சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 1 படிக்க
ஊடகத்துறையில் தீவிரவாத செயல்களை முஸ்லீம்கள் செய்தாலோ அல்லது முஸ்லீம்கள் செய்ததாக குற்றம் (பொய் குற்றம்) சாட்டப்பட்டாலோ வரிந்து கட்டிக் கொண்டு தங்களின் பத்திரிக்கை தர்மத்தை(?) காக்க போட்டி போட்டுக் கொண்டு செய்திகளை வெளியிடும் செய்தி ஊடகமும், காட்சி ஊடகமும் முஸ்லீம்கள் ஒரு நல்ல விஷயத்திற்காக போராடினால் அதை வெளியிடுவதில்லை. கடந்த காலத்தில் ஒரு அமைப்பு இட ஒதுக்கீட்டுக்காக போராட்டத்தை அறிவித்து வெற்றிக்கரமாக முடித்த வேளையில் அதை பற்றி செய்தி ஊடகத்திலோ அல்லது காட்சி ஊடகத்திலோ பெரிதாக பேசப்படாதது மட்டுமல்ல செய்தியாக கூட சொல்லாதது மனதிற்கு மிகவும் வருத்ததை அளிக்கிறது (அந்த ஊர் பதிப்பகத்தில் சில செய்தித்தாள்களில் வந்ததை தவிர). அதே போல் முஸ்லீம்களின் தலைவர் நபி(ஸல்) அவர்களை பற்றி யாரேனும் ஏதேனும் தவறாக கூறினால் அதை பரிசீலப்படுத்தாமல், முஸ்லீம் மக்கள் காயப்படுவார்களே என்று கூட நினைக்காமல் அப்படியே வெளியிட்டு தங்களின் முஸ்லீம் விரோத போக்கை அப்பட்டமாக சில செய்தி ஊடகங்கள் உலகுக்கு உணர்த்துகினறன.
சென்னை போன்ற நகரங்களில் குடும்பத்துடன் தங்குவதற்கோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்து தங்குவதற்கோ வீடு தேடினால் முஸ்லீம் என்ற காரணத்திற்காக கிடைப்பதில்லை. முஸ்லீம் என்றால் குண்டு வைக்ககூடியவர்கள் என்ற தவறான எண்ணம் தோன்றுவதற்கு இந்த சமூகத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களும் ஊடகங்களும் முக்கிய காரணம்.
முஸ்லீம்களை குறிவைத்து விரோத போக்கை கடைப்பிடித்து வரும் அரசாங்கமும், ஊடகங்களும் ஒருபுறம் இருக்க காவல்துறையும், உளவுத்துறையும் நாங்களும் இதைப் போல் தான் செய்வோம் என்று அறுதியிட்டு உறுதியாக செயல்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
காவல்துறையின் முஸ்லீம் விரோத போக்கு:
கோயம்புத்தூரில் காவலர் செல்வராஜ் கொலைக்கு பிறகு நடந்த கலவரம் முதல் மதானி கைது விவகாரம் வரை காவல்துறை முஸ்லீம் விரோத போக்ககை கடைப்பிடைத்தது அனைவரும் அறிந்ததே. இதற்கு உதாரணமாக சமீபத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டால் அவர்களை எப்படி மடக்கி பிடிக்க வேண்டும் என்ற செயல் விளக்கத்திற்காக பொய் தாடி வைத்து தீவிரவாதிகள் என்றால் முஸ்லீம்கள் தான் என்ற தோற்றத்தை மக்கள் மனதில் பதியவைத்தார்கள். காவல்துறையின் இந்த நடவடிக்கை எப்படி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
உளவுத்துறையின் முஸ்லீம் விரோத போக்கு:
குமரி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஜஃபர் சாதிக் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) 2008ஆம் ஆண்டு நடத்திய ஜெயில் வார்டன் கிரேடு II பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றார். ஜஃபர் சாதிக்குடன் தேர்ச்சி பெற்ற அனைவரும் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால் இவருக்கு மட்டும் பணியாணை வழங்கப்படவில்லை. அதிர்ச்சியடைந்த ஜஃபர் தேர்வாணையத்தை அணுகுகின்றார். "நீங்கள் ஒரு மத அமைப்பில் உறுப்பினராக இருப்பதாகவும் விடியல் வெள்ளி பத்திரி்கையின் ஏஜண்டாக இருப்பதாகவும் குமரி மாவட்ட உளவுத்துறை(எஸ்.பி.சி.ஐ.டி) இன்ஸ்பெக்டர் அறிக்கை தந்துள்ளார். ஆதலால் உங்களுக்கு அரசுப்பணி வழங்கவியலாது” எனப் பொட்டிலடித்தாற்போல் கூறியது தேவாணையம். தான் எந்தவொரு மத அமைப்பிலும் உறுப்பினராக இல்லை என ஜஃபர் எவ்வளவோ வாதிட்டும் கேட்காததால் மதுரை உயர்நீதிமன்றக் கிளையை நாடி அந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை உடனடியாக அவருக்குப் பணி நியமன ஆணையை வழங்கிட வேண்டும்" என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையும் பொருட்படுத்தாத உளவுத்துறை மறுபடியும் உயர்நீதிமன்றத்தில் ஜாஃபரை பற்றி தவறான தகவல் கொடுத்ததும். அதன் பிறகும் ஜாஃபருக்கு பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடித்து. மனம் தளராத ஜாஃபர் இறுதியாக உச்ச நீதிமன்றத்தின் மூலமாக பணி நியமன ஆணை பெற்றார்.
அதே போல் தென்காசி ஹாஜா ஷரிஃப் என்பவரும் காவலர் பணிக்குத் தேர்ச்சி பெற்று, உளவுத்துறையின் சதிச் செயல் காரணமாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இவர்மீதும் வழக்கம் போலவே உளவுத்துறை அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறது. (நன்றி : விடியல் வெள்ளி-அக்டோபர் 2010)
ஏற்கனவே 3.5% இட ஒதுக்கீடு கிடைத்தும் வேலைக்கு ஆட்களால் நிரப்பமுடியாத சூழ்நிலையில், உளவுத்துறையின் இது போன்ற செயல்களால் முஸ்லீம்களுக்கு ஜனநாயகத்தின் மீதும், அரசின் மீதும் உள்ள நம்பிக்கை குறைந்து விடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
---தொடரும்
தோழமையுடன்
அபு நிஹான்
//மனம் தளராத ஜாஃபர் இறுதியாக உச்ச நீதிமன்றத்தின் மூலமாக பணி நியமன ஆணை பெற்றார். //
ReplyDeleteஎத்தனை பேருக்கு இது போல போராட தளராத மனமும், பணவசடியும் இருக்கும்? 3.5% கொடுத்துட்டு இப்படியும் செய்தா?
3.5% இட ஒதுக்கீடு ஒரு கண்துடைப்பு போலவே தமிழக அரசு பல நிலைகளில் நிரூபித்து இருக்கிறது. அதன் காரணமாக முஸ்லீம் இயக்கங்கள் பல கொடுத்த அழுத்தத்தின் பேரில் இறுதியாக தேர்தல் உத்தியை வழக்கமாக கையாளும் விதமாக இட ஒதுக்கீட்டை கண்காணிக்க தற்போது ஆணையம் அமைத்திருக்கிறார் தமிழக முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
ReplyDelete