Wednesday, 20 July 2011

பணம் பண்ணலாம் வாங்க - ஒரு உற்சாகத் தொடர் - பகுதி - 2

முந்தைய பதிவுகள் : பதிவு - 1

போன பதிவில் ஜித்தாவில் ஒரு பெண்மனி எப்படி தொழில் செய்ய கற்றுக் கொண்டு கணவனுக்கு உறுதுணையாய் இருந்து வாழ்வில் முன்னேறினார் என்று பார்த்தோம். இந்த பதிவிலும், இன்னும் தொடரும் பதிவிகளிலும் தொழில் பற்றிய எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன். 

நம்மில் பெரும்பாலோர் தொழில் செய்வதில் அதிகம் ஆர்வம் செலுத்துவதில்லை. ஏனெனில் தொழில் செய்வதில் சாதகங்கள் இருப்பது போல் பாதகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கொஞ்சம் உஷாராக இல்லாது போனால் முதலுக்கு மோசம் வரும் சூழ்நிலைதான். 
இறை நம்பிக்கை, சரியான திட்டமிடல், கடும் உழைப்பு, நேர்மை, நாணயம், வாக்கு தவறாமை, செய்யும் தொழிலை பற்றிய சரியான நுன்னறிவு, சாதக பாதகங்களை அலசி ஆராய்வது போன்றவை நாம் தொழில் செய்ய தேவையான ஊட்டச்சத்துக்கள். முன்னொரு காலத்தில் நமது ஊரில் இந்த தொழில் செய்தால் நிலைக்குமா என்று யோசித்த தொழில் இன்று பிரகாசமாக மின்னுவதை பார்க்கலாம். பாத்திரம் அறிந்து பிச்சை போடுங்கள் என்று சொல்வார்களே அது போல இடத்துக்கு தகுந்தாற் போல் தொழில் செய்வது மிக முக்கியமான ஒன்று. குக்கிராமத்தில் போய் பிட்சா கடை வைப்பதும், லைஃப்ஸ்டைல் போன்ற பிராதனமான துணிக்கடை வைப்பதும் கூடாது. எங்கு எந்த விதமான தொழில் செய்ய வேண்டும் என்பதை முதலில் தேர்வு செய்வது அவசியம். 

தொழில் செய்யும் பலர் இன்றும் தங்கள் தொழிலில் சிறந்து விளங்குவதற்கு காரணம் விடாமுயற்சி மற்றும் கடுமையான உழைப்பு. 
உழைப்பு
உழைப்பை பற்றி இஸ்லாம் கூறுகையில்

ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதை விட சிறந்த உணவை ஒரு போதும் உண்ண முடியாது.தாவுத் நபி அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள். (புகாரி : 2072) 

எனக்கு தெரிந்த நண்பர் எங்கள் ஊரில் சிறு தொழில் செய்ய ஆரம்பித்து இன்று ஓரளவு நல்ல நிலைமையில் இருக்கிறார். அவருடைய பருவ காலம் சவுதியில் ஆரம்பித்தது. திருமணம் முடிந்தவுடன் சவூதிக்கு மறுபடியும் செல்ல விருப்பமில்லாததால் சொந்த ஊரில் தொழில் செய்யலாம் என்று முடிவு செய்தார். என்ன ஒரு ஆச்சரியம், அவர் செய்யலாம் என்று ஆரம்பித்த தொழில் கடலை மிட்டாய், ஜவ்வு மிட்டாய், முறுக்கு போன்றவைகளை செய்து கடைக்கு கடை மொத்தமாக விற்பது. இந்த செய்தியை பின்னால் நான் கேட்ட போது எனக்குள் இருந்த ஒர் கேள்வி, எப்படி வெளிநாடு சென்று திரும்பிய ஒருவர் சொந்த ஊரில் இதை போன்ற ஒரு குறைந்த முதலீட்டில் உருவான தொழிலை அதுவும் கவுரவம் பார்க்காமல் சைக்கிளில் அவரே கொண்டு எல்லா கடைகளுக்கு விற்கிறார் என்பது தான். அல்ஹம்துலில்லாஹ். அந்த தொழிலில் அல்லாஹ் அவருக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுத்தான். அதன் மூலம் முறுக்கு மற்றும் பலகாரங்கள் செய்து கொடுக்க பெரிய ஆர்டர் வந்து பின்னர் தொழிலை மாற்ற எண்ணி, பிளாஸ்டிக் பைகள் கடைகளுக்கு விற்க ஆரம்பித்தார். அது அப்படியே சூடுபிடிக்க தற்போது திருமணங்களுக்கு பிளாஸ்டிக் வாழை இலை, தண்ணீர் பாட்டில்கள் என்று மொத்த வியாபாரம் செய்து தன்னுடைய தொழிலில் சிறந்து விளங்குகிறார். 

இது படிக்கும் போது மிக சாதரணமாக இருக்கும். ஆனால் இதன் பின்னால் ஒரு குடும்பமே வேலை செய்தது என்று சொன்னால் மிகையாகாது. மிட்டாய் போடுவது, முறுக்கு சுடுவது போன்ற தொழிலில் தன்னுடைய மனைவியின் துணையோடு, பொருட்களை பையில் அடைப்பது, கடைக்கு சென்று விற்பது, கடன் வைத்தவர்களிடம் போய் கடனை வாங்குவது (இது தான் மிக கடுமையான வேலை) என்று அவர் உழைக்காத நாளே இல்லை. அவர்களுடைய உழைப்புக்கு வார விடுமுறைகள் இல்லை, அரசாங்க விடுமுறைகள் இல்லை. இருந்தாலும் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்திற்காக உழைத்தார். இன்று இறைவனின் கிருபையால் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். 

மேலும் இஸ்லாம் உழைப்பை பற்றி கூறுகையில்,

பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைகளை சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும்.(ஏனெனில்) அவர் யாசிக்கும் போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்,மறுக்கவும் செய்யலாம். (புகாரி : 2074, 2075) 

இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் கடும் உழைப்பு, விடா முயற்சி மற்றும் எந்த தொழிலையும் கவுரவம் பார்க்காமல் செய்தல். 

அடுத்து தொழில் செய்ய தேவையான பார்முலாக்களில் ஒன்று சரியான திட்டமிடல். சரியான திட்டமிடலின்றி தொடங்கப்பட்ட தொழில்கள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்து இருக்கின்றன. அதை பற்றி அடுத்த பதிவில் காண்போம். 

வீட்டில் இருந்தபடியே சிறு தொழில் செய்யலாம் வாங்க:

பெண்கள் தங்கள் வீடுகளில் தனியாக இருக்கும் போது வீட்டு வேலைகள் தவிர்த்து சில தொழில்களை செய்யலாம். அதை பற்றி இந்த பகுதிகளில் பார்க்கலாம். 

தையல் கலையில் பிரசித்தி பெற்றவர்கள் பெண்களுக்கு தேவையான துணிகளை ஓய்வு நேரத்தில் தைத்து கொடுக்கலாம். 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் பயணிப்போம். 
அபு நிஹான்

6 comments:

  1. யாரும் சம்பாதிக்கலாம் என்பதை காட்டும் அருமையான பதிவு!!

    ReplyDelete
  2. அஸ்ஸலாமுன் அலைக்கும் வரஹ்...

    சுயதொழில் தொடங்க ஆர்வமூட்டும் பயனுள்ள நல்ல தொடர் சகோ.அபுநிஹான்.

    தொடவதற்கு நன்றி.

    ReplyDelete
  3. வெளிநாட்டு ரிடர்னீகள் பல சமயங்களில் சுய கௌரவம் பார்த்துத்தான் கையைச் சுட்டுக் கொள்கின்றனர். மாஷா அல்லாஹ், அவரின் முயற்சிகள் வெற்றிபெற்றதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. சகோ ஆமினா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. சகோ முஹம்மத் ஆஷிக் 'Citizen of World, எல்லாம் நீங்கள் கொடுக்கும் ஊட்டம் தான். இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்.

    ReplyDelete
  6. சகோ ஹுஸைனம்மா,

    //வெளிநாட்டு ரிடர்னீகள் பல சமயங்களில் சுய கௌரவம் பார்த்துத்தான் கையைச் சுட்டுக் கொள்கின்றனர்.//

    நிதர்சனமான உண்மை. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...