Monday, 1 July 2013

வெளிநாட்டிலிருந்து டி.வி.வாங்கி வரப் போகிறீர்களா ?

imported TV. thanks google
வெளிநாட்டிலிருந்து பலர் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கி வருவதை பழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அடிப்படையில் ஒரு விஷயத்தை மறந்து விடுகின்றனர். வெளிநாட்டிலேயே தயாரிக்கின்ற எலக்ட்ரானிக் பொருட்கள் வெளிநாட்டின் சூழலுக்கு ஏற்ப தயாரித்து விற்று விடுவார்கள். உதாரணத்திற்கு வோல்டேஜ் டிராப், அடிக்கடி மின்வெட்டு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்கள் வெளிநாடுகளில் இல்லாது இருப்பதால் அதற்கு தகுந்தாற்போல் அவர்கள் சர்க்யூட் வடிவமைத்து பொருட்களை தயாரித்து விடுவர். ஆனால் பெரும்பாலும் அந்த பொருட்கள் இந்திய சந்தைகளுக்கு ஏற்றதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் விலை விஷயத்தை பார்க்கும் போது கண்டிப்பாக பாரிய விலை வித்தியாசங்கள் இருக்கத் தான் செய்யும். அதை மட்டுமே கணக்கில் கொண்டு நம் மக்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். இப்போது எலக்ட்ரானிக் பொருட்களின் வரிசையில் அதிகம் விரும்பி வாங்கி சொல்லும் பொருள் டிவி.

LCD TV, LED TV, SMART TV, 29”/32”/40”/42”/55” என்று பல நிறுவணங்களும் போட்டி போட்டு கொண்டு தங்களுடைய மாடல்களை விற்று தீர்த்து விடுகின்றனர். அதிலும் வாரண்டி உண்டா என்றால் கவலைப்படாதீங்க சார், சர்வதேச வாரண்டி உண்டு என்று ஆசை காட்டி விற்று விடுகின்றனர் விற்பனை முகவர்கள். உண்மை தான் அதில் எந்த பொய்யும் இல்லை என்பது போல் தான் காட்டும் INTERNATIONAL WARRANTY CARD என்று சொல்ல கூடிய சர்வதேச வாரண்டி அட்டை. அந்த அட்டையில் தான் நமக்கான ஆப்பு மறைந்து இருப்பதை மறந்து விடுகிறோம். நமது இந்திய திருநாட்டில் வாங்கிய எலக்ட்ரானிக் பொருட்களுக்கே வாரண்டி க்ளைம் என்று போனால் நம் கதி என்னவென்று அலைந்தவர்கள் அறிவார்கள். ஆனால் எந்த நாட்டிலோ வாங்கிய பொருளுக்கு சர்வதேச வாரண்டி என்ற பெயரில் சர்வீஸ் செய்ய போனால் என்ன நிலைமை என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அப்படியே சர்வீஸ் செய்ய பொருளை வாங்கி கொண்டாலும் சர்வீஸ் பண்ண ஆள் இல்லை, ஸ்பேர் பார்ட்ஸ் இல்லை, வெளிநாட்டில் தயாராகும் இந்த மாடல் டிவிக்கு இங்கு ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காது என்று ஏதாவது சொல்லி நம்மை வெறுப்பேற்றுவார்கள். இது பலமுறை பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு நடந்து இருந்தாலும் இப்போது பிராதனமாக கொண்டு செல்லும் எலக்ட்ரானிக் பொருளான டிவிக்கு என் மேலாளருக்கே (கத்தாரில் வாங்கிய டிவிக்கு) இதை போல் ஒரு அனுபவம் வர கடுப்பாகி இந்தியாவில் அதே மாடலில் ஒரு டிவியை வாங்கி கொண்டார். அதிலும் இந்த பிரச்சனையை கத்தாரில் இருக்கும் கஸ்டமர் கேரிடம் வற்புறுத்தி கேட்ட போது அவர்கள் சொல்லும் பதிலில் தான் சர்வீஸ் செய்யும் எண்ணத்தையே விட்டு விட்டு புதிய டிவி வாங்கினார்.

அது என்னவென்றால் இது கத்தாரில் வாங்கிய டிவி, நாம் இந்தியாவில் வாங்கவில்லையென்ற கடுப்பில் தான் அவர்கள் அது போன்று நடக்கிறார்கள் (அப்புறம் என்னாத்துக்கு சர்வதேச வாரண்டின்னு வண்டி வண்டியா திட்றது எனக்கு கேட்குதுJ), நடந்த விஷயத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று சொல்லி முடித்து கொண்டார். இதை கூட அவர் முதலில் சொல்லவில்லை, பிறகு வற்புறுத்தி கேட்ட போது தான் சொல்லி இருக்கிறார். சர்வதேச வாரண்டியில் சர்வீஸ் செய்ய விருப்பம் இல்லாத போது எதற்கு சர்வதேச வாரண்டி உள்ளது என்று மக்களை ஏமாற்றனும் என்று கேட்டால் இதோ அடுத்த அறிவிப்பு


ஆக எது எப்படியோ பிரச்சனைகள் இருவகை. ஒன்று தானாக வருவது, இன்னொன்று காசு கொடுத்து வாங்குவது. இதில் இரண்டாவதை நாம் இலகுவாக தவிர்க்கலாம். இது போன்ற சிக்கல்களில் சிக்காது இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி இந்தியாவின் பொருளாத முன்னேற்றத்துக்கும் பாடுபடுங்கள், தேவையில்லாத பிரச்சனையையும் தவிருங்கள். 

சொல்ல மறந்த செய்தி

ஆனால் இந்த டிவி விஷயத்தில் மறைந்து இருக்கும் இன்னொரு விஷயம் தான் சுங்க வரி. நாம் குறைந்த விலை என்று கொண்டு செல்லும் டிவிக்களுக்கு சுங்க துறையினர் ஒரு சர்வதேச விலைப்பட்டியலை வைத்து கொண்டு சுங்க வரி என்ற பெயரில் வசூலித்து விடுவார்கள். அதிலும் டேபிளுக்கு கீழ் வசூலிக்கப்படும் பணம் தான் அதிகம். நம் மக்களும் இலஞ்சத்தை அன்பளிப்பாக நினைத்து மாப்ள அவன் 5,000 கேட்டான், நான் விடுவேனா 2,000 வச்சிக்கங்க சார்னு சொல்லி கொடுத்துட்டு திரும்பி பாக்காம வந்துட்டேன், யாருக்கிட்ட அப்படின்னு பந்தாவா இலஞ்சம் கொடுத்தோமே என்ற வெட்கம் கூட இல்லாமல் / கூச்சப்படாமல் பெருமை அடித்து கொண்டிருப்பார். அவர்கள் வைத்திருக்கும் விலைப்பட்டியலில் 40” இன்ச் வரை வரி கட்டாமல் கொண்டு செல்லலாம் என்று சொல்கின்றனர். உண்மை என்னவெனில் அவர்கள் உங்கள் மாடல் டிவிகளின் விலையை வைத்தே வரி போடுகிறார்கள் என்பதே. நீங்கள் விலை குறைவாக வாங்கி இருந்தாலும், உங்களிடத்திலே பில் இருந்தாலும் அதையெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. இது சென்னை மற்றும் திருச்சியின் நிலைமை. திருவணந்தபுரத்தின் நிலைமையை நான் அறியேன், மற்றும் இந்தியாவின் மற்ற விமான நிலையங்களின் நிலைமையையும் நான் அறியேன்.

‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா.

டிஸ்கி:

மலிவான விலையில் கிடைத்தால் தேவையற்ற பொருட்களையும் வாங்கும் மக்கள் இருக்கும் வரை முதலாளித்துவம் கை ஓங்கி கொண்டு தான் இருக்கும்.

தோழமையுடன்
அபு நிஹான்

6 comments:

 1. // தேவையற்ற பொருட்களையும் வாங்கும் மக்கள் இருக்கும் வரை முதலாளித்துவம் கை ஓங்கி கொண்டு தான் இருக்கும்.//
  மிக எளிதான இந்த கருத்து ஏன் பலருக்கும் புரியமாட்டேன் என்கிறது?

  ReplyDelete
 2. //வெளிநாட்டில் தயாராகும் இந்த மாடல் டிவிக்கு இங்கு ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காது//

  இதே வார்த்தைகளை நோக்கியா சர்வீஸ் சென்ட்டரில் என் காதால் கேட்டேன்.

  ReplyDelete
 3. அதே கத்தாரில் வாங்கிய டிவி.....
  இதே நிலைமை எனக்கும் தான் விலை குறைவுக்கு ஆசைப்பட்டு வோல்டேஜ் டிராப் ஆகி ரூபாய் 7000/=
  ரிப்பேர் செலவாக
  தண்டம் அழுதேன்..

  ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...