Saturday, 8 June 2013

மரம் வளர்த்து அறம் செய்வீர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


Planting is not a choice, its a must
இன்றைய மக்களின் ஜீவாதார தேவையான சுத்தமான காற்று எங்கு காணிலும் கிடைக்கவில்லை, ஏனெனில் அந்த காற்றை நாம் தான் வர வேண்டாம்னு சொல்லி தடுத்திட்டோம். சுத்தமான காற்றை தரக்கூடிய மரங்களை நாம் வெட்டுவதின் காரணமாக சுத்தமான காற்றை நாமே விரட்டுகிறோம். மரம் நடுவது என்பது உயிர் வாழ்வதற்கு ஒப்பாக தற்போது கருதப்படுகிறது. பூமி வெப்பமயமாதலை தடுப்பதற்கு மரம் வளர்ப்பும் ஒரு முக்கிய தேவையாகி இருக்கிறது.
“முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால்நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 3159

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நூல் : புகாரி 
இதை கருத்தில் கொண்டு எங்கள் ஊரான இராஜகிரியில் காஸிமியா தெரு – ஜமாலியா தெரு இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று இறைவனின் கிருபையால் எங்கள் தெருக்கள் தோறும் மரங்கள் நடப்பட்டுள்ளது. இவர்களின் அனுகுமுறை சற்று வித்தியாசமானது. மரம் வளர்ப்பின் தேவைகளை, அதன் நண்மைகளை மக்களிடம் சொல்லி தெருவிற்கு ஒரு ஸ்பான்ஸர் என்று பிடித்து மரங்களை நடுகிறார்கள். அதோடு நிறுத்தவில்லை, அந்த தெருவில் உள்ள எல்லா வீட்டிற்கும் சென்று ஒரு நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள். அதில் மரம் நடுவதால் ஏற்படும் பயன்கள் மற்றும் மரங்களுக்கு தண்ணீர் விடுவது பற்றிய விழிப்புணர்வு அச்சிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் ஊற்றுங்கள் என்பது போன்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன. அதோடு அந்த தெருக்களில் மாதாந்திர விசிட் அடித்து எந்த மரம் நன்றாக இருக்கிறது, எந்த மரம் துளிர் விடவில்லை என்று பார்த்து கவனித்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு சோர்வும் அல்லது எரிச்சலையும் காண முடியவில்லை. காரணம் அவர்கள் செய்யும் இந்த செயல்களை மிகவும் விருப்பப்பட்டு செய்கிறார்கள். எல்லோரும் படித்தவர்கள், வேலைக்கு செல்பவர்கள் தான், இருந்தாலும் கிடைக்கும் சொற்ப நேரத்திலும் அவர்கள் சமுதாயத்தின் பால் அக்கறை கொண்டு இவ்வாறு செய்வது மெய்சிலிர்க்க வைக்கிறது.


அவர்களிடம் விசாரித்த போது ஒரு மரக்கன்று கூண்டு மற்றும் நடுவதற்கு கூலியோடு சேர்த்து 500 ரூபாய் ஆவதாகவும், விடுப்பட்ட தெருக்களிலும் ஸ்பான்ஸர் கிடைத்தால் இன்ஷா அல்லாஹ் தொடரப்போவதாகவும் கூறினார்கள். தவிர இதை பற்றி யாருக்கேனும் ஆலோசனை தேவைப்பாட்டால் கண்டிப்பாக சொல்வோம் என்றும் கூறினார்கள்.

அதே போல் சகோதரர் ஜுல்ஃபிகரின் முயற்சியால் எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரில் இருக்கும் வழுத்தூரிலும் பூமி வெப்பமயமாதலை தடுக்க மரம் நடுவீர் என்ற வாசகத்துடன் மரம் நடப்பட்டுள்ளது. அதே போல் அறந்தாங்கி மாவட்டம் கோபாலப்பட்டினத்திலும் கடந்த பிப்ரவரி மாதம் 12 மரங்கள் நடப்பட்டுள்ளது.

மரம் நடுவது என்பது சதக்கத்துல் ஜாரியா என்ற நிலையான தர்மத்தின் கீழ் வரும். நீங்கள் மரித்தாலும் உலகம் அழியும் வரை அந்த மரத்தால் என்ன பயன் கிட்டுமோ அந்த பலனெல்லாம் மறுமையில் நமக்கு நன்மைகளாக மாறக்கூடியவையாக இன்ஷா அல்லாஹ் இருக்கும். தவிர சுற்று சூழலில் அக்கறை எடுத்து இது போன்ற செயல்களை செய்ததற்காகவும் அல்லாஹ் நமக்கு கூலியை தருவான். உங்கள் ஊர்களிலும் இதை போன்ற செயல்களை செய்து அல்லாஹ்வின் அருளை பெறுவீர்.

மரங்களின் தந்தை என்று அழைக்கப்படும் அய்யாசாமி அவர்கள் பற்றிய பதிவு 
சகோ அய்யாசாமி விக்கியில்

ஈரோடு மாவட்டம் 10,000 மரங்களுக்கு மேல் நட்டிருக்கும் அய்யா நாகராஜன் பற்றிய பதிவு

சிறு பிள்ளை பருவத்திலிருந்தே நம் பிள்ளைகளுக்கு மரங்கள் நடுவது பற்றிய விழிப்புணர்வையும், பூமி வெப்பமயமாதல்/ மரங்கள் அழிக்கப்படுதல் பற்றிய விழிப்புணர்வையும் சொல்லி கொடுக்க வேண்டும். என் மகன்/ மகளுக்கு ஐபோன் உபயோகிக்க தெரியும், கம்ப்யூட்டரில் எக்கச்சக்கமாய் தெரியும் என்று பெருமை அடிக்கும் பெற்றோர்கள் வாழ்க்கைக்கு அடிப்படை தேவையான சுத்தமான காற்றை பற்றியும், மரம் நடுவதால் தான் அது கிடைக்கும் என்பது பற்றியும் சொல்லி கொடுங்கள். தவிர வீட்டிலேயே சிறு காய்கறி தோட்டம் அமைத்து நீங்களும் உறவினர்களும் வேண்டிய காய்கறிகளை பயிரிட்டு சுத்தமான உரம் சேர்க்காத காய்கறிகளை உண்டு உணவே மருந்து என்னும் மந்திர சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். கொல்லைப்புறம் / தோட்டம் இல்லாத மக்கள் மாடிகளில் இது போன்று அமைத்து பயிரிடலாம் (இதுக்குண்ணே சென்னை போன்ற பெரு நகரங்களில் அமைத்து கொடுக்க ஆள் இருக்காங்க, இல்லன்னா இருக்கவே இருக்கு இண்டர்நெட், அதில் தேடினால் எப்படி, எந்த காய்கறிகளை பயிரிடலாம்னு நமக்கு ஒரு ஐடியா கிடைக்கும்).
ஆரம்பிக்கும் போது மலைப்பாக இருக்கும் இதை போன்ற விஷயங்கள் பயிர்கள் வளர வளர நமக்குள் ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தும், அது மட்டுமல்லாது இந்த உலகத்துக்கு நம்மாலும் நல்லது செய்ய முடியும் / செய்கிறோம் என்ற நல்ல எண்ணம் நம் வாழ்க்கைக்கு வலு சேர்க்கும். ப்ளாட்களாக காட்சி அளிக்கும் விவசாய நிலங்களுக்கு மத்தியில் உங்களுடைய ப்ளாட்களில் பயிரிடுங்கள்.
சமீபத்தில் தினகரனில் வந்த ஒரு கட்டுரை “அட” சொல்ல வைத்தது. மரைன் டெக்னாலஜி படித்து விட்டு 5 லட்சம் வரையும் சம்பாதிக்கும் தகுதி இருந்தும், உலகம் முழுக்க சுற்றும் வாய்ப்பு இருந்தும் அதெல்லாவற்றையும் விட்டு விட்டு விவசாய முறையை வேறுபட்ட கோணத்தில் அனுகி சிறப்புற செய்து கொண்டிருக்கிறார் ருசோ என்கிற இளைஞர்.
நன்றி : ஆக்கத்தில் உதவிய அனைத்து நல் உள்ளங்களின் பதிவுகளுக்கும்.
தோழமையுடன்
அபு நிஹான்


7 comments:

தமிழானவன் said...

ஆச்சரியமான மனிதர்கள் நெகிழ்ச்சியான தகவல்கள்

ஹுஸைனம்மா said...

நல்ல பதிவு. உங்க ஊர் இளைஞர்களின் செயலும் பாராட்டிற்குரியது. அதன் பலன்களை அவர்கள் அடையட்டும், இன்ஷா அல்லாஹ். அவர்களின் நற்செயலை தெரிவித்தும், விரிவுபடுத்த வேண்டியும் நீங்கள் எழுதிய பதும் பலன் தரட்டும், இன்ஷா அல்லாஹ்.

shueib said...

///மருந்தே உணவு என்னும் மந்திர சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.///

மருந்தே உணவு என்னும் மந்திர சொல்லுக்கு uyir kodukkalaam endru irukka vaendum.

aashiq ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உற்சாகம் தரும் பதிவு. உங்கள் ஊர் இளைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மிகச் சிறந்த உதாரணமாக திகழும் இவர்களுக்கு இவர்களுக்கு இறைவன் மென்மேலும் கல்வி ஞானத்தை தந்தருள வேண்டும்.

வஸ்ஸலாம்..

சக்கர கட்டி said...

எங்க ஊர்லையே எனக்கு தெரிஞ்சு இருந்த மரங்கள் கிணறு குளம் அனைத்தையும் காணோம் நான் என்ன பன்றது தல எங்க பார்த்தாலும் ஒரே வீடு மனைகள் தான் காட்சியளிகின்றன

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

நன்றி சகோ தமிழானவன் அவர்களே.

நன்றி சகோ ஹுஸைனம்மா அவர்களே. உங்கள் துஆ இன்ஷா அல்லாஹ் பலிக்கட்டும்

நன்றி சகோ shueib அவர்களே. மாற்றி விட்டேன்.

நன்றி சகோ ஆஷிக்ஜி.

நன்றி சகோ சக்கர கட்டி அவர்களே. வயல்வெளிகள் ப்ளாட்களாக காட்சி தருவது போல் வனங்களும் காணமல் போகிறது. இது போன்ற காரியங்கள் கொஞ்சம் மன நிறைவு தந்தாலும் எல்லா மக்களும் சுற்று சூழல் மேல் அக்க்கறை கொள்ள வேண்டும் என்பதே எல்லொருடைய அவா

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template