Wednesday, 26 January 2011

சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 1

 நடுநிலைமை(?)
இந்தியாவில் சுதந்தரம் அடைந்ததிலிருந்தே முஸ்லீம்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். அதிகமான காலங்களில் முஸ்லீம்கள் தங்களுடைய நாட்டின் மீதுள்ள பற்றை அடுத்தவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டும் நிரூபித்துக் கொண்டும் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

யாரோ ஒருவர், எங்கோ ஒருவர் திருடினால், கொலை செய்தால், வண்புணர்ச்சி செய்தால், மனைவியை துன்புறுத்தினால், விபச்சாரம் செய்தால், லஞ்சம் வாங்கினால், அடுத்த மதத்தவரிடத்தில் பகைமை கொண்டால், அவர்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தினால், குண்டு வைத்தால், திருட்டு டி.வி.டி விற்றால் அவர்களுடைய மதத்தை மறந்து அவர்களை மட்டும் வசைபாடும் இந்த சமுதாயம் மற்றும் மாஸ் மீடியா என்று சொல்லக்கூடிய அனைத்து ஊடகங்களும் அதே செயலை ஒரு முஸ்லீம் செய்தால் அவன் முஸ்லீம் என்ற காரணத்தினாலே அவனை மதத்தோடு தொடர்புபடுத்தி ஊடகங்களாலும், சமுதாயத்தாலும் வசைபாடப்படுவது நம் அனைவரும் அறிந்ததே.
ஒருவன் ஒரு தவறு செய்தால் அதற்கு அந்த குடும்பத்தை, குடும்ப பாரம்பரியத்தை குறை கூறுவோமா? அல்லது இது அவனுடைய தனிப்பட்ட செயல் என்று அவனை மட்டும் குறை கூறுவோமா? சற்று சிந்தியுங்கள் நடுநிலையாளர்களே. சாதரணமாக குடும்பத்தையே குறை கூற முற்படாதவர்கள் அவன் சார்ந்திருக்கும் மதத்தை எவ்வாறு குறை கூற முடியும். இங்கு எந்த ஒரு தவறையும் எந்த ஒரு மதத்திற்காவும் நாம் ஆதரிக்க முடியாது. ஆனால் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எப்படி நியாயமானதோ அதைப் போலவே தவறு செய்தவர்களுக்கும் அவர்களுடைய மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் நியாயமானதே. இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பல உலக நாடுகளிலும் அரசும், ஊடகங்களும் முஸ்லீம் விரோத போக்கை கடைப்பிடிக்கின்றனர். இதனால் உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்கள் தங்களின் உடமைக்கும், உயிருக்கும் பாதுகாப்பு இல்லா நிலையை அடைந்து கொண்டு இருக்கின்றனர்.

எத்தனையோ இந்துக்கள்/கிருத்தவர்கள் கொலை செய்திருப்பர், குண்டு வைத்திருப்பர், அப்போதெல்லாம் மதத்தை சம்பந்தப்படுத்தி பேசாத ஊடகங்கள் தவறு செய்தவர்கள் முஸ்லீம் என்ற காரணத்தினாலே தீவிரவாத அமைப்பில் தொடர்பு என்று அந்த தீவிரவாத அமைப்பிற்கும் தாங்களே புது பெயர் வைத்திடுவார்கள் (கடந்த காலத்தில் பெயர் சூட்டப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயர் போல).

சமீபத்தில் பெரியார் கொள்கையில் தீவிரமாக இருந்த திரு அப்துல்லா (முன்னாள் பெரியார்தாசன்) அவர்கள் இஸ்லாத்தில் இணைந்த பிறகு கூறியது:

"முருகன் கொலை செய்தால், முருகன் கொலை செய்தான் என்றும், நெல்சன் கொள்ளை அடித்தால், நெல்சன் கொள்ளை அடித்தான் என்றும் சொல்கிறார்கள். ஆனால், முகமது தவறு செய்தால், இஸ்லாமிய தீவிரவாதி என்கிறார்கள் என்றார்.

ஒரு முஸ்லீம் தவறு செய்ததாக காவல்துறை விசாரனைக்காக கைது செயப்பட்டால் அதை முதல் பக்கத்தில் வெளியிடும் பத்திரிக்கை அன்பர்களும், தலைப்புச் செய்தியில் சொல்லும் தொலைக்காட்சி சகோதரர்களும், அவன் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டால் அந்த செய்தியை பத்திரிக்கையின் கடைசி பக்கத்திற்கு முதல் பக்கத்திலோ அல்லது ஏதாவது மூலையிலோ கட்டம் கட்டி வெளியிடுவர். இதனால் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று எல்லோரும் ஆச்சரியப்படலாம். இதைப்போல் செய்திகளில் பாரபட்சம் காட்டுவதால் பொதுமக்களுக்கு ஒரு குறிப்பிட சமுதாயத்தின் மீது அதிகம் வெறுப்பு கொள்வதற்கும் அவர்கள் மேல் பயம் கொள்வதற்கும் வழிவகுக்கிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் தனிமைப்பட்டு கொண்டிருக்கிறது.

ஒருபக்கம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தனிப்படுத்த முயற்சி நடந்திருக்கையில், மறுபக்கம் பெருபான்மை சமூகமான இந்துக்கள் சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படவில்லை. டிசம்பர் 23 ஆம் தேதியன்று மலையாளத்தில் தேஜஸ் பத்திரிக்கையில் வந்த செய்திகள் மனதை ரணப்படுத்தின.

கொல்கத்தாவிற்கு அடுத்துள்ள பீவிஹகோலா ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 12 மாணவிகள் ஆர்.எஸ்.எஸ் வெறிக் கும்பலின் பாலியல் பலாத்காரத்திற்கு பலியாகியுள்ளனர். கடந்த நவம்பர் 9 ஆம் தேதி இச்சம்பவம் நடந்தபொழுதிலும் ஊடகங்கள் இச்செய்தியை மூடி மறைத்துள்ளன.


--- தொடரும்

தோழமையுடன்
அபு நிஹான்4 comments:

sakthistudycentre-கருன் said...

Nice.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரா

ஆமினா said...

அதெல்லாம் அந்த ஊடகங்களூக்கு பெரிய விஷயமா தெரியாது சகோ..
தெரிஞ்சாலும் என்ன மேட்டர வச்சு எப்படி மூடி மறைக்கலாம்னு தெரிஞ்சு வச்சுருக்காங்க

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி ஆமினா.

ஊக்கமளியுங்கள். தங்களின் ஆதரவை வைத்து தொடர்ந்து எழுதுகிறேன் இன்ஷா அல்லாஹ்.

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template