Thursday, 30 May 2013

வியாபாரம் - LKG to Engineering

இன்றைய கல்வி முறைகளில் பல விதமான முரண்பாடுகள் இருப்பதை கானும் போது வரும் காலத்தில் கல்வி என்பது பலருக்கு எட்டாத கணியாகி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. நடப்பு கல்வியாண்டில் ஒரு எல்கேஜி படிக்கும் குழந்தைக்கு 24,000 ரூபாய் மாநகரத்தில இருக்குற பள்ளி கூடங்கள்ள கேட்குறாங்க. இது கூட பள்ளிக்கு பள்ளி மாறுபடும். இவ்வளவு கட்டணத்தை பெற்று கொண்டு art fees, craft fees, tution fees, bus fees, snack fees என்று ஏகப்பட்ட கட்டணங்களை வசூலித்து பெறும் காசு பார்க்கின்றனர் பள்ளி உரிமையாளர்கள். இந்த கொடுமையை கீழே இளையராஜா என்ற பல் மருத்துவர் பகிர்ந்துள்ளார், உங்கள் பார்வைக்கு.

கல்வி வியாபாரம்...!

என் பிள்ளையை பள்ளியில் சேர்க்கலாம்னு அப்ளிக்கேஷன் வாங்க போயி இருந்தேன்...ஃபீஸ் எவ்வளவுன்னு விசாரிச்சா 24000 ரூபாய் கேக்கிறாங்க.மூன்று வயசு பிள்ளைக்கு இவ்வளவு ஃபீஸ் வாங்கி என்ன சொல்லி தர போறாங்கன்னு தெரியலை...

சென்னைல எவ்வளவுவுன்னு விசாரிச்சா பெரிய கல்வி கொள்ளையே அங்க தான் நடக்குதாம் என் தங்கச்சி தன் மூன்று வயது குழந்தைக்கு தனியார் பள்ளியில் ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டி சேர்த்து இருக்காங்களாம்.இந்த பணத்துக்கு ரசீது எதுவும் தரமாட்டாங்களாம்,ஜூன் மாதம் பள்ளியில் சேர்ப்பதற்கு இந்த மாதமே பணத்தை கட்டிட வேண்டுமாம் இல்லைன்னா அட்மிசன் கிடையாதாம்...

விதைக்க வேண்டிய கல்வி இன்று பணத்துக்கு அடமாணம் வைக்கபட்டிருக்கிறது.நான் பல் மருத்துவம் படிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு 19,500 ரூபாய் கல்லூரியில் கட்டினேன்,இன்று என் மூன்று வயது மகனுக்கு 24,000 ரூபாய் கட்டுகிறேன். கல்வி துறை எங்கே போய் கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை.

இன்று பல பள்ளிகளில் சிந்திக்க செய்யும் வழிகளில் பாடம் நடத்தாமல் மனப்பாடம் செய்ய சொல்லி பாடம் நடத்துகிறர்கள்.சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை,நம் பிள்ளைகளை கிளிகளாக்கவா பள்ளிக்கு அனுப்புகிறோம்.

பிள்ளைகளுக்கு பள்ளிகள் , என்ன படிக்கிறோம் என்பதை சொல்லிக்கொடுத்து சிந்திக்க வையுங்கள் , ஏண்டா படிக்கிறோம் என்ற நிலைக்கு தள்ளாதீர்கள்... குதிரைக்கு கடிவாளம் கட்டுவது போல் பிள்ளைகளுக்கும் கடிவாளம் கட்டாதீர்கள், நாலாப்பக்கமும் பார்க்க விடுங்கள் அவர்களை சிந்திக்க விடுங்கள்...

கற்கும் போது கல்வி கசப்பாகத்தான் இருக்கும் கற்றப்பின் கரும்பினை போல சுவையாக இருக்கும் இன்று கல்வி நிலையங்களே கசக்கின்றது...

அரசாங்கம் எது எதுக்கோ இலவசம் கொடுக்கிறது, எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி கொடு, தனியார் பள்ளிகளின் கல்வி கொள்ளையர்கள் மேல் சரியான நடவடிக்கை எடு...! தரமான கல்வி கொடு...!

நன்றி : Ilayaraja Dentist.

இது ஒரு பக்கம் இருக்க, மறுபுறம் மாணவர்கள் கல்வியை எப்படி அனுகுகிறார்கள் என்று கவனித்தால் மனது இன்னும் பதபதக்கிறது. பொறியியல் மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் கடைசி செமஸ்டர் (6 மாத காலம்) அவர்களின் தனித்தன்மையை சோதிக்கும் விதமாக அவர்கள் படிப்பு சார்ந்த விஷய்ங்களில் பிராஜக்ட் பண்ண சொல்லி அதற்கு மதிப்பெண்கள் வழங்குவது வழக்கம். இது சில இளநிலை பட்டயப் படிப்புகளிலும் உண்டு. இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா? இதிலும் மாணவமணிகள் பணம் கொடுத்து அதை போன்ற பிராஜக்ட்களை விலைக்கு வாங்கி அது சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட வாங்கிய கடைகளில் இருந்தே விளக்கங்கள் பெற்று அந்த செமஸ்டரை தேற்றி விடுவர். இது இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. முன்பு இது குறைவாக இருந்தது. இன்று அது பல மடங்காக பெறுகி சொந்தமாக பிராஜக்ட் செய்யும் ஆட்கள் மிகவும் குறைந்து ஒரு வகுப்பில் ஒன்று இரண்டு அதுவும் ஞானப்பழம் என்றும் பழம் என்றும் பட்டப் பெயர் வைத்து (பட்ட பெயர் வைப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது) அழைக்கும் சில முதல் பென்ச் மாணவமணிகள் மட்டும் செய்யும் ஒரு விபரீத / விசித்திர விஷயமாக ஆகிவிட்டது. பல நேரங்களில் இந்த சொந்த பிராஜக்ட் பண்ணியவர்களே viva என்று சொல்ல கூடிய நேர்முகத் தேர்வில் சிக்கி சின்னாபின்னமாகும் போது பைசா கொடுத்து பிராஜக்டை வாங்கியவன் கூலாக பதில் சொல்லி விட்டு 100 க்கு 100 மதிப்பெண் வாங்கி வருவான். பார்த்தால் கண்ணில் இரத்த கண்ணீரே வரும்.

நடப்பாண்டுகளில் பிராஜ்க்ட்கள் ரூபாய் 2,000 முதல் 20,000 வரை வெளி மார்க்கெட்டீலேயே கிடைக்கின்றன. நார்மல் பிராஜக்ட்கள் என்றால் விலை மலிவு. Embedded system போன்ற ஸ்பெஷல் பிராஜக்ட்களுக்கு விலை அதிகம் என்கிறார் பிராஜக்ட்களை செய்து விற்பனை செய்யும் முகவர்.

இதை பற்றி சில நாட்கள் முன்பு (ஹி ஹி பிப்ரவரி 19 தான் அந்த சில நாட்கள் முன்பு) ஹிண்டு பத்திரிக்கையில் வந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 நன்றி :  இளையராஜா பல் மருத்துவர், தி ஹிந்து
டிஸ்கி1: பொறியியல் படிப்புகளின் இறுதி செமஸ்டர்களின் நடப்பது போன்றே அறிவியியல் படிப்புகளிலும் (BSc Computer Science, MSc CS, IT, MCA etc.,) நடக்கிறது என்பதையும் இந்த் இடத்தில் சொல்லி கொள்கிறேன். 

டிஸ்கி2: பொறியியல் கல்லூரிக்கான random number என்று சொல்ல கூடிய எண் ஜூன் மாதம் 5 ஆம் தேதி அறிவிப்பார்கள், மற்றும் ரேங்க் பட்டியல் 12 ஆம் தேதி அறிவிப்பார்கள். ஜூன் மாதம் 21 ஆம் தேதியிலிருந்து ஜூலை மாதம் 30 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.
தோழமையுடன் 
அபு நிஹான்

1 comment:

  1. ஒண்ணும் சொல்லத் தோணமாட்டேங்குது. நல்லவேளை என் பிள்ளைகள் இந்தியாவில் படிக்கவில்லை என்ற நிம்மதி மட்டும். (இங்கயும் ஃபீஸ் எக்கச்சக்கம்தான். ஆனா, டொனேஷன் இல்லை)

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...