Thursday, 18 July 2013

துபை வீடியோ – ஒரு எச்சரிக்கை பதிவு

அமீரக அரசு அதிகாரி தெற்கு ஆசிய ஓட்டுனரை அடித்தது சம்பந்தமாக வீடியோ ஒன்று எடுக்கப்பட்டு யூடியூபில் பதிவேற்றப்பட்டு அது முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு பின்னர் அந்த அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு விஷயம் பரப்பப்பட்டது. இது சமூக வலைத்தளங்களால் மட்டுமே முடியும் ஒன்று. அவரை கைது செய்ததன் மூலம் அமீரக குறிப்பாக துபை காவல்துறையும் தன்னுடைய கடமையை செய்துள்ளது. அடி வாங்கியவர் அடித்தவர் மீது குற்றம் சுமத்தவில்லையென்றாலும் (புகார் கொடுக்கவில்லையென்றாலும்), வீடியோவை ஆதாரமாக வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

இந்த வீடியோவை நம்மில் பலரும் ஷேர் செய்துள்ளோம் இதில் உள்ள விபரீதம் புரியாமல். அமீரக சட்டத்தின் படி நீங்கள் அறியாத ஒருவரை புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்க நினைத்தால் முதலில் அவர்களிடம் அனுமதி வாங்க வேண்டும், பின்னர் தான் எடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அமீரக ஆண்களிடத்தில் அனுமதி வாங்கிய பின்னரே எடுக்க வேண்டும். அமீரக பெண்களாக இருந்தால் அவர்களை புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுப்பது குற்றமாகும். கலீஜ் டைம்ஸ் என்னும் நாளிதழுக்கு பேட்டி அளித்த காவல்துறை அதிகாரி அவர்கள் இது போன்று வீடியோ எடுத்து யூடியூபில் ஏற்றியது தவறு என்றும், அதை முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது தவறு என்றும் கூறியுள்ளார். வேண்டுமானால் வீடியோ எடுத்தவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்து இருக்கலாம்.

இப்போது பிரச்சனை என்னவென்றால் அடித்தவரின் குடும்பத்தினர் வீடியோவை எடுத்து யூடியூபில் போட்டவர் மீது புகார் கொடுத்து இருக்கிறார். அடித்தவரின் மானம் மரியாதை போய் விட்டதாகவும், அதனால் வீடியொ எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் அளித்துள்ளார். நாம் எந்த நாட்டில் இருக்கிறோமோ அந்த நாட்டில் அவர்களின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும். அதிலும் அமீரகம் நம் இந்தியா போல் ஜனநாயக நாடு இல்லை ஆகவே இது போன்ற வீடியோக்களை பதிவேற்றுவதிலும், முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் ஷேர் செய்யும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாம் காவல் துறையில் சிக்கி கொண்டால் கூகிளின் யூடியூபில் இருந்து சிறப்பு லாயரோ அல்லது முகநூலின் மார்க் ஜூக்கர்பெர்க் அனுப்பி வைத்த அட்வகேட் ஜென்ரலொ நமக்காக வாதாடப் போவதில்லை என்பதை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

டெஹல்கா பத்திரிக்கையின் வீடியோவில் நாங்கள் தான் குஜராத் கலவரத்தை நடத்தினோம் என்று தெள்ள தெளிவாக சொன்ன பிறகும் அவர்களுக்கு தண்டனை அளிக்காத ஜனநாயக இந்திய காவல் துறைக்கும் அமீரக காவல் துறை எவ்வளவோ தேவலாம்.

நன்றி : கலீஜ் டைம்ஸ்

இதை பற்றி மேலும் தகவல் அறிய : கிளிக்

தோழமையுடன்
அபு நிஹான்


4 comments:

kaleel rahman said...

இப்படியே அவனுங்களுக்கு பயந்துக்குட்டே இருக்குறதுக்கு என்கிட்ட அந்த மாதிரி மனித உரிமை மீரல் பதிவு இருந்தால் இந்தியாவில் இருந்து நான் பதிவு ஏற்றுகிறேன் சகோ.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ.

இந்த பதிவு எதுக்குன்னா இதை பதிந்தவர் துபையை சேர்ந்தவர் தான், அவரை அரஸ்டும் பண்ணியாச்சு, இது போல் மாட்டாமல் இருக்க வேண்டும் என்பதே எனது அவா. ஆனா எடுத்த வீடியோவ வச்சு வழக்கு தொடரலாமே தவிர தம்பட்ட அடிப்பது தவறு என்பது அமீரக சட்டம்

kaleel rahman said...

எனது கமெண்டு எடிட் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன் சகோ பரவாயில்லை

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

நீங்கள் பதிந்த கருத்தில் எந்தவித எடிட்டும் செய்யப்படவில்லை. எடிட் செய்யும் அளவிற்கு உங்கள் கருத்தில் தவறு ஒன்றும் இல்லை சகோ கலீல்

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template