Saturday, 23 July 2011

பணம் பண்ணலாம் வாங்க - ஒரு உற்சாகத் தொடர் - பகுதி - 3

போன பதிவில் விடா முயற்சி, மற்றும் கடும் உழைப்பை பற்றியும் பார்த்தோம். இந்த பகுதியில் சரியான திட்டமிடல் பற்றி எனக்கு தெரிந்த விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இன்று பலரும் தொழில் செய்ய ஆர்வப்பட்டு என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்திருக்கையில் எல்லோருக்கும் தோன்றுவது அந்த ஊரிலேயே இலாபம் தரக்கூடிய தொழில் எது என்று கூர்ந்து கவனித்து அந்த தொழிலை ஆரம்பிப்பது. இப்படி பார்த்து மட்டும் தொழிலை ஆரம்பிக்க கூடாது. 


தொழில் தொடங்கும் போது யோசிக்க வேண்டியது


  • ஆரம்பிக்கும் தொழிலை பற்றிய நுன்னறிவு நம்மிடம் இருக்கிறதா? 
  • தொழிலை ஆரம்பிக்க தேவையான பணம் மற்றும் தகுந்த இடம் போன்றவை கைவசம் இருக்கிறதா? 
  • இந்த தொழிலில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? 
  • தொழில் ஆரம்பிக்கும் முன் ஏதெனும் தடங்கள் வந்தால் வேறு தொழில் செய்வதற்கான மாற்று சிந்தனை. 
  • தொழிலில் மேற்கொண்டு முதலீடு ஏதேனும் செய்ய வேண்டுமானால் அதற்கு தேவையான பணம் நம்மிடத்தில் இருக்கிறதா? 
  • செய்யும் தொழிலில் எந்த ஆள் துணை இல்லாமல் இருந்தாலும் தன்னால் மட்டும் கூட அந்த தொழிலை நடத்த முடியுமா? என்று ஆராய்வது மிக முக்கியம். உதாரணத்திற்கு ஹோட்டல் வைத்து நடத்துபவர்கள் திடிரென்று புரொட்டா மாஸ்டர் ஹோட்டலுக்கு வராமல் விடுப்பு எடுத்தாலோ அல்லது வேலையை விட்டு நின்றாலோ முதலாளிக்கு புரோட்டா போட தெரிந்திருக்க வேண்டும். (இது எல்லா தொழிலுக்கும் ஒத்துவராது, சொல்லவந்தது தொழிலை பற்றிய அறிதல் வேண்டும்) 
இன்னும் பல விஷயங்கள் இருக்கலாம். விடுப்பட்டவைகளை கமெண்டுகளில் பதியுங்கள். இதை போன்ற விஷயங்களை தெரிந்து வைத்து கொண்டு தொழில் ஆரம்பிப்பது நன்று. சரி தொழில் ஆரம்பிக்க திட்டமிடல் செய்தாகி விட்டது ஆனால் எதிர்பாராதவிதமாக தொழிலை ஆரம்பிக்க முடியாத சூழ்நிலை, ஆனால் தொழிலுக்காக கடை வாடகை, தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் எல்லாம் வாங்கிய பிறகு எதிர்பாராத விதமாக அரசாங்கம் மூலியமாகவோ இல்லை வேறு ஒரு காரணமாகவோ தொழிலை ஆரம்பிக்க முடியாமல் போனால்?? என்ன செய்யலாம். தலையில் இடி விழுந்தது போல் ஆகிவிடும் இல்லையா? அது போன்ற சமயங்களில் முயற்சியை விடாமல், தன்னபிக்கையை வளர்த்து அதன் மூலம் கிடைக்கின்ற ஆற்றலை மூலதனமாக்கி சிறிதும் யோசிக்காமல் அடுத்து வேறு எந்த தொழில் தெரியும் என்று யோசித்து அந்த தொழிலை தொடங்க வேண்டும். 

என்னுடைய நண்பர் ஒருவர் அமீரகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவர் இண்டெர்நெட் மொபைல் கார்டுகள் விற்று வந்தார். ஆரம்பிக்கும் போது மிக சொற்ப இலாபம் கிடைத்த போது அசராமல் அந்த தொழிலை செய்து வந்தார். அந்த தொழிலுக்கு என்று பெரிதாய் முதல் தேவையில்லை. இருந்தாலும் அந்த தொழிலை திறம்பட செய்து நீண்ட காலத்திற்கு பின்னர் துபையில் ஒரு இண்டெர்நெட் செண்டர் திறக்கலாம் என்று முடிவு செய்து கடையை வாடகைக்கு பிடித்து, பின் தேவையான கம்ப்யூட்டர் உபகரணங்கள் மற்றும் அதற்கு தேவையான furnitures எல்லாம் வாங்கி லைசன்ஸ் எடுக்கப் போகும் போது துபையில் உள்ள தொழில் அமைச்சக அலுவலகத்தில், இண்டெர்நெட் செண்டர் தொடங்குவதற்கு அபுதாபியில் தான் நீங்கள் லைசன்சு வாங்க வேண்டும் என்று கூற அபுதாபிக்கு சென்றால் அவர்கள் பெரும் தொகையாக வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்று புதிய வழிமுறைகளை கூற என்னுடைய நண்பனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காரணம் அவ்வளவு பணம் வருடா வருடம் கொடுத்தால் பெரிதாக இலாபம் பார்க்க முடியாது. பணத்தை முதலீடு செய்தாகிவிட்டது, ஏதாவது செய்தாக வேண்டும், ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. 

பெரும் மன உலைச்சலுக்கு ஆளான என் நண்பன் அவனுடைய அம்மாவிடம் தன்னுடைய நிலைமையை பற்றி கூற அவர்களோ சிறிதும் அச்சப்படாமல் போனால் போகட்டும், இறைவன் இதை விட சிறந்ததை தருவான் என்று ஆறுதல் கூறி தேற்றினார்கள். அவர்கள் கூறிய வார்த்தைகள் புதிய தெம்பை தர புதிதாக அதே இடத்தில் எலெக்ட்ரானிக், மொபைல் ஷாப் ஆரம்பிப்பது என்ற முடிவுக்கு வந்து மீண்டும் பெரும் பணத்தை முதலீடு செய்து கடும் உழைப்பிற்கு பின்னர், இப்போது இறைவனின் அருளால் வியாபாரத்தை நல்லமுறையில் கவனித்து வருகிறார். 
you should always have alternative option

இதன் மூலம் நாம் கவனிக்க வேண்டியது:

இறை நம்பிக்கை, திட்டமிடல், விடா முயற்சி மற்றும் மாற்று வழிகளை யோசித்தல். அவர் மட்டும் அந்த நேரத்தில் நடந்ததை நினைத்திருந்தால் அவருக்கு மென்மேலும் கடன் சுமை அதிகரித்தது ஒரு பக்கம், தொழிலில் தோல்வி என்று மற்றொரு பக்கம் மன உலைச்சலுக்கு ஆளாகியிருப்பார். 


வீட்டில் இருந்தபடியே சிறு தொழில் செய்யலாம் வாங்க:


  1. இன்று எல்லாமே ரெடிமேட் உலகமாகி விட்டது. நகரங்களில் வசிக்கும் பெண்களும், சிறு நகரங்களில் வசிக்கும் பெண்களும் தோசை, இட்லி மாவு அரைத்து கடைகளுக்கு கொடுத்தால் நல்ல இலாபம் பார்க்கலாம். 
  2. எம்ப்ராய்டரி மற்றும் சிறு கல் வேலைப்பாடுகள் கொண்ட புர்கா, சுடிதார் மற்றும் சேலைகளுக்கு இன்று சந்தையில் கடும் எதிர்ப்பார்ப்பு நிகழ்கிறது. எதையும் புதுமையாக செய்யும் எண்ணம் மற்றும் எப்ராய்டரி மற்றும் சிறு கல் வேலைப்பாடுகள் செய்யத் தெரிந்தால் தைரியமாக இந்த தொழிலை செய்யலாம். பிளைன் (plain) துனிகளை (புர்கா, சேலைகள், சுடிதார்கள்) வெளிநாடுகளில் இருந்தோ அல்லது உள்ளூரிலோ விலைக்கு வாங்கி அதில் வேலைப்பாடுகள் செய்து கடைக்கு விற்றாலோ அல்லது தாங்களே வீட்டில் வைத்து விற்றாலோ நல்ல இலாபம் கிடைக்கும். இது சீஸன் தொழில் மட்டுமே. நாளையே இந்த ஃபேஷன் மாறிவிட்டால் அதற்கு ஏற்றது போல் தொழிலை மாற்றிக் கொள்ள வேண்டும். இதை ஆண்களும், பெண்களும் செய்யலாம். 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் பயணிப்போம்.
அபு நிஹான்

3 comments:

  1. பயனுள்ள தகவல்கள்...
    படித்து பயன்பெற சிறந்த கட்டுரை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. assalamu alaikkum

    very gud articles. its encouraging me....


    thank u.

    ReplyDelete
  3. //மாற்று வழிகளை யோசித்தல்//

    இதுவும் தேவைதான்.

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...