Thursday 29 September 2011

இருதயம் காப்போம்

டாக்டர் அனுராதா கிருஷ்ணன்


இதயத் தன்மை உள்ளவர்களே! உடலினை உறுதி செய்யும் நான்காம் படி நிலையான கொழுப்பின் இரகசியங்களை இன்னமும் புரிந்து கொள்வோம். இருதயத்தின் இயங்கு தன்மை என்பது இரத்த குழாய்களின் மென் தன்மையைப் பொருத்தது என்று சென்ற இதழில்பார்த்தோம். அன்பர்களே! நமது உடலில் 90,000 மைல்களுக்கு இரத்த குழாய்கள் பிரிந்து, கிளைத்து விரிந்து கிடக்கின்றன. இத்தனை மைல்களில் எங்கு கெட்ட கொழுப்பின் பிசிர் தட்டினாலும் இருதயத்திற்கு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தத்தை நீக்க நமது இருதயம் சற்று கூடுதலாக தன் பிழிந்து உறிஞ்சும் செயலை அதிகப்படுத்தி நீக்க முயற்சிக்கும். நாம் உண்ணும் உணவில் எவ்வித மாற்றங்களும் செய்யாது இருந்தும், பழக்க வழக்கங்களில் எவ்வித மாற்றமும் செய்யாமல் இருப்பதாலும், கெட்ட கொழுப்பானது இரத்த குழாய்களில் துரு ஏறுவதுபோல் படிமமாக (Sedimentation) ஏறத்தான் செய்யும். நாம் முன்னமே பார்த்தது போல் கெட்ட கொழுப்பு கடினத்தன்மை கொண்டது என்று தெரியும் தானே? இதனால் இரத்த குழாய்கள் கடினத்தன்மையாக மாறி சுருங்கி விரியும் தன்மையை படிபடியாக இழக்கின்றன. இப்படிப்பட்ட குழாய்களில் இருந்து இருதயம் இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ள மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். இந்த அதிகப்படியான பிரயத்தனமே இரத்த அழுத்தமாக இரத்த குழாய்களிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் உணர்கிறோம். இதன் காரணமாக ஒருவித அவசரத்தனமும் பதட்ட நிலையும் நம்முள்ளே ஏற்படுகிறது. இதனால் நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் நிலைக்கு ஆளாகிறோம். இந்த நிலையில் தான் உங்களுக்கு ஆட இருப்பதாக கண்டறிகிறார்கள். உங்கள் மருத்துவரும் உங்களுக்கு ஆட மாத்திரைகள் கொடுக்க ஆரம்பிக்கிறார். இந்தப் பிரச்சனை எப்போது தீரும் என்று நீங்கள் கேட்கும்போது, உங்கள் மருத்துவர் கூறும் பதில் என்ன தெரியுமா? “Long Life வாழவேண்டுமானால், Long Life BP மாத்திரைகள் சாப்பிட வேண்டும்” என்பதே! இதில் உண்மை இருக்கிறதா? அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...