ஏர்போர்ட் கார் பார்கிங் - பழைய போட்டோ |
சென்னைவிமான நிலையத்தில் விரிவாக்க பணிகளால் புறப்பாட்டுக்கும், வருகைக்கும் ஒருபக்க நுழைவாயில் (வெளியே) வைத்ததின் காரணத்தால் விமான நிலையத்தில் இருந்து டிராலியை தள்ளிக் கொண்டு வண்டியருகே வருவது மிகவும் சிரமமாகி விட்டது. ஒருபக்கம் தொடந்து வரும் வண்டிகள், மறுபக்கம் மக்களின் கூட்டம் மற்றும் மழை என்று மிகுந்த சிரமத்தோடு வண்டியை வந்தடைந்தோம். எங்களை தொடந்து கொண்டே வந்த ஒரு நபர் “தான் ஏர்போர்ட்டில் வேலை செய்வதாகவும், எங்களுடைய பொருட்களை (luggages) தான் விமானத்திலிருந்து இறக்க உதவி செய்ததாகவும், தனக்கு ஏதாவது தரும்படியும் (பிச்சை – லஞ்சம்) எங்களிடம் கேட்டார். நான் அவரிடம் உங்களுக்கு ஏன் நாங்கள் பணம் தர வேண்டும், தர முடியாது என்று கடுமையாக சொல்லி விட்டேன். சார் நான் அப்படி கேட்கலை, நீங்க பார்த்து ஏதாவது கொடுங்க (பிச்சை போடுங்க) என்று கேட்டார், நான் இறுதிவரை தர முடியாது என்று கூறியவுடன், சார் நான் கஸ்டம்ஸிலிருந்து வருகிறேன். அவர்கள் தான் என்னை உங்களிடம் அனுப்பினார்கள் என்று தைரியமாக கூறினான். நான் இந்த தடவை மிகவும் சாதரணமாக கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் நாங்கள் கஸ்டம்ஸை தான் கடந்து வந்திருக்கிறோம், ஒன்றும் தர முடியாது என்று கூறியவுடன், நீங்கள் எப்படி செல்கிறீர்கள் என்று நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தெனாவெட்டாக எங்களிடம் சவால் விட்டு அடுத்த மகிழ்வுந்தை நோக்கி ஓடினான்.
கவனிக்க வேண்டியது:
1. வந்தவனுடைய சட்டையில் அடையாள அட்டை இல்லை.
2. கஸ்டம்ஸ் அதிகாரி அனுப்பியதாக முதலிலேயே கூறவில்லை.
3. Ground operation இல் இருப்பவர்கள் அடிக்கடி வெளியே வர முடியாது
என்னுடைய கணிப்பு படி மேல் சொன்ன ஆள் அங்கு நின்று கொண்டு நோகாமல் நொங்கு தின்று கொண்டு வருபவர்களிடம் காசு பறிக்கின்ற வேலையை செய்பவனாக தான் இருக்க வேண்டும்.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னெவென்றால் வெளியூர் பயணிகளிடம் மட்டும் தான் இதைப் போன்று ஆட்கள் தைரியமாக கேட்கிறார்கள். வெளியூர் கார், வேன்களை குறிவைத்தே இதைப் போன்று செயல்கள் நடக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே பயணிகள் யாரும், யாருக்காகவும் பயப்பட தேவையில்லை. தைரியமாக பேசுங்கள், அவன் கேட்டால் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் வழிமறிப்பான் போன்ற எண்ணங்களில் இருந்து விடுபட்டு எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.
பரவாயில்லயே....
ReplyDeleteஎன்கிட்ட இப்படிலாம் அதட்டி கேட்டிருந்தா அப்பவே ஏதாவது
அவனுக்கு பிச்சை போட்டிருப்பேன்
என்னா டெக்னிக்கலா பிச்சை எடுக்குறானுங்க
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.
ReplyDelete