Thursday, 28 October 2010

முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை - மைல்கல் - 3- கல்வியும் பெற்றோரும்

பெற்றோரும் கல்வியும்
என் மகன்/மகள் 10 ஆவது படிக்கிறான்(ள்), 12 ஆவது படிக்கிறான்(ள்). அவன்(ள்) இஷ்டத்திற்கு விட்டுட்டேன், அவன்(ள்) என்ன படிக்குனும்னு ஆசைப்படுறானோ(ளோ) அதையே படிக்கட்டும்னு நம்ம பெற்றோர்கள் பலர் சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் என்ன படிக்க வேண்டும் அல்லது அவர்கள் என்னவாக ஆக வேண்டும் என்ற ஞானம் பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. இது அவர்கள் கல்வி கற்காததால் வந்த பிரச்சனை. கல்வி கற்காமல் போனதற்கு நாம் அவர்களை குறை கூற முடியாது. ஆனால் இது பற்றி கல்வி கற்றவர்களிடம் ஆலோசனைக் கேட்கலாம். இது கேட்காமல் போனால் பிள்ளைகளை சரியான பாதைக்கு வழிகாட்டாமைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம் ஆகிவிடுவர். 

சீன தேசம் சென்றாயினும் கல்வியைத் தேடு என்ற நபிமொழியில் உலகக் கல்வியின் அவசியத்தை நாம் அறியலாம். Sunday, 17 October 2010

முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை - மைல்கல் - 2


GATE Exam

முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை என்ற பதிவை முதலில் படிக்க வேண்டுகிறேன்.

பொறியியல் கல்லூரியில் படித்து விட்டு மேற்படிப்பு ப்அடிக்க இருக்கும் மாணவர்கள் பயப்படுவது, படிப்புக்கு அதிகம் சிலவாகுமே, ஆதலால் நாம் படிப்பை இதோடு நிறுத்துக் கொள்வோம் என்று முடிவெடுக்கிறார்கள். அவர்கள் எண்ணம் தவிடுபொடியாகும்படி அரசாங்கமே இலவசமாக படிப்புதவித் தொகை அளித்து உலக தரத்தில் ஒரு உயர்வான கல்வியையும் வழங்குகிறது. ஆனால் இது பெருமாலான மக்களுக்கும், கிராம வாழ் மாணாக்கர்களுக்கும் தெரியவில்லை என்பதே வருத்தமான விஷயமாகும். Saturday, 16 October 2010

தாய் என்பவள் …

தாய்
நம் வாழ்க்கையில் மிக முக்கியமான பருவம் குழந்தை பருவம். அந்த குழந்தைப் பருவத்தில் மிக முக்கிய பங்காற்றக் கூடியவர்கள் பெற்றோர்கள். தாயிடத்தில் அன்பையும் தந்தையிடத்தில் அறிவையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் சிலருக்கு தந்தையிடமே இரண்டும் கிடைக்கும். சிலருக்கு எதிர்மறையாக கிடைக்கும். ஆனால் எங்கள் வீட்டை பொருத்தவரை என்னுடைய தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததால் தந்தையிடமிருந்து பெற வேண்டிய அறிவும் தாயிடமிருந்தே கிடைத்தது. தந்தை வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்தாலும் அவரிடம் பேசுவதற்கே எங்களுக்கு பயமாக இருக்கும். ஆனால் எங்களுடன் இருக்கும் போது பல விஷயங்கள் மலேசியாவை பற்றி சொல்லுவார்கள், மலாய் மக்களின் பாரம்பரியம், உணவு முறைகள், அவர்களின் கலாச்சாரம் என்று எங்களுடைய அறிவுத் தேவையை பூர்த்தி செய்வார்கள். இப்படி அவ்வப்போது எங்களுடைய அறிவுக்கு தீணியாக தந்தை இருந்த போதிலும், தாய் தான் எங்களை கூர்மையாக கவனித்து சிறு வயதில் தேவையானதை எங்களுக்கு சொல்லிக் கொடுத்து, பிறந்தது முதல் இப்போது வரை எங்களை சரியான முறையில் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. 


Wednesday, 13 October 2010

பெரியவர்கள்

old couple - sample
“இந்த பெரிசுக்கு வேலையே இல்லை, சும்மா கட பெரிசு, எப்ப பார்த்தாலும் எம்.ஜி.ஆர் பாட்டை போடுன்னு டி.வி. போட்டாலே சொல்லும், இதுல தேஞ்சு போன ரெக்கார்டு மாதிரி நாங்கள்ளாம் அந்த காலத்துலனு ஆரம்பிச்சுருவ” அப்படின்னு நாம் பெரியவர்களை பார்த்து சலிப்ப டைவோம், ஆனால் அவர்களுக்கு இருக்கும் அனுபவத்தால் பெரிய பிரச்சனை எல்லாம் மிக இலகுவாக (லோக்கல் பாஷைல சொன்னால் பெரிய பிரச்சனைலாம் சப்பையா) முடியும் போது பல நேரங்களில் பெரிசுகளின் உதவி நமக்கு தேவை தான் என்று உணர முடிகிறது. 

ஏன் இப்ப திடீரென்று பெரிசுகள பத்தி பேச்சு, வயசாயிருச்சான்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேட்கிறது எனக்கு காதுல விழுது. 


Monday, 4 October 2010

பாய்ந்த ஈரான் பயந்த அமெரிக்கா

Mahmoud Ahmadinejad
நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று பட்டவர்த்தனமாக கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதி நிஜாத். ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய அவர், 2001ம் ஆண்டு அமெரிக்காவின் மாபெரும் உளவுப் பிரிவையும், பாதுகாப்பு வளையத்தை எல்லாம் மீறி நியூயார்க்கில் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலை அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறுகின்றனர்.Template by - Abdul Munir | Daya Earth Blogger Template