Monday, 4 October 2010

பாய்ந்த ஈரான் பயந்த அமெரிக்கா

Mahmoud Ahmadinejad
நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று பட்டவர்த்தனமாக கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதி நிஜாத். ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய அவர், 2001ம் ஆண்டு அமெரிக்காவின் மாபெரும் உளவுப் பிரிவையும், பாதுகாப்பு வளையத்தை எல்லாம் மீறி நியூயார்க்கில் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலை அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறுகின்றனர்.

அவர் எழுப்பும் கேள்வி நியாமானது தானே, சாதரணமாக ஒரு சிறப்பு வாய்ந்த கட்டடத்தை சென்னையில் கட்ட முயற்சித்தாலே CMDA (Chennai Metropolitan Development Authority – சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்) ஆரம்பித்து பல இடங்களில் நாம் நடையாய் நடந்து அப்ரூவல் வாங்க வேண்டி இருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஒரு சிறப்பு வாய்ந்த கட்டடம், விமானம் மோதியவுடன் கட்டடம் அப்படியே சிதறி விழுகிறது, அதில் உள்ள கம்பிகள் உருகி ஓடுகின்றது என்றால், “விமானத்தில் உள்ள எரிபொருளால் தான் கட்டடம் இடிந்து இரும்பு உருகியது என்றே வைத்துக் கொள்வோம்”, அவ்வளவு வீக்கான இரும்பு கம்பிகள் உள்ள கட்டடம் கட்ட நம் CMDA வே ஒத்துக் கொள்ளாது எனும் பட்சத்தில் எப்படி New York City Housing Authority (NYCHA) அப்ரூவல் வழங்கியது என்று பத்தாம் வவுப்பு படிக்கும் மாணக்கர்களுக்கும் சந்தேகம் எழும். அப்படி இல்லை உலக வர்த்தக மையம் அமைந்த கட்டிடம் தரமான கம்பிகள் கொண்டு கட்டியது என்று யாராவது சொன்னால் அந்த கட்டிடத்தில் உள்ள கம்பிகள் விமானம் மோதியதால் மட்டும் உருகாது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். இதைப்போல் மூடி மறைத்த விஷயங்களை நிஜாத் சொன்னது தான் அமெரிக்காவை கடும் கடுப்பேத்தி விட்டது.

இப்படி அனல் பறக்க பேசிய சில நாட்களிலேயே அமெரிக்க பயந்து ஈரானை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் தத்தளித்தது. தனது குள்ளநரிக் கூட்டத்திடம் ஆலோசனை செய்து ஒரு குழந்த்தைத்தனமான செயலை அமெரிக்கா செய்தது, அமெரிக்கா ஈரானை பார்த்து பயந்ததை வெளிவுலகிற்கு காட்டியிருக்கிறது. அதன் காரணமாகவே ஈரான் மீது புது நெருக்கடியை அமெரிக்கா செலுத்த திட்டமிட்டு அதனை நிகழ்த்தியும் காட்டியிருக்கிறது.

அதாவது ஈரானின் 8 மூத்த அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசா கொடுப்பதில்லை எனவும், அமெரிக்காவில் இருக்கும் ஈரானின் முதலீடுகளை முடக்கவும், அவர்களின் தொழில்களை, வணிக தொடர்புகளை (ஈரானில் மற்றும் உலகத்தில் உள்ள ஈரான் வங்கிகளின் வணிக தொடர்புகளை) முடக்கி ஈரானை அமெரிக்கா அரசாங்கத்தின் அடிமைகளாக்க முயற்சி செய்து வருகிறது. ஏனென்றால் முஸ்லீம் நாடுகள் என்று சொல்லிக் கொள்ளும் வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளும் (GCC Countries), உலக நாடுகளுமே எதிர்த்து பேச பயப்படும் அமெரிக்காவை எதிர்த்ததே அமெரிக்காவின் இந்த முடிவுக்கு காரணம். அவர்கள் எதிர்ப்பதை அமெரிக்காவால் எதிர்கொள்ளவோ அல்லது அவர்களது அறிக்கைக்கு பதில் சொல்லவோ முடியாத காரணத்தால் அவர்களிடம் அனு ஆயுதங்கள் இருக்கிறது, அதை வைத்து அவர்கள் உலகை அச்சுறுத்தி வருகிறார்கள் என்று பொய்யை கட்டவிழ்த்து ஆஃப்கானிஸ்தான், ஈராக்கில் நுழைந்தது போல ஈரானிலும் நுழைய முயற்சி செய்கிறது அல்லது ஈரானை தன்னுடைய வழிக்கு கொண்டுவர நினைக்கிறது அமெரிக்கா. இதன் மூலம் அமெரிக்கா தன்னுடைய நிஜமுகத்தை இன்னொரு முறை உலகுக்கு காட்டி இருக்கிறது.

மேலும் இதைப் பற்றி அமெரிக்காவின் வெளிவுறவுத்துறை கமிட்டியின் தலைவராக இருக்கும் ஜோ லிபர்மேன் (Joe Lieberman – Chairman of the House Foreign Affairs Committee) கூறுகையில் ஈரானின் அனு ஆயுத செயல்களை நிறுத்த சிறிதும் தாமதிக்காமல் அமெரிக்கா வான் தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை தீட்ட வேண்டும் என்று ஒபாமவை கேட்டுக் கொண்டதாக financial times என்ற நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.இதற்கெல்லாம் அசராத ஈரான் தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறி வருவதாக ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சிக்கு மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டி கூறுகிறது. 

ஆக்கத்தில் உதவியது : தட்ஸ்தமிழ் இணையதளம் மற்றும் http://www.hamsayeh.net/ 
தோழமையுடன்
அபு நிஹான்

1 comment:

  1. athu sari aanal our pettiyil pala thadavai osama iraqil irukkirara endru kettatharkku kadaisi varai neradiayaga pathil alikkatha iran athibarai enna solvathu, santhegam irunthaal link anuppugiren

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...