Thursday, 19 January 2012

IIT IIM மாணவர்களின் விந்தனு தேவை - கலாச்சார சீரழிவு

சமீபத்தில் வெளியான செய்தி கண்டு கொதிப்படைந்தேன். 

அது IIT IIM போன்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் விந்தனு தேவப்படுகின்றது என்ற வினோதமான விளம்பரம். அதில் அந்த விந்தனுவிற்கு 20,000 ரூ வரை தருவதாகவும், தங்களுடைய கைப்பேசி எண், மற்றும் தங்களின் மின்னஞ்சல் முகவரி முதற்கொண்டு கொடுத்து அந்த விளம்பரத்தை கொடுத்திருக்கிறார்கள். இதில் வேதனை என்னவென்றால் இது கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு என்பது தான். 
அந்த செய்தி இது தான் 

மும்பை: ஐஐடி மாணவர்களின் விந்தணுக்கள் தேவை என்று சென்னையில் உள்ள தம்பதி விளம்பரம் தந்துள்ளனர்.

அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விளம்பரம் இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐஐடியில் படிக்கும் புத்திசாலியான, ஆரோக்கியமான, உயரமான, அழகான மாணவர்களின் விந்தணுக்கள் தேவை. அதற்கு சன்மானமாக 20,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்ணும், இ-மெயில் முகவரியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி, ஐஐஎம் போன்றவைகளில் படிக்கும் மாணவர்களின் விந்தணுக்களை பெற்று புத்திசாலித்தனமாக குழந்தைகளை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று அந்த தம்பதி தெரிவித்துள்ளனர். 

இந்த விளம்பரம் ஐஐடி வளாகத்திற்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாணவர்கள், ஐஐடியில் படிப்பவர்கள் மட்டும் புத்திசாலிகள் அல்ல. இது முட்டாள்தனமான விளம்பரம் என்று கூறியுள்ளனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 

Courtesy : thatstamil 

நாகரீக காலத்தில் வாழ்கிறோம் என்று சொல்லிக் கொண்டு இப்படி கற்காலத்தில் வாழ்ந்த மக்களை விட கீழ்த்தரமாக வாழ பழகிக் கொண்டிருக்கும் சமுதாயத்தை பற்றி நினைத்தால் மனம் பதபதைக்கிறது. 

எப்போது தமிழ் நாட்டில் மேற்கத்திய கலாச்சாரமான Living together கலாச்சாரத்தை தவறில்லை என்று நீதிமன்றம் கூறியதோ அப்போதே நம் இந்திய / தமிழக கலாச்சார சீர்கேடு ஆரம்பமாகி விட்டது. அதிலும் திருமண பந்தம் இல்லாத இருவர் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ தங்கி இருந்து காவல் துறையில் பிடிபட்டால் அவர்கள் விபச்சார குற்றச்சாட்டு ஆளாகி நீதிமன்றம் வரை சென்று குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனையும் கிடைக்கும். ஆனால் அதே திருமண பந்தம் இல்லாத இருவர் ஒரு flat வாடகைக்கு எடுத்து மாதக்கணக்கில் திருமணம் ஆகாமலே வாழ்ந்து வந்தால் அது Living together கலாச்சாரம். அது தவறில்லை. 

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. 

(இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) [1] 

6 comments:

  1. ஸலாம் சகோ.ஹாஜா,

    நிறைய கற்க..கற்க... மூட நம்பிக்கை அகல வேண்டும். ஆனால், இங்கே கற்றவர்கள் மூட நம்பிக்கையை நோக்கி செல்கிறார்கள். அவர்களை அங்கே அழைப்பவர்கள் பெரிய கல்வியாளர்கள். என்னாச்சு.. இந்த சமூகத்துக்கு..?

    போகப்போக 'இஸ்லாமிய மருந்து' சமூகத்துக்கு நிறைய தேவைப்படுவதை த்தான் இந்த செய்திகள் காட்டுகின்றன.

    ReplyDelete
  2. சிறந்த பதிவு.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    கலாச்சார சீரழிவின் வேகம் அதிகரிப்பை தான் காட்டுகிறது. இதைப்போன்ற அபத்தமான, ஆபத்தான செய்திகள்!

    //இதில் வேதனை என்னவென்றால் இது கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு என்பது தான். //

    என்னத்த சொல்ல!?

    ReplyDelete
  4. வருகைக்கும், சுட்டி அளித்தமைக்கும் நன்றி சகோ வாழ்ஞ்சூர் அப்பா.

    ReplyDelete
  5. வாங்க சகோ முஹம்மத் ஆஷிக்,

    //போகப்போக 'இஸ்லாமிய மருந்து' சமூகத்துக்கு நிறைய தேவைப்படுவதை த்தான் இந்த செய்திகள் காட்டுகின்றன.//

    நிதர்சனமான உண்மை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete
  6. சகோ சுவனப்பிரியன், குலாம் : வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோஸ்

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...