Wednesday, 28 April 2010

முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி !



முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி !


குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில், 'குடும்பத்தில் முதல் பட்டதாரி' என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டக் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், தொழிற்கல்வி படிப்பை ஊக்குவிக்க சாதி பாகுபாடின்றி, வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்' என, ஜனவரியில் சட்டசபை கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Sunday, 25 April 2010

பாபர் மசூதி இடிப்பு குறித்த தகவல் உ.பி. போலீஸுக்கு முன்பே தெரியும் – ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா



ரேபரேலி: அயோத்தியில் பாபர் மசூதியை பாஜகவினரும், சங் பரிவார் அமைப்பினரும் இடிக்கப் போவது குறித்த உளவுத் தகவல் ஏற்கனவே உ.பி. போலீஸாருக்குத் தெரியும் என்று ரேபரேலி கோர்ட்டில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா கூறியுள்ளார்.


கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் அஞ்சு குப்தா. சமீபத்தில் இவர் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அத்வானி உள்ளிட்டோருக்கு எதிராக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

Thursday, 22 April 2010

இந்தியாவில் வறுமை கோடுக்கு கீழ் 31% முஸ்லிம்கள்


இந்தியாவில் வறுமை கோடுக்கு கீழ் 31% முஸ்லிம்கள்: பொருளாதார ஆய்வில் தகவல்

டெல்லி: இந்தியாவில் 31 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோடுக்கு கீழ் இருப்பதாக தேசிய பயன்பாட்டு பொருளியல் ஆய்வுக் குழு ​(என்.சி.ஏ.இ.ஆர்)​ நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர்,​​ மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கும் கல்வி வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் இந்த சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.

Wednesday, 21 April 2010

உண்மையான முஸ்லிம்



இவரெல்லாம் சிலருக்குத் தெரியமாட்டார்கள்

முஸ்லின் என்றால் ...
"ஓர் உண்மையான முஸ்லிமாகிய என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது"
"As a devout Muslim I could not accept it"
இது, நியூயார்க்கைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநரான சகோதரர் முஹம்மது முகுல் அவர்கள், தன் டாக்சியில் ஒருவர் விட்டுச்சென்ற மிகப்பெரிய தொகையைத் திருப்பி கொடுத்தபோது, அதனைப் பாராட்டி ஒரு குறிப்பிட்ட தொகையை, அந்தப் பணத்தைத் தொலைத்தவர், பரிசாகக் கொடுக்க முன்வந்தபோது சொன்ன வார்த்தைகள்.
சுமார் நான்கு மாதங்கள் காலம் கடந்த செய்தி என்றாலும் இவருடைய செயல் நமக்கு ஒரு முன்னுதாரணமாய் இருப்பதால் இங்கே பிரசுரிக்கப்படுகிறது.

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...