Tuesday, 1 February 2011

சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 3



சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் - பகுதி - 1 பகுதி 2  


நீதித்துறையின் முஸ்லீம் விரோத போக்கு: 

முஸ்லீம்கள் சந்தித்த பல வழக்குகளில் நிரபராதி என்று அறிவிக்கப்பட்ட பல அப்பாவிகள் சிறைச்சாலையிலேயே பல வருடங்கள் செய்யாத குற்றத்திற்கு விசாரணை கைதிகளாகவே தண்டனை அனுபவித்த கொடுமை (சிலர் சிறைச் சாலையிலேயே விசாரணை கைதியாகவே இறந்த கொடுமை) ஏராளம். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கைதானவர்கள் பலர் விசாரணை கைதிகளாகவே தங்களுடைய வாழ்க்கையை சிறையிலேயே கழித்தது உச்சகட்டம். ஏதாவது ஒரு பிரச்சனை, குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் பத்திரிக்கைக்கும், காவல் துறைக்கும் எப்படி செய்தி போகும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் இதைப் பற்றியெல்லாம் சிறிதும் யோசிக்காத நீதிமன்றங்கள் குற்றம் சுமத்தப்பட்ட அப்பாவிகளை விசாரணை கைதிகாளாகவே சிறையிலேயே காலம் தள்ளி தங்களின் விரோத போக்கை கடைபிடித்தனர். ஒரு சிறுபான்மை சமுதாயத்தின் இயக்கங்கள் தவறு செய்ததாக நிரூபிக்கப்படாத போதும் அதன் மீது குற்றம் சுமத்தப்பட்ட காரணத்திற்காக (உ.ம். simi) அந்த இயக்கத்தை பல தடவை தடை செய்த நீதிமன்றம், பெரும்பான்மை சமூகத்தின் இயக்கங்கள் தவறு செய்ததாக நிரூபிக்கப்பட்டாலும் அதனை தடை செய்வதில்லை. 

கோயம்புத்தூர் கலவரம், குஜராத் கலவரம், பாபர் மஸ்ஜிதை இடித்தது, அதை தொடர்ந்து வந்த கலவரங்கள், பாபர் மஸ்ஜித் தீர்ப்பு, மதானியின் தற்போதைய கைது, கைதிகளை தலைவர்களின் பிறந்த நாளின் போது விடுவித்தலில் பாரபட்சம் போன்ற விஷயங்கள் உட்பட நீதிமன்றங்கள் ஒரு தலைபட்சமாகவே செயல்படுகிறது என்பதை நடுநிலைமையாளர்கள் அறிவர். 

செப்டம்பர் 2010 16-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் 8 பேர் லஞ்சப் பேர்வழிகள்' என்கிற குற்றச்சாட்டை முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான சாந்திபூஷண் முன்வைத்தபோது, நாடே அதிர்ந்தது. 

கடந்த ஏப்ரல் 2010 ஆம் ஆண்டு சுப்ரிம் கோர்ட் குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது குஜராத்தில் இளம் பெண் இஷ்ரத் ஜெஹன் உள்ளிட்ட நான்கு பேர் குஜராத் மாநில போலீஸாரால் எண்கவுண்டர் என்ற பெயரில் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான மாஜிஸ்திரேட் அறிக்கையை தடை செய்து, மாஜிஸ்திரேட் தமங் குறித்து கடுமயான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. அதாவது என்கவுண்டர் என்பது எதற்கு பயன்படுகிறதோ இல்லையோ முஸ்லீம்களை அழிப்பதற்கு நன்றாக பயன்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட குண்டு வெடிப்பு வழக்குகளில் இரண்டு அல்லது மூன்றை தவிர அனைத்து வழக்குகளும் இன்னும் விசாரணையில் தான் இருக்கின்றன என்பதும், கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் விசாரணை கைதிகளாகவே இருக்கின்றனர் என்பதும் வருத்தத்திற்குரிய விஷயம். 

மதானி, குணங்குடி ஹணீபா கைது செய்யப்பட்டதும் அவர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. இப்போது நமக்குள் இருக்கும் கேள்வி ஒன்று தான், அதாவது இப்படி விசாரணை கைதியாகவே வாழ்க்கையை தொலைத்த இளைஞர்களுக்கு அரசு என்ன இழப்பீடு தரப்போகிறது. ஆஸ்திரேலியாவில் திரு ஹனீப் அவர்கள் கைது செய்து பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா அரசு அவருக்கு இழப்பீடு தர முடிவு செய்கிறது. நம்முடைய எண்ணம் எப்போதும் போல் கைது செய்து விட்டு தவறில்லை என்றவுடன் இழப்பீடு தர வலியிறுத்துவதல்ல. நன்றாக விசாரித்து உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். தவறு யார் செய்தாலும் தவறு தான், அதில் பாரபட்சம் காட்டக் கூடாது, அதே போல் விசாரணை கைதிகளாக கைது செய்யப்பட்டு இருக்கும் இளைஞர்களின் நலவாழ்வை எண்ணி வழக்குகளை துரிதப்படுத்தி முடிக்க ஆணையிட வேண்டும். தவறாக கைது செய்ததாக நிரூபித்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். 

ஆக்கத்தில் உதவியது : தினமணி, தட்ஸ்தமிழ்

படம்: கூகிள்

...தொடரும்

2 comments:

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...