Monday 17 October 2011

தமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ?

டெரர்கும்மியில் அடித்த நகைச்சுவை பதிவிற்கு சகோதரர் இரமணிதரன் அளித்த பதில் பதிவர்களை பலரை மிகவும் வருத்தமடையச் செய்தது. இதோடு நில்லாமல் இஸ்லாமியர்கள் கூறும் அழகிய முகமனை கேலி செய்யும் விதமாக 

"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்" 

என்று கூறி முஸ்லீம்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டது. அதற்கு விளக்கமளிக்குமாறு தமிழ்மணத்தின் நிர்வாகியை தொடர்பு கொண்ட போது சகோதரர் இரமணிதரனுக்கும், தமிழ்மணத்திற்கும் சம்பந்தமே இல்லாதது போல் பொறுப்பற்ற பதில் வந்தது. அதுமட்டுமல்லாமல் நாகரிகமாக தனிப்பட்ட முறையில் மெயிலில் விளக்கம் கேட்டதை நக்கலடித்து உச்ச கட்டம். ஒரு வேளை அவர்களுக்கு நாகரிகம் என்றால் என்ன என்று தெரியாததால் தானோ என்னவோ? 


பொறுப்பற்ற பதில்:


பதிவருக்கு,

இரமணிதரனின் எங்கோ ஒரு தனிப்பதிவிலே சொன்ன அவரின் தனிப்பட்ட சொல்லாடல் உங்களைக் கேலி செய்கின்றதென்று கருதிக்கொண்டால், அதற்கு எதற்காகத் தமிழ்மணம் விளக்கம் சொல்லவேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்? இரமணிதரன் அங்கே இச்சொல்லாடலைச் செய்தபோது, தமிழ்மணம் சார்பிலே சொல்கிறேனென்று சொல்லியிருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்தாமல் 

எதற்காகத் தமிழ்மணத்துக்கு அனுப்புகின்றீர்கள்? 


ஆனாலும், ஏனென்றால், இரமணிதரன் சம்பந்தப்பட்ட விடயத்திலே இரமணிதரனே பதில் சொல்வது நியாயமில்லை என்பதாலே மற்றைய நிர்வாகிகளுக்கும் அனுப்பியிருக்கின்றேன். 


/இந்த மெயில் தமிழ்மணத்தில் இணைந்துள்ள பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களுக்கு bcc போடப்பட்டுள்ளது/
இதற்கு தமிழ்மணம் என்ன செய்யவேண்டும்? 


==
புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

இரமணிதரன், க.
தமிழ்மணம் உதவிக்குழு 

இப்படி ஒரு பொறுப்பற்ற பதிலைத்தான் சகோ இரமணிதரன் (தமிழ்மணம் சார்பாக) எழுதியிருக்கிறார். தவிர டெர்ரர் கும்மியில் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்மணம் சார்பாக எழுதிவிட்டு, இப்போது அது இரமணிதரன் தனிச்சையாக எழுதியது என்று சப்பை கொட்டுகிறார். 

கமெண்ட் போட்டதில் தமிழ்மணத்திற்கும் சகோ இரமணிதரனுக்கும் சம்பந்தமில்லை என்றால் கீழே உள்ளதுக்கு என்ன அர்த்தம்??



சகோ இரமணிதரனுக்கு புரியவில்லையா? அல்லது தந்திரமாக பேசுவதாக நினைத்து மொக்கையாக காரணம் சொல்கிறாரா? தெரியவில்லை?

இதற்கு கண்டிப்பாக தமிழ்மணம் பதில் சொல்லியே ஆக வேண்டும். தவிர சக பதிவர்களை மரியாதை இல்லாத வார்த்தைகளில் பேசியது, வரம்பு மீறி வசை மழ பொழிந்தது போன்றவைகளுக்கு கண்டிப்பாக தமிழ்மணம் பதில் சொல்லியே ஆக வேண்டும். 

”..நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்" - குர்ஆன் 5:2 

பதிவர்கள் ஓற்றுமை ஓங்குக 

கண்டனம் தெரிவிக்க விரும்புபவர்கள் admin@thamizmanam.com என்ற இணையதளத்திற்கு மின்னஞ்சல் அனுப்பவும். 

நான் தமிழ்மண ஓட்டுப்பட்டையை தூக்குவது பற்றி முடிவு செய்து விட்டேன் (தூக்குவதென்று). அப்ப நீங்க?? 

இது சம்பந்தமாக மற்ற பதிவர்களின் பட்டைய கிளப்பும் பதிவுகள் 



















அபு நிஹான்

டிஸ்கி : இந்த வருட கேவலமான பஞ்ச் டையலாக் : புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

10 comments:

  1. Click the link below and read.

    1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


    2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


    3.
    தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!



    4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

    5.
    தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!



    6.
    தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?



    7.
    தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..



    8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


    9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


    10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


    11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


    12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


    13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


    14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


    15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


    16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


    17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

    18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...


    19. தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்


    20. தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!


    21. யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை

    22. பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.


    23. தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ?


    24. சீ தமிழ் மனமே .......

    25. தமிழ்மணம் – வாசமில்லாது போனது ஏனோ?

    .

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    //இந்த வருட கேவலமான பஞ்ச் டையலாக் : புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.//

    உண்மையிலேயே கேவலமான டயலாக் தான்

    ReplyDelete
  3. தமிழ்மணமே மன்னிப்புகேள்


    தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்...

    ReplyDelete
  4. //டிஸ்கி : இந்த வருட கேவலமான பஞ்ச் டையலாக் : புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.//

    அப்படி போடு :-)

    செம செம

    ReplyDelete
  5. கலக்கலான முடிவு...

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    நம் அனைவர்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.......!

    என்னால் இணையத்தில் சரிவர உலா வர முடியாமையால் என்னுடைய கண்டனத்தையும் தமிழ் மணத்திற்கு வெளிப்படுத்த முடியவில்லை, இருந்தும் நம் சகோத மக்களின் ஒற்றுமையால் ஏக இறைவனின் உதவியால் வெற்றி கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.........!

    தமிழ் மணம் ஒரு உயர்ந்த திரட்டி, அதன் சார்பாக எதை வெளியிட்டாலும் மறுப்பு தெரிவிக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இரமனீதரன் (பெயர்லி) தமிழ் மணம் மூலமாக உலா வந்துக்கொண்டிருந்தார், அதை நம் சகோத தகர்த்தெரிந்தார்கள் என்பதை அந்த வெந்த மணம் உணர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்...........!

    மேலும் நம் சகோ இதுப் போன்ற விஷயங்களை கண்டறிந்து சுட்டிக்காட்டுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். வஸ்ஸலாம்...........

    ReplyDelete
  7. @ சகோ UNMAIKAL
    @ சகோ ஹைதர் அலி
    @ சகோ அப்துல் மாலிக்
    @ சகோ ஆமினா
    @ சகோஃபாயிக்
    @ சகோ குலாம்
    @ சகோ அஸ்மா
    @ சகோ haja

    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  8. ஸலாம்
    உங்கள பார்த்து எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு பா . மார்க்க விசயத்துல கலக்குறீங்க பா .
    பொறமை படலாம்ல..........


    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக்கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்: இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக்கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்)
    அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அஸ்வுத் (ரழி) ஆதாரம்: புஹாரி 73

    ReplyDelete
  9. கலக்கலான பதிவு...
    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.

    www.rishvan.com

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...