பெரும்பாலான மாணவ, மாணவியர் +2 முடித்தவுடன் பி.இ. எனப்படும் என்ஜினியரிங் படிப்பு படிக்கவே விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும்.
ஆனால் சென்ற ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். மீதமுள்ள 30 ஆயிரம் சீட்டுகள் கடைசி வரை காலியாகவே கிடந்தன.
இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 94 பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவங்கப்பட உள்ளன. இதற்கு அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன, இவற்றில் பெரும்பாலான கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்து விடும் என்று தெரிகிறது.
இதன் மூலம் கூடுதலாக 12 ஆயிரம் மாணவ, மாணவியர் பொறியியல் படிப்பு படிக்கலாம். சுருங்கச் சொல்வதெனில் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சீட் ரெடி. இது தெரியாமல் நிறைய முஸ்லிம் மாணவ, மாணவியர் நிர்வாகக் கோட்டவுக்கு பல லட்ச ரூபாய் கொடுத்து விட்டு கை பிசைந்து நிற்பதை பார்க்க முடிகிறது.
பொறியியல் படிப்புக்கு மூன்று விதத்தில் சீட்கள் ஒதுக்கப்படுகின்றன. +2வில் மிக அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படும். இந்த சீட்களை பெற்றவர்களுக்கு வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வராது.
அதோடு நன்கொடையும் பெறப்படாது. அதற்கு அடுத்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படும்.
ஒரு தனியார் கல்லூரிகளில் 100 சீட்கள் இருந்தால் அதில் 60 சீட்கள் அரசு வசம் ஒப்படைக்கப்படும். அதே தனியார் கல்லூரி சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரியாக இருந்தால் 40 சீட்கள் அரசு வசம் ஒப்படைத்து விடுவார்கள்.
இப்படி அரசு வசம் ஒப்படைக்கப்பட்ட கல்லூரி சீட்களுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த சீட்களுக்கு கட்டணமாக ரூ. 32 ஆயிரம் வரை (வருடத்திற்கு) செலுத்த வேண்டியிருக்கும். இந்த சீட்களும் கிடைக்காமல் போகும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாக கோட்டா சீட் தான் கதி.
ஒரு தனியார் கல்லூரி 100 சீட்களில் 60 சீட்களை அரசு வசம் ஒப்படைத்து விட்டால் மீதம் 40 சீட்கள் இருக்குமல்லவா? இந்த 40 சீட்கள் தான் நிர்வாக கோட்டா சீட்கள் என அழைக்கப்படுகின்றன. தரமான கல்லூரிகளில் இந்த சீட் 3 லட்ச ரூபாய் வரை விலை போகிறது.
பிரபலமல்லாத கல்லூரிகளில் வெறும் 32 ஆயிரம் ரூபாய்க்கும் தரப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இந்த இட ஒதுக்கீடு கிடைத்த பிறகு எப்போதும் இல்லாத வகையில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் அதிக முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு இடம் கிடைத்துள்ளது.
இதில் இடம் கிடைக்காத முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு தனியார் கல்லூரிகள் அரசு வசம் ஒப்படைத்த சீட்களில் படிக்க இடம் கிடைக்கும். இதிலும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு உண்டு. அதனால் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் முஸ்லிம் மாணவ, மாணவியர் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இந்த மாதம் 31ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி விட வேண்டும்.
அடுத்த ஜீன் மாதம் 18ம் தேதியன்று ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு 28ம் தேதியன்று கவுன்சிலிங் தொடங்கும். அந்தக் கவுன்சிலிங் ஜீலை 25ம் தேதி முடிவடையும்.
ஒரு வேளை இச்செய்தி இப்போதைக்கு உங்களுக்கு பயன் தராவிட்டாலும், சமுதாய சொந்தங்களுக்கு இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக பயன் தரலாம். எனவே கால தாமதம் செய்யாமல் விரைவாக தேவையானவர்களுக்கு கொண்டு செய்யுங்கள்.
Thanks to : A. Jahir Hussain & பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
சில முக்கிய விஷயங்கள் மற்றும் தேதிகள்:
- கவுன்சிலிங் எனப்படும் கலந்தாய்வு விண்ணப்பங்கள் மே 4 ஆம் தேதியிலிருந்து கொடுக்கின்றனர்.
- விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி - 20.05.2013
- விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய கடைசி தேதி - 20.05.2013
- RANDOM NUMBER எனப்படும் எண் 05.06.2013 அன்று கொடுக்கப்படும்.
- ரேங்க் லிஸ்ட் 20.06.2013 அன்று வெளியிடப்படும்.
- கலந்தாய்வு ஆரம்பிக்கும் நாள் : 21.06.2013
- கலந்தாய்வு முடியும் நாள் : 30.07.2013
கலந்தாய்வு விண்ணப்பங்களை எங்கெங்கு பெற்று கொள்ளலாம் என்பதை இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்.ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் விண்ணப்பிப்பதற்கு முன் ரூ 500 (FOR GENERAL CASTE) & ரூ 250 (FOR RESERVED CASTE SC/ST) டிமாண்ட் டிராஃப்ட் (DD) எடுத்து வைத்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
Sincere Thanks to
1. http://www.annaunivedu.org/tnea-2013-important-dates/
2. http://www.annaunivedu.org/list-of-centres-to-get-tnea-application-form-2013/
தற்போது அண்ணா பல்ககைக்கழகத்திற்கு கீழ் உள்ள கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்கு இல்லாததால் கட் ஆஃப்(cut-off marks) மதிப்பெண்களை வைத்து தான் ரேங்க் பட்டியலை தயாரிப்பார்கள். அதன் மூலம் தான் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்வார்கள்.
இந்த கட் ஆஃப் மதிப்பெண்களை கீழ் கண்டவாறு மதிப்பிடலாம்.
பாடப்பிரிவு | +2 மதிப்பெண் | மதிப்பிடுதல் | கட் ஆஃப் மதிப்பெண்கள் | |
---|---|---|---|---|
1. | கணக்கு | 196 | 196/2 | 98 |
2. | இயற்பியல் | 179 | 179/4 | 44.75 |
3. | வேதியியல் | 183 | 183/4 | 45.75 |
கட் ஆஃப் மதிப்பெண் | 188.55 |
மேலே உள்ளது உங்களது புரிதலுக்காக 190, 179 மற்றும் 183 என்ற மதிப்பெண்கள் கொடுத்துள்ளேன்.
Thanks to http://www.paprix.com/2012/05/tnea-2012-how-to-calculate-cut-off-mark.html
தோழமையுடன்
அபு நிஹான்
சிறப்பான வழிகாட்டல் தந்தமைக்கு வாழ்த்துகள்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteபயனுள்ள பதிவு ஹாஜா பாய். ஜசாக்கல்லாஹ்
நன்றி சகோ ஜின்னா பாய் மற்றும் சகோ ஆஷிக் அஹமது
ReplyDeleteநீங்கள் சொன்ன தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. ஆனால், விலை பட்டியல் தான் கொஞ்சம் பழையது என நினைக்கிறேன். எனக்கு தெரிந்து இந்த வருட விலை அதிக பட்சம் பன்னிரண்டு லட்சம் வரை management seat-டிற்கு இப்போதுள்ள நடைமுறை, நெறிப்படுத்தப்பட்ட லஞ்சமாக தெரிகிறது. ரிசல்ட் வரும் முன்னரே பணத்தை கொடுத்துவிட வேண்டும். மெரிட்டில் சீட் கிடைத்தால், பணம் வாபஸ்!
ReplyDelete//ஆனால், விலை பட்டியல் தான் கொஞ்சம் பழையது என நினைக்கிறேன். எனக்கு தெரிந்து இந்த வருட விலை அதிக பட்சம் பன்னிரண்டு லட்சம் வரை management seat-டிற்கு இப்போதுள்ள நடைமுறை// இது இடத்துக்கு தகுந்தாற்போல் மாறுபடும். சென்னைக்கு ஒரு ரேட், தஞ்சைக்கு ஒரு ரேட். அது போல புகழ் பெற்ற கல்லூரிக்கு ஒரு ரேட், புதிய கல்லூரிக்கு ஒரு ரேட். deemed university என்று சொல்ல கூடிய நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு ஒரு ரேட். சென்னையிலேயே என் உறவினர் 2 லட்சம் நன்கொடை கொடுத்து போன வருடம் மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்தார்.
ReplyDeleteASSLMU ALKM BR..
ReplyDeleteVERY USEFUL INFORMATION.. WHAT ABOUT FORIEGN STUDENTS????? JZKMLLHU HAIRA.......
பயனுள்ள பதிவு தந்து மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் உங்கள் அன்பு உள்ளத்திற்கு நன்றி..
ReplyDeleteஅன்பின் ஹாஜா மைதீன் - வலைச்சர அறிமுகம் மூலமாக இங்கு வந்தேன் - அரிய தகவல்கள் - பயனுள்ள தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியுள்ளேன்.நன்றி பகிர்வுக்கு.
ReplyDeletehttp://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_18.html