Thursday, 19 January 2012

நாடும் நடப்பும் - பகுதி 1

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் குறுகிய விடுமுறையில் (70 நாட்கள்)  இந்தியா சென்று திரும்பியதால் நான் கண்டவை / ரசித்தவை / பாதித்தவை மற்றும் என்னை பாதித்தவைகளை பற்றி . 

விண்ணை முட்டும் விலைவாசி

Courtesy : news.vikatan.com
ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும் போதும் விலைவாசி நினைத்து கொஞ்சம் இருப்பை அதிகம் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து போன தடவை சிலவுக்காக ஒதுக்கிய நிதியை விட ஒவ்வொரு தடவையும் அதிகம் எடுத்து சென்றாலும் அதையும் தாண்டி இருக்கும் சிலவுகளை பார்க்கும் போது எப்படி நாம் ஊரில் வந்து செட்டில் ஆக போகிறோம் என்று மலைக்க தோன்றுகிறது. ஆனால் ஊரிலேயே வியாபாரம் செய்யும் சிலரோ சந்தோஷமாக கிடைக்கும் வருமானத்தை வைத்து சிலவு செய்வதை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. ஆம் அதில் ஒரு பேருண்மை இருக்கிறது, அதாவது ஊரிலேயே இருக்கும் பலர் வீண் அநாவசிய சிலவுகள் செய்வதில்லை, நாம் தான் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என்று வீண் சிலவுகள் செய்து கையை கடித்துக் கொள்கிறோம். 

சந்தேகம்: எல்லாவற்றிலும் விலையேற்றத்தை சந்தித்த தமிழகம் ஏன் இன்னும் TASMAC பெருமளவில் விலையேற்றத்தை சந்திக்கவில்லை. சில குடிமகன்களிடம் பேசிய போது, எவ்வளவு விலையேற்றினாலும் குடிப்பவர்கள் குறையப்போவதில்லை எனும் அறிய தத்துவத்தை கூறினார். எப்போது ஏறும் TASMAC சரக்கின் விலை??

வேலைக்கு ஆள் இல்லை

இது கடைகளில் பெரும்பாலும் மாற்றி இருக்கும். ஆனால் இன்றோ வேலைக்கு ஆட்கள் தேவை என்று தான் கடைகளில் எழுதி வைத்து இருக்கிறார்கள், ஆனால் ஏனோ ஆள் கிடைப்பதில்லை. கடைக்கே ஆள் கிடைப்பதில்லை என்றால், தினக்கூலி ஆட்களும் பெருமளவில் வேலைக்கு வருவதில்லை. ஒரு நாள் வேலை பார்த்தாலே இன்னொரு நாள் ரெஸ்ட் எடுத்து விட்டு மறுநாள் வேலைக்கு செல்பவர்களும் இருக்கிறார்கள். இலவசங்கள் தான் இவர்களை சோம்பேறிகளாக்கி விட்டன. முன்பெல்லாம் எந்த வேலையாள் நன்றாக வேலை செய்வார், யார் நியாயமான சம்பளம் கேட்பார் என்று பார்ப்போம், ஆனால் இன்று நிலைமையே வேறு. யார் வேலைக்கு வருகிறார்களோ அவர்களையே வேலை செய்ய சொல்லி அவர்கள் கேட்கும் சம்பளத்தை (சில சமயம் அது உழைப்புக்கு தகுந்த ஊதியத்தை விட கூடுதலாக இருந்தாலும்) கொடுத்து வேலையை முடிக்க வேண்டிய நிலைமை. 

முல்லை பெரியாறு பிரச்சனை

யாரும் இந்த அளவிற்கு இது விஸ்வரூபம் எடுக்கும் என்று நினைக்கவில்லை. இன்னும் சுமூகமான தீர்வை எட்டாத நிலையில் நம் சகோதர சகோதரிகள் தமிழக கேரள எல்லையில் தாக்கப்படுவதும், அதற்காக குரல் கொடுப்பதும் ஒரு பக்கம் இருந்தாலும், கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யாத நிலையில் இருக்கும் வெங்காயம் போன்ற அத்தாவசிய பொருட்கள் வீணாகிப் போவதும் அதனால் விவசாயிகள் வருத்துப்படுவதும் மறுபக்கம் வேதனையான விஷயம். இந்த பிரச்சனையில் கூட தமிழக கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு மனதாக போராட எண்ணாமல் தங்களுடைய மக்கள் கூட்டத்தை எல்லோருக்கும் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தனித்தனியாக போராடுவது வருத்தமளிக்கிறது. இதனை ஈகோ இல்லாமல் இரு மாநிலங்களும் விட்டுக் கொடுத்து பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் அலசுவோம்...
அபு நிஹான்

2 comments:

 1. ஹூம்ம்... போயிட்டு வந்து புலம்பாம இருக்க முடியலை பாருங்க... அப்படி ஆகிடுச்சு ஊரு!!

  /நாம் தான் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறோம் என்று வீண் சிலவுகள் செய்து கையை கடித்துக் கொள்கிறோம். //
  அப்படிங்கிறீங்க? எனக்கென்னவோ மாத்திதான் தோணுது! அப்படியே நாம் வீண் செலவுகள் செய்றோம்னாலும், நாமளா செய்றதில்லை, நம்மளைச் செய்ய வைக்கிறாங்க!!அவ்வ்வ்....

  ReplyDelete
 2. வாங்க ஹுஸைனம்மா,

  //அப்படிங்கிறீங்க? எனக்கென்னவோ மாத்திதான் தோணுது//

  இது ஊருக்கு ஊரு வித்தியாசப்படும் சகோ

  //அப்படியே நாம் வீண் செலவுகள் செய்றோம்னாலும், நாமளா செய்றதில்லை, நம்மளைச் செய்ய வைக்கிறாங்க!!அவ்வ்வ்...//

  கரெக்டா ஜட்ஜ் பண்ணிருக்கீங்க சகோ.

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

  ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...