எல்லையில்லா சந்தோஷம் கொண்டு என்ன குழந்தை பிறக்கப் போகிறதோ என்று ஆர்வத்தில் இருந்தவருக்கு திடீரென்று காத்திருந்தது அதிர்ச்சி. அதாவது தன்னுடைய மனைவிக்கு வலி வந்து, அதனால் குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்து என்ற நிலை வரவே பட்டுக்கோட்டையில் இருந்து மனைவியை தஞ்சாவூருக்கு அழைத்து வந்திருக்கிறார். மிகப் பெரிய போராட்டத்துக்கு பிறகு தாயை மட்டுமே காப்பாற்ற முடிந்தது என்ற போது அவரால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் பின் இரு உயிரில் ஓர் உயிரையாவது காப்பாற்ற முடிந்ததே என்று நினைத்து தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் கூற, அவரும் அதையே நினைத்து சமாதானம் அடைந்ததாக சொன்னார். இதை அவர் என்னிடம் சொல்லும் போது அழவில்லை, ஆனால் ஒரு தெளிந்த மனதுடன் பேசிய அவருடைய வார்த்தைகள் என்னுடைய சோகத்தை உடைத்தெறிந்தது. 

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப் பட்டார்கள்; "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) (அல்குர்ஆன்:2:214)

''உங்களுடைய செல்வமும், சந்ததிகளும் உங்களுக்குச் சோதனையே. ஆனால் அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு உங்களுக்கு மகத்தான கூலி உள்ளது. (அல்குர்ஆன் 64:15)

பட உதவி : கூகிள்

29 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்
  பகிர்புக்கு நன்றி இதை படித்த பிறகு எனக்கு தொன்றிய கவிதை கொடுமையை அனுபவிக்கவும்.

  மனிதா! பசித்த பிறகு உண்கிறாய்
  தாகித்த பிறகு நீர் அருந்துகிறாய்
  களைப்புற்ற பிறகு உறங்குகின்றாய்
  நோயுற்ற பிறகு குணமடைகின்றாய்

  கண்ணீருக்குப் பிறகு புன்னகை உண்டு
  அச்சத்திற்குப் பிறகு அமைதி உண்டு
  அதிர்ச்சிக்குப் பிறகு நிம்மதி உண்டு

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும்!

  சிறந்த பகிர்வு.

  ReplyDelete
 3. ஸலாம் சகோ.அபுநிஹான்,
  மிக நல்ல பகிர்வு. உங்கள் உறவினருடன் அவருக்கு உதவியாக ஐந்து நாள் மருத்துவமனையில் அவரோடு இருந்து நிறைய நன்மையை மறுமைக்காக சேர்த்து இருக்கிறீர்கள். அல்ஹம்துலில்லாஹ். அப்புறம், அந்த மீனவ சகோதரர் அதிராம்பட்டினம் - ஏரிபுறகரை கிராமமா..?

  ReplyDelete
 4. சோதனை கொடுத்த அவனே நம்மை மீட்டெடுக்க போதுமானவன்

  இன்ஷா அல்லாஹ், எல்லாவித பலத்தையும் அவனே அளிக்கட்டும் ...

  ReplyDelete
 5. மானிட வாழ்க்கை இறைவனால் நிச்சயிக்கப் படுகிறது.இன்ப துன்பங்களை ஒரே விதமாக கருத பழகிக் கொள்தல்வேண்டும்.நல்ல பதிவு!

  ReplyDelete
 6. சகோ அபு நிஹான்,
  அஸ்ஸலாமு அலைக்கும்,

  நல்லதொரு தன்னம்பிக்கை தரும் ஆக்கம். பஹிர்விர்க்கு நன்றி.

  ReplyDelete
 7. /* அஸ்ஸலாமு அலைக்கும்
  பகிர்புக்கு நன்றி இதை படித்த பிறகு எனக்கு தொன்றிய கவிதை கொடுமையை அனுபவிக்கவும்.

  மனிதா! பசித்த பிறகு உண்கிறாய்
  தாகித்த பிறகு நீர் அருந்துகிறாய்
  களைப்புற்ற பிறகு உறங்குகின்றாய்
  நோயுற்ற பிறகு குணமடைகின்றாய்

  கண்ணீருக்குப் பிறகு புன்னகை உண்டு
  அச்சத்திற்குப் பிறகு அமைதி உண்டு
  அதிர்ச்சிக்குப் பிறகு நிம்மதி உண்டு */

  சகோ ஹைதர் அலி,

  சலாம்....

  ஏதோ கவிதை வரும்னு சொன்னீங்க... கவிதைய
  காணோம்... வெறும் உரைநடை மட்டும் தான் இருக்கு???

  அடுத்த பின்னூட்டத்தில் கவிதை வருமா????

  ReplyDelete
 8. சகோ காதர் பாய்,

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாய்

  ReplyDelete
 9. சகோ ஹைதர் அலி பாய், வருகைக்கும், அழகான கவிதைக்கும் நன்றி.

  ReplyDelete
 10. சகோ சுவனப்பிரியன்,

  அலைக்கும் ஸலாம். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 11. அலைக்கும் ஸலாம் சிட்டிசன் ஆஃப் வேர்ல்டு,

  ஏரிபுறகரை கிராமமா..? இல்லை. அவருடைய ஊர் ஞாபகம் இல்லை சகோ.

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 12. சகோ ஜமால் பாய்,

  //சோதனை கொடுத்த அவனே நம்மை மீட்டெடுக்க போதுமானவன்//

  சரியாக சொன்னீர்கள். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 13. சகோ கூடல் பாலா

  //மானிட வாழ்க்கை இறைவனால் நிச்சயிக்கப் படுகிறது.இன்ப துன்பங்களை ஒரே விதமாக கருத பழகிக் கொள்தல்வேண்டும்.//

  நச் கருத்து சகோ. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 14. அலைக்கும் ஸலாம் சகொ சிராஜ்,

  //நல்லதொரு தன்னம்பிக்கை தரும் ஆக்கம்//

  தன்னம்பிக்கை மட்டுமல்ல இறை நம்பிக்கையும் தரும் ஆக்கம்.

  //ஏதோ கவிதை வரும்னு சொன்னீங்க... கவிதைய
  காணோம்... வெறும் உரைநடை மட்டும் தான் இருக்கு???

  அடுத்த பின்னூட்டத்தில் கவிதை வருமா????//

  ஆரம்பிச்சிட்டீங்களா உங்க சேட்டைய.

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 15. சகோ சிராஜ்

  //ஏதோ கவிதை வரும்னு சொன்னீங்க... கவிதைய
  காணோம்... வெறும் உரைநடை மட்டும் தான் இருக்கு???//

  இல்லையே ஒவ்வொரு வரியாக பிரிச்சு பிரிச்சு தானே போட்டேன் அப்ப இது கவித இல்லையா
  ஆஹா

  ReplyDelete
 16. சலாம் சகோ.....

  நல்ல செய்திகளை தந்துள்ளீர்கள்....நன்றி

  ReplyDelete
 17. இழப்புகளையும் சேர்த்துதான் வாழ்க்கை. அருமையான பதிவு சகோ

  ReplyDelete
 18. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  நல்ல செய்தி பகிர்ந்திருக்கிறீர்கள்

  நிச்சயமாக! சிரமத்திற்கு பிறகு தான் இலேசு இருக்கிறது சகோ...

  இன்ஷா அல்லாஹ்

  ReplyDelete
 19. /* இல்லையே ஒவ்வொரு வரியாக பிரிச்சு பிரிச்சு தானே போட்டேன் அப்ப இது கவித இல்லையா
  ஆஹா */
  ஹா..ஹா...ஹா...
  இப்ப எல்லாம் பேசுறத பிரிச்சு போட்ட கவிதை ஆகிவிடுகிறது.... ஜோக் aparts .............

  உங்கள் கவிதை ஓஹோன்னு இல்லாட்டியும், பரவ இல்லாம இருக்கு சகோ. தைரியமா தொடருங்க.
  மொக்க கவிதைய எல்லாம் போட்டு நெறைய பேரு கொலையா கொண்டுகிட்டு இருக்காங்க.
  திஸ் இஸ் மச் பெட்டெர்.

  ReplyDelete
 20. அஸ்ஸலாமு அலைக்கும்,

  சுப்ஹானல்லாஹ்..மிக அழகான பகிர்வு...ஜசாக்கல்லாஹ்

  வஸ்ஸலாம்....

  ReplyDelete
 21. அஸ்ஸலாம் அலைக்கும் ....
  சகோ ஹைதர் பாய்
  *கண்ணீருக்குப் பிறகு புன்னகை உண்டு
  அச்சத்திற்குப் பிறகு அமைதி உண்டு
  அதிர்ச்சிக்குப் பிறகு நிம்மதி உண்டு *
  100% என் வாழ்கையில் இப்படித்தான்
  நிகழ்ந்துக்கொண்டு இருக்கிறது

  ReplyDelete
 22. அஸ்ஸலாமு அலைக்கும்

  எதுவும் நம் கையில் இல்லை..
  அருமையான பகிர்வு..

  ReplyDelete
 23. சகோ அதிரடி ஹாஜா,

  உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 24. சகோ கஸாலி

  //இழப்புகளையும் சேர்த்துதான் வாழ்க்கை//

  முற்றிலும் உண்மை.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 25. சகோ குலாம்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 26. அலைக்கும் ஸலாம் சகோ ஆஷிக் அஹமத்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 27. அலைக்கும் ஸலாம் சகோ நாசர்,

  இறைவன் உங்களுக்கு ஈருலகத்திலும் நன்மையையே நாடுவானாக.

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 28. சகோ ஜலீலா கமால்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...