Monday 26 July 2010

முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை

சகோதர சகோதரிகளே, இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது  உண்டாகட்டுமாக! 

தலைப்பை படித்தவுடன் முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை விகிதாச்சார அடிப்படையில் குறைந்தது பற்றி இந்த பதிவு என்று நினைக்க வேண்டாம். இதில் அரசாங்க கல்லூரிகளின் சலுகைகள் பற்றி, நம்மவர்கள் அதில் கவனம் செலுத்தாதது பற்றியும் விரிவாக காணலாம். சமீபத்தில் நான் படித்த செய்தி இந்த பதிவு எழுதுவதற்கு உந்தியது. 

Wednesday 14 July 2010

மார்க்கத்தின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்து விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்ராயம் கொள்வதற்கு, விசுவாசியான எந்த ஆணுக்கும், எந்த பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ அவர், பகிரங்கமான வழிகேடாக திட்டமாக வழி கெட்டுவிட்டார். (அல்குர்ஆன்:33:36) 

இந்த ஒரு அத்தியாயம் மட்டுமே போதும், மார்க்கத்தின் உரிமை அல்லாஹ்விற்கே உரியது என்று சொல்வதற்கு. இறைவனுடைய சொல்லையே வாழ்க்கையாக வாழ்ந்து காட்டிய நபி (ஸல்) அவர்களுக்கே மார்க்கத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை அல்லாஹ் கொடுக்கவில்லை என்றால், இன்று மவ்லவிகள், இமாம்கள், ஷெய்குமார்கள் என்று சொல்லக் கூடியவர்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஒளியில்லாமல் மார்க்கத்தின் அதிகாரத்தில் கை வைக்க, மார்க்கத்தில் புதிதாக ஒரு விஷயத்தை இபாதத் என்று சொல்லவோ அல்லது மார்க்கத்தில் சொல்லப்பட்ட இபாதத்களை நீக்கவோ, திருத்தம் செய்யவோ என்ன அதிகாரம் இருக்க முடியும். 

எத்தனையோ விஷயங்களில் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருந்தாலும் இமாம்களின் பெயரால், மவ்லவிகளின் பெயரால், 7 வருடம் ஓதியவர்கள் என்ற பெயரால் எவ்வளவு அனாச்சாரங்களை நாம் நித்தம் நம் வாழ்க்கையில் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு விஷயம் இபாதத் என்று முடிவு செய்வதற்கு அதிகம் தகுதியானவன் அல்லாஹ். அவன் அல்லாது அவனுடைய திருத்தூதருக்கே தனிப்பட்ட முறையில் அல்லாஹ்விடமிருந்து வஹி வராமல் எதையும் இபாதத் என்றோ அல்லது மார்க்கம் என்றோ முடிவு செய்ய அனுமதி இல்லை. 

நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்படாத அதிகாரம் 

“லவ்லாக லமா கலக்துல் அஃப்லாக்” – உம்மைப் படைக்கும் நோக்கமில்லாது இருந்தால் இந்த உலகையே படைத்திருக்க மாட்டேன்”. (ஹதீஸ் குத்ஸி) என இறைவனே நபி பெருமானாரை சிறப்பித்துக் கூறியுள்ளான். 

அப்படி சிறப்பு வாய்ந்த நபிக்கே மார்க்கத்தில் சொந்த கருத்தைக் கூற அனுமதி இல்லை என்னும் பட்சத்தில் நான்கு இமாம்களுக்கு/ மவ்லவிகளுக்கு / ஷெய்குமார்களுக்கு எப்படி அனுமதி/அதிகாரம் இருக்க முடியும். நான்கு இமாம்களுக்கு/ மவ்லவிகளுக்கு/ ஷெகுமார்களுக்கு அனுமதி / அதிகாரம் இல்லை என்று சொன்னால் இமாம்களை கண்ணியக் குறைவாக பேசுகிறோம் என்று சிலர் கூறுகின்றனர். நபி(ஸல்) அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மார்க்கத்தில் சட்டம் இயற்ற அனுமதி அளிக்கப்படவில்லை என்று சொன்னால் நபி (ஸல்) அவர்களை கண்ணியக் குறைவாக பேசுகிறோம் என்று யாராலும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வே நபி(ஸல்) அவர்களை தனிப்பட்ட முறையில் தன்னிடம் இருந்து வஹி வராமல் மார்க்க அதிகாரத்தில் முடிவு எடுக்கக் கூடாது என்று கூறியிருக்கிறான். 

இதற்கு சான்றாக நிறைய சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றில் உள்ளது. 

Tuesday 13 July 2010

திட்டச்சேரியிலிருந்து ஒரு சர்வதேச சாதனைச் செல்வி


உலகம் முழுவதிலும் கேம்ப்ரிட்ஜ் IGCSE தேர்வு முறையைப் பின்பற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு பெற்ற ஏறத்தாழ 2000 பள்ளிகளின் மாணவ-மாணவியர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதின்மருள் ஒருவராகக் கல்வியில் வாகை சூடுவது என்பது - அதிலும் "அ" தாரகை(A Star) ஆக ஜொலிப்பதென்பது - சாதாரணச் செயலன்று.

இந்த அசாதாரண சாதனையை, நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்த செல்வி சல்மா புரிந்திருக்கிறார்.

ஆண்டுதோறும் கேம்ப்ரிட்ஜ் பலகலைக் கழக உலகளாவியத் தேர்வுகள்(University of Cambridge International Exams - CIE)' மையம் நடத்தும் 'உலகளாவிய உயர்நிலைப் பள்ளிக் கல்வி(International General Certificate of Secondary Education)'யின் 2009ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் கடந்த அக்டோபர் 2009இல் நடைபெற்றன. அவற்றின் முடிவுகள் கடந்த பிப்ரவரி 2010இல் வெளியாகின. உலகளாவிய ஒப்பீட்டு முடிவுகள் கடந்த வாரம் வெளியாகியுள்ளன.

மேற்காணும் உலகளாவிய தேர்வுக்கு, மூலாதாரப் பாடத்திட்ட (The core syllabus) முறையில் 5 கட்டாயப் பாடங்களைத் தேர்வு செய்து "இ" படிநிலை விருதை வெல்லும் எளிய வழியையே பெரும்பாலான மாணவ-மாணவியர் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், "அ-தாரகைப் படிநிலை விருதை வென்றெடுப்பதற்காக ஆழமான படிப்புத் தேவைப்படும் பத்துப் பாடங்கள் அடங்கிய மீநிலைத் (Advanced syllabus) திட்டத்தை எனது தேர்வாகக் கொண்டேன்" என்கிறார் சல்மா.

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...