அஸ்ஸலாமு அலைக்கும்.
எல்லோரும் நலமா?
செய்தி தாள்களில் என்ன முக்கியமான செய்தி என்று பார்த்து கொண்டிருக்கையில் இந்த விஷயம் கண்ணில் பட்டது
திருச்சி. : திருச்சி மாநகர போலீசார் தீபா வளி பெயரில் வசூல் செய்வதோ அன்பளிப்பு பெறுவதோ கூடாது என போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மாநகர போலீசுக்கு தெரிவித்திருப்பதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மாநகர போலீசார் சார்பில் தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் பணம் வசூலிக்க கூடாது. பட்டாசு பாக்ஸ் மற்றும் புத்தாடைகளை அன்பளிப்பாக பெறக்கூடாது. மாநகரில் உள்ள 13 போலீஸ் ஸ்டேஷன்களை சேர்ந்த போலீசாரும் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஸ்டேஷன்களில் தீபாவளி தொடர்பாக மேற்கொள்ளப்படும் எந்தவித நடவடிக்கையாக இருந்தாலும் உடனடியாக நுண்ணறிவுப்பிரிவு போலீசார் கண்காணித்து தன்னிடம் நேரிடையாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது எவ்வளவு முக்கியமான விஷயம். பண்டிகை காலங்கள் வந்து விட்டாலே வியாபாரிகள் தங்களுடைய குடும்பத்துக்கு சிலவு செய்ய பணத்தை ஒதுக்குகிரார்களோ இல்லையோ கண்டிப்பாக அரசு அலுவலர்களுக்கு (அதிலும் குறிப்பாக காவல் துறைக்கு கொடுப்பதற்காக நிதியை ஒதுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். பண்டிகை காலங்கள் ஆரம்பிக்கும் முன்னரே அந்த வழியாக எப்போதுமே போகாத காவலர் அங்கு சென்று என்னய்யா? எப்படி தொழில் போகுது, முன்ன மாதிரி இல்லை, இப்போ புது எஸ்.ஐ / இன்ஸ் / ஏ.சி வந்திருக்காரு பாத்து செய்யுங்க என்று வாய் கூசாமல் கூறுவர். வியாபாரியும் தங்களுக்கென்று ஏதேனும் பிரச்சனை என்றால் காவல் துறையை தானே நாட வேண்டும் என்று அவர்களுக்கு படியளப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பல பண்டிகை காலங்களில் வியாபாரமே படுத்து கிடக்கும் அப்போது கூட கொடுக்க வேண்டியதை கொடுத்தால் தான் காவல் துறையினர் சாந்தம் அடைவர். இல்லையேல் வியாபாரிக்கு பிரச்சனை தான். இதில் பிளாட்பார்மில் கடை வைத்திருப்பவர் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அனைத்து அதிகாரிக்கும் படியளக்க வேண்டும் பட்டாசு வியாபாரி, இனிப்பு வியாபாரி, துணி வியாபாரி, என்று ரகம் பிரித்து அவர்கள் சக்திக்கு ஏற்ப கறந்து விடுவதில் கெட்டிக்காரர்கள் காக்கி சட்டைக்காரர்கள். இங்கு காக்கி சட்டை என்று சொல்லப்படுபவர்கள் காவல் துறையினர் மட்டுமல்ல, மின்சார வாரியத்தினர் (இப்போது மின்சார வாரியத்தினர் ஏதும் வாங்க முடியாது என்பது தனி கதை), தொ(ல்)லைத் தொடர்பு நிர்வாகத்தினர் அனைவரும் இந்த வளையத்தினுள் வருவர். சிலர் 60 பக்கம் நோட்டை எடுத்து கொண்டு என்ட்ரி போட சொல்லுவர் (கவுரவ பிச்சை எடுப்பதற்கு இன்னொரு பெயர் பண்டிகை கால பணம்:) ) நோட்டை கொண்டு வந்து விட்டார்களே என்பதற்காக 100, 200 என்று எழுதுபவர்கள் உண்டு.
இதை போன்ற அதிகாரிகளுக்கு மத்தியில் தைரியமாக பணம் வாங்க கூடாது என்று சொன்ன கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் அவர்களை பாராட்டுகிறேன். இதை போலவே மற்ற கமிஷனர்களும் இன்னும் மற்ற துறைகளில் உள்ள உயர் அதிகாரிகளும் அறிவித்தால் மாற்றங்கள் காணலாம்.

இலஞ்ச ஒழிப்பு பற்றி பேசும் போது உமா சங்கர் இ.ஆ.ப, சகாயம் இ.ஆ.ப போன்றவர்களை பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. அவர்கள் தொடங்கி வைத்த போராட்டத்தை எல்லோரும் தொடர வல்ல இறைவனிடத்தில் இறைஞ்சுவோம்.
இலஞ்சம் வாங்குவது குறித்து இஸ்லாம்
‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா.
தோழமையுடன்
அபு நிஹான்
சலாம்!
ReplyDeleteகாலத்துக்கேற்ற அவசியமான பதிவு!
தலைப்பு சூப்பர். ஆத்திச்சூடியில் இதையும் இணைக்கலாம்.
ReplyDelete// இதை போன்ற அதிகாரிகளுக்கு மத்தியில் தைரியமாக பணம் வாங்க கூடாது என்று சொன்ன கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் அவர்களை பாராட்டுகிறேன். //
ReplyDeleteநானும் அவர்களை மனம் திறந்து பாராட்டுகிறேன்....
இன்றைய உலகில் ஒவ்வொரு ஊரிலும் முக்கிய ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்சனைகளில் முதலிடத்தில் வருவது லஞ்சம் ! இதில் லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் இந்திய சட்டப்படி குற்றமாகும். நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகள் [ PROFESSIONAL TAX, SALES TAX, CENTRAL SALES TAX, CUSTOM DUTY, INCOME TAX, Dividend Distribution TAX, EXCISE DUTY , MUNICIPAL & FIRE TAX, STAFF PROFESSIONAL TAX, CASH HANDLING TAX, FOOD & ENTERTAINMENT TAX, GIFT TAX, WEALTH TAX, STAMP DUTY & REGISTRATION FEE, INTEREST & PENALTY, ROAD TAX, TOLL TAX , VAT & etc… ] மூலமாகவே ஒவ்வொரு அரசு ஊழியர்களும் அவர்களுடைய சம்பளமாகப் பெறுகிறார்கள்.
ReplyDeleteஇதில் அவர்களுடைய கடமையை செய்ய எதற்கு நாம் பணம் கொடுக்க வேண்டும் ? முன்பெல்லாம் அதிகாரத்தை மீறுவதற்கு லஞ்சம் கொடுத்தார்கள் ஆனால் இன்று முறைப்படி நடக்க வேண்டிய வேலைகளுக்கும் லஞ்சம் கொடுக்கிறார்கள்.