போன பதிவில் சரியான திட்டமிடலை பற்றி பார்த்தோம். இந்த பதிவில் தொழிலை பற்றிய நுண்ணறிவு மற்றும் தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளை நமக்கு நம்பகமான அந்த பிரச்சனை பற்றிய அறிவுள்ள நண்பர்களிடம் கலந்தாலோசிப்பது பற்றி எனக்கு தெரிந்ததை கூறுகிறேன். நீங்கள் செய்யும் தொழில் எதுவாயினும் அதைப் பற்றிய அறிவும், எப்படி சிறப்பாக செய்ய வேண்டும் என்ற யுக்தியும் இருக்க வேண்டியது அவசியம். எங்களுடைய ஊரின் அருகே ஒருவர் ஒரு நான்கு சக்கர மெக்கானிக் ஷாப் (கேரேஜ்) வைத்திருந்தார். வெளிநாடுகளை போல எல்லாம் ஒரே இடத்தில் வைத்து தொழில் செய்யலாம் என்று ஆரம்பித்தார். ரிப்பேரிங், வல்கனைசிங், டிங்கரிங், பெயிண்டிங் என்று எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைத்து சிறப்பாக தொழிலை ஆரம்பித்தார். சிறிது காலத்தில் அவரால் திறம்பட நடத்த முடியாமல மூடிவிட்டார். இதை பற்றி நான் இன்னொரு நண்பரிடம் கேட்ட போது அவருடைய சிந்தனை, அந்த தொழிலை பற்றிய அவரின் அறிவு என்னை யோசிக்க வைத்தது.
அவர் சொன்னது இது தான்,
அதாவது மெக்கானிக் வேலையை ஒருவரிடம் ஒப்படைத்து அவருக்கு தேவையான பொருட்களை கொடுத்து அவரை தனியே தொழில் செய்ய சொல்லி, உபகரணங்களுக்கான வாடகையை தனியாக வசூல் செய்வது.
அடுத்து டிங்கரிங் வேலையை ஒருவரிடம் ஒப்படைத்து அவருக்கு தேவையான உபகரணங்களை கொடுத்து அவரை தனியே தொழில் செய்ய சொல்லி, உபகரணங்களுக்கான வாடகையை தனியாக வசூல் செய்வது.
அடுத்து பெயிண்டிங் வேலையை ஒருவரிடம் ஒப்படைத்து அவருக்கு தேவையான உபகரணங்களை கொடுத்து அவரை தனியே தொழில் செய்ய சொல்லி, உபகரணங்களுக்கான வாடகையை தனியாக வசூல் செய்வது.
இவை மூன்றையும் ஒரே ஆள் செய்வதாயினும் பிரச்சனையில்லை. பிறகு கடைக்கு தனியாக வாடகை வசூல் செய்து தானும் கேரேஜுக்கு அருகிலேயே ஒரு வாகணங்களுக்கான ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தால் கண்டிப்பாக இந்த தொழிலில் இலாபம் காணலாம் என்று கூறினார். இந்த மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கும் திறனும், செய்யும் தொழிலை பற்றிய நுண்ணறிவும் இருந்தால் தான் வியாபாரத்தில் சாதிக்க முடியும். ஏனெனில் வெளிநாடுகளில் இதை போன்ற கேரேஜ்கள் இருக்கும், ஆனால் அங்கு நிலைமை வேறு. இங்கு நாம் வேலை செய்பவர்களுடைய கைகளிலேயே தொழிலை ஒப்படைத்து அவர்களுக்கு ஒரு பங்கும் கொடுத்தோமானால், அவர்கள் இன்னும் உற்சாகமாக உழைப்பார்கள். ஆனால் இது எல்லா தொழிலுக்கும் ஒத்து வராது.
என்னிடம் பேசிக் கொண்டிருந்த அந்த நண்பர் மிகவும் உற்சாகத்துடன் இத்தனை திட்டங்களையும் சொன்ன போது தான் தெரிந்தது, நமக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை பற்றிய அறிவு உள்ளவர்களிடம் அதை பகிர்ந்து கொண்டால் தான் அதற்கான தீர்வுகள் நாம் பெற முடியும் என்று.
ஆக இதன் மூலம் நமக்கு தெரிய வேண்டியது:
மாற்று வழிகளை யோசித்தல் மற்றும் நிலைமை கை மீறி போனால் அந்த பிரச்சனைக்கு யாரிடம் தீர்வு இருக்கும் என்று நம்புகிறோமோ அவர்களிடம் யோசனை கேட்பது. இதில் கவனமாக இருக்க வேண்டும், மற்றவர்களிடம் யோசனை கேட்கவேண்டியது அவசியம், ஆனால் அவர்களுடைய யோசனையை தான் நீங்கள் செய்லபடுத்த வேண்டும் என்பதில்லை. முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும்.
வீட்டில் இருந்தபடியே சிறு தொழில் செய்யலாம் வாங்க:
இன்று மொபைல் இல்லாத வீடுகளே இல்லை. ஒரு வீட்டில் எத்துனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ (குழந்தைகள் தவிர்த்து) அத்துனை மொபைல் போன்கள் இருக்கிறது. வீட்டில் இருந்தபடியே மொபைல் ரீச்சார்ஜ் பெண்கள் செய்யலாம். இதனால் வீட்டு வேலை கெடாமல் அதே நேரம் நம்முடைய கை சிலவிற்கும் போதுமான வருமானத்தை நாமே சம்பாதித்து கொள்ளலாம். உங்கள் உறவினர்கள், மற்றும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுடைய மொபைல்களை ரீச்சார்ஜ் செய்தாலே போதுமானக் வருமானம் கிடைக்கும். இதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஆண்களிடத்தில் மொபைல் எண்களை கொடுக்க கூடாது. பொதுவாகவே ஆண்களிடத்தில் மொபைல் எண்களை கொடுப்பதால் பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் பயணிப்போம்.
அபு நிஹான்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோ
நல்ல பயனுள்ள தகவல்களை தெரியபடுத்தியமைக்கு மிக்க நன்றி....
//வீட்டில் இருந்தபடியே சிறு தொழில் செய்யலாம் வாங்க: //
இன்னும் விளக்கமா சொல்லியிருக்கலாம்.. தனிபதிவா போடுங்க. நிறைய பேருக்கு சென்று சேர வாய்ப்பிருக்கு, அருமையான தகவல்.....
இண்ட்லில இணைக்கலையா?
அலைக்கும் ஸலாம் ஸகோ.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் தனிபதிவா போடுவதற்கு முயற்சி செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்.
இண்ட்லியில் இணைத்து விட்டேன்.
தங்களுடைய கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
பபயனுள்ள பகிர்வு
ReplyDeleteமிக அருமையான அனைவருக்கும் பயனுள்ள தகவல்
ReplyDeleteதொடருங்கள்
//என் பக்கம் வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க ந்னறி //
/வீட்டில் இருந்தபடியே சிறு தொழில் செய்யலாம் வாங்க//
ReplyDeleteபெண்களுக்கு சொல்லும் அருமையான ஐடியா
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ Mr. Rain.
ReplyDeleteவருகைக்கும், உற்சாகம் அளிக்கும் கருத்துகளுக்கும் நன்றி சகோ ஜலீலா அக்கா.
வாவ்... உருப்படியான விஷயங்கள் பத்தி நல்லா எழுதறீங்க...ஐ மீன் என்னை போல் வெட்டியாய் மொக்கை போடாமல்...:) வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி சகோ புவனா
ReplyDeleteஅருமை நண்பரே,
ReplyDeleteஇன்றுதான் நான் முதன் முதலாய் உங்கள் தளம் வந்தேன்,
அற்புதம்
தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html
வாழ்த்துக்கள்