Monday, 3 June 2013

அகவை தொண்ணூறு தொட்ட மாபெரும்(?) கலை(?)ஞர்

கலைஞர் என்ற வார்த்தை கருணாநிதிக்கே பொருந்தும். ஏனெனில் கலைகளிலே நாடக கலையில் மிகவும் கை தேர்ந்தவராயிற்றேJ

கலைஞர் 90 வயதை அடந்து விட்டார் என்று எங்கெங்கிலும் அவருக்கு புகழ் மாலை சூட்டப்படுகிறது.

ஒருவர் 90 வயது வரை வாழ்ந்தால் அவர் செய்த தவறுகள் ஒன்றும் இல்லாமல் ஆகாது. எத்துனை எத்துனை துரோகங்கள் எம் முஸ்லீம் சமுதாயத்திற்கு.

காயிதேமில்லத் இட ஒதுக்கீடு கேட்க மத கலவரத்தை உண்டு பண்ண பாக்குறீர்களா? என்று அப்போதே அந்த எண்ணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார், உண்மையிலேயே சொல்வீரர் தான் அவர் 

கோயம்புத்தூரில் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து காவிகள் நடத்திய வெறி ஆட்டத்தை வேடிக்கை பார்த்தது. அப்போது தஞ்சை பெரிய கோவிலில் சுவர் இடிந்து விழுந்ததை பார்வை இட்ட கலைஞருக்கு கோயம்புத்தூருக்கு சென்று பாதிக்கப்பட்ட எம் மக்களை பார்த்து ஆறுதல் சொல்ல முடியவில்லை, அப்போது தஞ்சைக்கு வந்து கலைஞரை சந்தித்த கோயம்புத்தூர் ஜமாத் நிர்வாகிகளிடமும் வர முடியாது என்று கூறினார். உண்மையிலேயே மதம் கடந்த மாமனிதர் தான் அவர்.

அண்ணா நூற்றாண்டு விழாவில் விசாரணக் கைதிகளாகவே காலத்தை ஓட்டும் எம் மக்களையும் விடுதலை செய்யுங்கள் என்று தமுமுக கோரிக்கை விடுத்த போது பார்க்கலாம் என்று சொல்லி விட்டு செயலில் காட்ட மறந்தவர், உண்மையிலேயே செயல் வீரர் தான்.

திருமண பதிவு சட்டம் திருத்தம் சம்பந்தமாக முஸ்லீம் இயக்கத்தினர் வந்து அன்றைய சட்ட அமைச்சர் துரை முருகனிடம் கோரிக்கை வைக்க இதை திருத்த முயற்சி செய்கிறேன் என்று சொல்லி காலத்தை கடத்த உதவி செய்தது திமுக அரசு, ஆதலால் அவர் காலத்தை வென்ற தலைவர் தான்.

முஸ்லீம்களுக்கான இட ஒடுக்கீட்டை தந்து விட்டு அதில் ஏகப்பட்ட குளறுபடிகள் வர, அதை சரி செய்ய அன்றைய திமுக அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் புகார் மேல் புகார் கொடுக்க சரி செய்கிறோம் என்றே ஆட்சியை நகர்த்தியவர், ஆகையால் இவர் ஆட்சியின் மனசாட்சி தான்

“முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக்கிறீர்கள் அதற்கெல்லாம் நன்றியை கூறி இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்றார் காயிட்ஹே மில்லத் என்று 35 ஆண்டுகளாக பொது மேடைகளில் பொய் பேசி வருகிறார் கலைஞர். ஆம் உண்மையிலேயே நாவன்மை மிக்கவர் தான் கலைஞர்.

1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணி வைத்து அப்துல் லத்தீஃபின் இந்திய தேசிய லீக்கை திமுக கூட்டணியிலிருந்து வெளியேற செய்தார். உண்மையிலேயே சிறுபாண்மையின் நண்பன் என்று கலைஞர் நிரூபித்தார்.

2011 சட்டமன்ற தேர்தலில் இந்திய யூணியன் முஸ்லீம் லீக்கிற்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச(?) தொகுதியான 3 தொகுதிகளில் ஒன்றை பிய்த்து காங்கிரஸுக்கு கொடுத்து காங்கிரஸின் தொகுதி பங்கீடு பிரச்சனையை சரி செய்ய முயன்றார் கலைஞர், பின்னர் பெரும் எதிர்ப்புக்கு பிறகு முஸ்லீம்கள் மீதுள்ள வற்றா கருணையின் மூலமும் பாசத்தின் மூலமும் திருப்பூர் அப்தாஃபின் தமிழ் மாநில தேசிய லீக்கையும் இந்திய யூணியன் முஸ்லீம் லீக்கையும் இணைத்து வைத்து அறிவாலயத்தில் இணைப்பு விழா நடத்தி மூன்றில் ஒறு தொகுதியை அல்தாஃபிற்கு அள்ளி (?) தந்தார் (இணைத்ததற்கு வேறு ஒரு காரணம் உண்டு). கலைஞர் தன்னுடைய சுயநலத்திற்காக புதிய கட்சி தொடங்கிய திருப்பூர் அல்தாஃபை திமுகவுடன் சேர்த்து கொள்ளவும், அதே சுயநலனுக்காக 2011 ஆம் ஆண்டு அல்தாஃபை இந்திய யூணீயன் முஸ்லீம் லீக்குடன் இணைத்து கொண்டதும் கலைஞரால் தான் முடியும்.. உண்மையிலேயே கலைஞர் அரசியல் சாணக்கியன் தான்.

தோழமையுடன்
அபு நிஹான்

No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...