Thursday 9 February 2012

கதீஜா

நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை

கதீஜா

அன்று ஞாயிற்று கிழமை, வீட்டை ஒழுங்குப்படுத்தலாம் என்று எண்ணி கதீஜா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். கதீஜா, வயது 35, BCom பட்டதாரி, ஒரு சின்ன பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து விட்டு தற்போது வீட்டை மட்டும் கவனித்து கொண்டிருக்கிற சாதாரண குடும்ப பெண்மணி. ஒரு ஆண் பிள்ளை, 9 வது படிக்கிறான், கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். ரொம்ப நாட்களாக ஒரு அட்டை பெட்டியில் பொருட்கள் இருப்பது கண்டு அதை பரணில் போடலாம் என எண்ணி ஒரு நாற்காலியின் மேல் ஏறி பெட்டியை பரணில் வைக்கும் போது ‘பொத்’ என்று பேலன்ஸ் இல்லாமல் கீழே விழ தலையில் சிறிது அடிபட்டு பின்னர் தைலம் தடவி தலைவலி இல்லாமல் போனது. பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு இதே போல் தலைவலி வர இந்த தடவை மாத்திரை போட்டு தலைவலியை போக்கினார். அதன் பிறகு வலியை பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. 10 நாட்கள் கழித்து மறுபடியும் தலைவலி வரவே பயந்து போய் மருத்துவமனைக்கு சென்று MRT ஸ்கேன் எடுத்து பார்த்த பிறகு டாக்டர் சொன்ன செய்தி கேட்டு ஒரு நிமிஷம் என்ன செய்வதென்றே தெரியாமல் வித்தியாசமான மன ஓட்டத்தில் அதிரிச்சியாகி விட்டார். 
உங்களுக்கு brain tumour இருக்குமோனு சந்தேகமா இருக்குமா, எதுக்கும் இன்னொரு டெஸ்ட் எடுத்து பாத்துடுவோம் என்றார் டாக்டர். அல்லாவே, என்ன டாக்டர் சொல்றீங்க, நான் 10 நாளைக்கு முன்னால கீழே விழுந்துட்டேன், அதுனால தான் உங்க கிட்ட வந்தேன், ஆனா நீங்க திடீர்னு இப்படி குண்ட தூக்கி போடுறீங்களே என்று கதீஜா அழும் நிலைக்கு போய்விட்டாள், ஆனால் அதை வெளிகாட்டி கொள்ளாமல், டாக்டர் எப்ப அந்த டெஸ்டை வச்சுக்கலாம் என்று கேட்டு விட்டு உடனே ஒரு பாத்ரூம் தேடி உள்ளே சேர்ந்து யா அல்லாஹ் எப்படி எனக்கு கேன்ஸர் வந்துச்சு என்று வாய் விட்டு அழுதே விட்டாள். அவளால் தாங்க முடியவில்லை, உடனே யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. ஆனால் உரியவர்கள் யாரும் இல்லை. எதிர்த்த வீட்டு பெண்ணை மட்டுமே துணைக்கு அழைத்து வந்தாள். அவளும் வெளியே உட்கார்ந்திருந்ததால் அவளுக்கும் இந்த விஷயம் தெரியாது. சொல்லவும் விரும்பவில்லை. 

உடனே வெளியில் வந்து மாத்திரைகள் வாங்கி கொண்டு பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தாள். நிறைய அழுதாள், ஆனால் ஏனோ மகனிடமும் கணவரிடமும் கூட சொல்ல மனமில்லை. இருக்கட்டும் டெஸ்ட் முடிந்தவுடன் சொல்லிக் கொள்ளலாம் என்று சொல்லவில்லை. வீட்டில் மகன் பள்ளிக்கு சென்ற பிறகு வீட்டில் வேலை செய்ய பிடிக்காமல், கணவனிடத்தில் தொலைபேசியில் பேச கூட பிடிக்காமல் நாட்களை கடத்திக் கொண்டிருந்தாள். 

டெஸ்ட் எடுப்பதற்கான தேதியும் வந்தது, பயந்து கொண்டே அதே எதிர் வீட்டு பெண்ணோடு சென்று டெஸ்ட் எடுத்து முடித்து மருத்துவரை காண காத்திருந்தாள். காத்திருந்த காலமெல்லாம் அந்த இறைவனிடம் வேண்டி கொண்டே உட்கார நிலைகொள்ளாமல் தவித்தாள். இறுதியாக மருத்துவரை அனுகிய போது, இது brain tumour தான், பயப்பட ஒன்னும் இல்லை, இது ஆரம்ப கட்டம் தான். குணபடுத்திடலாம் என்று அவர் சொல்லிக் கொண்டே போக கதீஜாவுக்கு துக்கம் தொண்டையை அடைக்க அழுகை வந்து விடும் போல் இருந்தது. இதை கண்ட டாக்டர், don’t be panic, நீங்க தைரியமானவங்ககிறதானால தான் உங்க கிட்ட நேரடியா சொன்னேன். இப்ப தான் அந்த கட்டி சுண்டைக்காய் ஸைசில இருக்கு. நீங்க ரொம்ப லக்கி. ஏன்னா இதுபொதுவா டென்னிஸ் பால் ஸைஸுக்கு வந்ததுக்கப்புறம் தான் எல்லோருக்கும் தெரிய வரும். தெரிய வற்றப்ப ஆபரேஷன் பண்ற நிலைமையை கடந்து போய்ருவாங்க, ஆனா உங்களுக்கு கடவுள் அருள் செஞ்சிருக்கார், நீங்க கீழே விழுந்ததுல தான் இப்பவே ஈஸியாக கண்டுபிடிக்க முடிஞ்சுது. 

இத எப்படி டாக்டர் சரி பண்ணனும் – கதீஜா. 

ஒரு சின்ன ஆபரஷேன் பண்ணி அந்த கட்டியை எடுத்துடலாம் – டாக்டர். 

கீமோதெராபினு ஏதோ சொல்றாங்களே டாக்டர், அத மாதிரி பண்ணி கட்டிய கரைச்சிடலாமா டாக்டர் -கதீஜா. 

இல்லை அப்படி பண்ண முடியாது. ஆபரேஷன் பன்னுறது தான் safe. பயப்படாதீங்க இது starting stage தான். இப்போதைக்கு தலைவலிக்கு மட்டும் மருந்து கொடுக்கிறேன், என்னுடைய நண்பர் டாக்டர் காளிதாசன போய் கோயம்புத்தூர்ல பாருங்க, அவர் இந்த மாதிரி ஆபரேஷன் அதிகம் பண்ணிக்கிட்டு இருக்கார். தைரியமா இருங்க ஆபரேஷன் நல்ல விதமா நடக்கும் என்று தைரியமாக டாக்டர் சொன்னார். உள்ளுக்குள் பயம் இருந்தாலும் டாக்டர் சொன்ன தைரியம் ஓரளவு போதுமானதாக இருந்தது கதீஜாவுக்கு. ஏன் டாக்டர் சென்னை அப்பலோ, இல்லன்ன பெங்களூர் போய் பாக்கலாமா டாக்டர் என்று கதீஜா கேட்க, அங்கு போனால் செலவுகள் எக்கச்சக்கம் ஆகும், அது தவிர உங்களுக்கு கோயம்புத்தூர் பக்கம், அங்கே போனாலும் இதே ஆபரேஷன் தான் பண்ணுவாங்க என்று டாக்டர் தெளிவாக சொன்னவுடன், ஒரு தெளிந்த மனதுடன், ஆனால் மனம் நிறைய துக்கத்துடன் வீடு வந்து சேர்ந்தாள். 

வழியில் எதிர்த்த வீட்டு பெண்ணுக்கு சந்தேகம் வராதபடி பேச்சு கொடுத்து கொண்டே வந்தாள். வந்தவுடன் முதல் வேலையாக கணவருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல, அவர் அப்படியே துடித்து விட்டார். தன்னுடைய கம்பெனியில் அவசர விடுமுறை (emergency leave) சொல்லி விட்டு ஃப்ளைட் பிடித்து வீடு வந்து சேர்ந்தார். சேர்ந்தவுடன் இருவரும் நிறைய அழுதனர். பின்னர் மனதை திடப்படுத்திக் கொண்டு அவர்கள் சொன்ன கோயம்புத்தூர் டாக்டரை பார்க்க சென்றனர். அவர் இதுலாம் ரொம்ப சிம்பிள் என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னார். கதிஜாவுக்கும் கணவருக்கும் டாக்டரை பிடிக்கவே இல்லை. அங்கிருந்தே தங்களுடைய டாக்டருக்கு போன் பண்ணி வேற ஸ்பெலைஸ்ட் இருந்தா சொல்லுங்க டாக்டர், இவர் ரொம்ப அசால்ட்டா பேசுறார் என்று சற்று கோபத்துடன் சொல்லி விட்டார். ஆனால் அந்த டாக்டர் காளிதாசன் அப்படித்தான் பேசுவார் ஆனால் இந்த விஷயத்தில் கெட்டிக்காரர், உங்களை பயமுறுத்த வேண்டாம் என்று நினைத்து கூட அலட்சியமாக பேசி இருக்கலாம் என்று நம்பிக்கை கூறினார். தொழுகை விஷயத்தில் சற்று பேணுதல் குறைவாக இருந்த கதீஜாவும், அவளுடைய கணவரும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தங்களின் தொழுகைகளை சரியாக தொழுவ தொடங்கினர். ஆபரேஷன் தேதியும் வந்தது. 

நான் ஏதாவது தவறு செய்திருந்தா என்னை மன்னிச்சிடுங்க, எனக்காக அந்த அல்லாட்ட வேண்டிக்கங்க என்று சொல்லி விட்டு, குடும்ப பொறுப்புகளையும் கணவனிடம் ஒப்படைத்து விட்டு அழுகையுடன் ஆபரேஷன் டியேட்டருக்குள் சென்றார் கதீஜா. கதீஜாவின் கனவருக்கோ ஆபரேஷன் பண்ணிய அந்த இரண்டு மணி நேரங்கள் இரண்டு யுகங்களாக கழிந்தன. ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது. ஆனால் மூளையில் ஏற்பட்ட கட்டியால் அதிகமான துக்கம், கோபம், மன உலைச்சலுக்கு ஆளாக கூடாது என்றும் பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் சொன்ன போது கதீஜாவுக்கும், கனவருக்கும் பகீரென்றது. இருந்தாலும் பெரிய இடரையே (துன்பத்தையே) தாங்கி வந்து விட்டோம், இது பெரிய விஷயமல்ல என்று மனதில் எண்ணிக் கொண்டு கதீஜாவை கை குழந்தையை போல் கணவர் பார்த்துக் கொண்டார். இறை நம்பிக்கையுடன் தன்னம்பிக்கையும் சேர்ந்து கதீஜாவை பூரண குணமடைய வைத்தது.

தோழமையுடன்
அபு நிஹான்

3 comments:

  1. இறை நம்பிக்கையுடன் தன்னம்பிக்கையும் சேர்ந்து எப்பிணியையும் எத்துன்பத்தையும் சிதைத்துவிடும்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமுஅலைக்கும் சகோ ....

    நல்ல கதை ...சிறந்த எழுத்து நடை........

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...