Thursday, 6 January 2011

அமீரக அடையாள அட்டை - ஒரு கற்பனை

அமீரக அடையாள அட்டை (என்னுதில்லை)
தற்போது அமீரகத்தில் எல்லோரும் அடையாள அட்டை எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். அபுதாபி போன்ற நகரங்களில் கார், பைக் லைசன்ஸ் எடுப்பதற்கு, விசா புதிப்பதற்கு கூட அடையாள அட்டை தேவையென சொல்லியிருப்பதால் மக்கள் அடையாள அட்டை எடுப்பதற்கான மையங்களை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்து அங்கேயே குடும்பம் நடத்தாத குறையாக காத்து கிடந்தனர். அடையாள அட்டை எடுப்பதற்கான கடைசி தேதியை ஜூன் 30 2011 என்று மாற்றிய பிறகு தான் மக்களிடத்தில் டென்ஷன் குறைந்து போனது. 

அப்படி அமீரக அடையாள அட்டையில் என்ன விபரங்கள் இருக்கும், நம்முடைய பாஸ்போர்ட் விபரங்கள், விசா விபரங்கள், நம்முடைய ஸ்பான்ஸர் பெயர், கம்பெணி பெயர், கார், பைக் இருந்தால் – அதனுடைய விபரங்கள், நம்முடைய அலுவலக, இருப்பிட முகவரி, மற்றும் தொலைபேசி எண்கள், கைபேசி எண், நம்முடைய வங்கி கணக்கு என்று நம்முடைய முழு விபரங்களும் அதில் இருக்கும். 


அமீரக அடையாள அட்டையை வைத்து ஒரு கற்பனை உரையாடல்: 

அடையாள அட்டை வைத்திருக்கும் நம்ம கொய்யாத் தோப்பு கோவிந்தன் pizza hut toll free எண்ணுக்கு தொலைபேசியில் அழைக்கிறார். 

பிட்சா ஹட் ஆபரேட்டர்: பிட்சா ஹட்டை அழைத்ததற்கு நன்றி. உங்களுடைய 

கஸ்டமர்: (குறுக்கிட்டு) எனக்கு .. 

பி.ஹ.ஆ : (குறுக்கிட்டு) உங்களுடைய அமீரக அடையாள அட்டை எண்ணை கூற முடியுமா? 

கஸ்: ஒ.கெ, 889861356102049 998-45-54610 

பி.ஹ.ஆ : ஒ.கெ. உங்கள் பெயர் திரு கொய்யாத் தோப்பு கோவிந்தன், இந்திய நாட்டுக்காரர், நீங்கள் ஃப்ளாட் நம்பர் 402, அல் மஸ்கான் பில்டிங்க், பார் துபையில் தங்கியிருக்கிறீர்கள், உங்களுடைய வீட்டு தொலைபேசி எண் : 04 – XXXXXXX, அலுவலக தொலைபேசி எண் : 04- XXXXXXX, உங்கள் கைப்பேசி எண் : 050 – XXXXXXX. இப்போது உங்களுக்கு எங்கு கொண்டு வந்து பிட்சாவைக் கொடுக்க வேண்டும் சார். 

கஸ்: ஸ்ஸ்ஸ்ஸ். அப்பா, ஒரு நம்பர் கொடுத்ததுக்கு இப்படியா? இவனெல்லாம் நூறு தடவை டிஆர் படத்த பாக்க சொல்லனும்னு முனுமுனுத்துக்கிட்டு, எப்படி சார் உங்களுக்கு என்னுடைய போன் நம்பர்லாம் தெரியுது? (நல்ல வேளை பக்கத்து வீட்டுல ஃபிகர் இருக்கறத சொல்லல) 

பி.ஹ.ஆ: ஓ. அதுவா, ஜுஜுபி மேட்டரு, நம்ம சிஸ்டத்துல தான் எல்லாமே இருக்குல்ல. 

கஸ்: அடி செருப்பால (முணங்கிக் கொண்டே) நான் Sea food pizzaa ஆர்டர் பண்ணட்டா? 

பி.ஹ.ஆ: அய்யைய்யோ அப்படில்லாம் ஆர்டர் பண்ண முடியாது சார்? 

கஸ்: அட நாதாரிங்களா (முணங்கிக் கொண்டே) ஏன் சார், எப்போதும் போல மீன் புடிக்க போகலையா? 

பி.ஹ.ஆ: எங்ககிட்ட இருக்கிற உங்களோட மெடிக்கல் ரெக்கார்டு படி கடைசியா நீங்க கல்மேர் மருத்துவமனைக்கு செக்கப்புக்கு போனப்ப உங்களுக்கு இரத்த கொதிப்பு, அதிக கொலஸ்ட்ரால் எல்லாம் இருக்குன்னு போட்டுருக்கு சார். 

கஸ்: ஏன், எனக்கு மூலம் இருக்குன்னு அதில இல்லையாடா ராஸ்கல் (முணங்கிக் கொண்டே) என்னது? தர மாட்டிங்களா? ங்கொய்யால காசு நம்ம கொடுத்தாக்கூட பிட்சா தர மாட்டான்னுக போல இருக்கு (முணங்கிக் கொண்டே) அப்ப என்ன தான் எனக்கு தருவீங்க? 

பி.ஹ.ஆ: காய்கறி பிட்ஸா வாங்கிக்கங்க சார், நல்லா இருக்கும். 

கஸ்: அதெப்படிங்க, எனக்கு காய்கறி பிட்ஸா தான் பிடிக்கும்னு நீங்க சொல்றீங்க? 

பி.ஹ.ஆ: நீங்க சாப்பாட்டு ராமன் எழுதுன கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்ங்கிற புத்துகத்த டேரா நேஷனல் லைப்ரரில போன வாரம் எடுத்தீங்கள்ள சார், அத வச்சுத்தான். 

கஸ்: ஸ்ஸ்ஸ். அப்பா? ஏண்டா இப்படி படுத்திறீங்க? என்னால முடியலடா? (முணங்கிக் கொண்டே) 3 ஃபேமிலி சைஸ் காய்கறி பிட்சா கொடுங்க சார்? அப்படியே எவ்வளவு அமௌண்டுன்னு சொல்லுங்க சார்? 

பி.ஹ.ஆ: உங்க வீட்டுல இருக்கிறது 10 பேர், உங்களுக்கு 3 பிட்ஸா போதுமா? மொத்தம் 112 திர்ஹம் சார்? 

கஸ்: இதுவும் தெரிஞ்சிருச்சா? (முணங்கிக் கொண்டே) கிரெடிட் கார்டுல பணம் கட்டலாமா? 

பி.ஹ.ஆ: முடியாது சார், நீங்க பணம் தான் கொடுக்கனும். உங்க இ.க பாங்க்ல ஓவர் லிமிட் ஏற்கனவே இருக்கு, பட்டி பேங்க்ல வேற 3,720.55 திர்ஹம் பாக்கி வச்சிருக்கீங்க, இதுல நீங்க எப்படி கிரெடிட் கார்டுல பணம் கட்டுவீங்க? 

கஸ்: யார்ரா இவன், பெரிய ரோதனையா போச்சு, ஏன் தான் இந்த அடையாள அட்டையை கொண்டு வந்தாங்களோ? (முணங்கிக் கொண்டே) சரிப்பா உங்க ஆள் வர்ரதுக்குள்ள நான் போய் க.ம. பேங்க் ATM ல பணத்த எடுத்துட்டு வந்துறேன். 

பி.ஹ.ஆ: அது முடியாது சார். ஏற்கனவே நீங்க க.ம. பேங்க்ல ஒரு நாளைக்கு பணம் எவ்வளவு எடுக்க முடியுமோ அந்த லிமிட் பணத்த எடுத்தாச்சு, அதுனால அந்த ATM மிஷின்ல பணம் கேட்டிங்கன்னா? இரத்தம் தான் வரும், பணம் வராது. 

கஸ்: என்னடா இது சின்னபுள்ளத்தனமா இருக்கு, ஒரு பிட்ஸா வாங்கப் போய் எவ்வளவு பேச்சு (முணங்கிக் கொண்டே) சார் எங்கிட்ட பணம் இருக்கு சார். உங்க ஆள் வர்ரதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? 

பி.ஹ.ஆ: 45 நிமிஷம் ஆகும் சார், உங்க Honda civic கார எடுத்துக்கிட்டு வந்திங்கன்னா சீக்கிரம் வாங்கீடு போயிரலாம் சார்? 

கஸ்: கார் மேட்டரு இவனுக்கு எப்படி தெரியும்(முணங்கிக் கொண்டே) என்னது? 

பி.ஹ.ஆ : சிஸ்டத்துல உள்ள details படி உங்க வண்டி இன்னும் 23 நாள்ள முல்கியா (FC) முடியப் போகுது, அப்புறம் உங்க இன்சூரன்ஸும் ஏற்கனவே முடிஞ்சிருச்சு. 

கஸ்: முடியிலடா(முணங்கிக் கொண்டே) 

பி.ஹ.ஆ : சார் வேற ஏதாவது வேணுமா? 

கஸ்: கொஞ்சம் விஷம் கொடு (முணங்கிக் கொண்டே) சார் அந்த மூனு பாட்டில் கோலா அனுப்புவீங்க தானே? 

பி.ஹ.ஆ: சார், சாதரணமா எல்லாருக்கும் நாங்க கொடுப்போம் சார், உங்களுக்கு சுகர் இருக்கிறதுனால தரமுடியாது சார். 

கஸ்: பேமாளி, கஸ்மாலம், ஏண்டா ஒரு அட்டையை எடுக்க சொல்லிட்டு இப்படி படுத்திறீங்க? 

பி.ஹ.ஆ: சார், பாத்து கவனமா பேசுங்க? இப்படித்தான் துபை – ஹத்தா ரோட்டுல 15 ஜூலை 2008 ல ஒரு BMW கார தப்பா ஓவர்டேக் பண்ணிட்டு போலிஸையும் சேர்த்து திட்டிட்டு, ஜெயில்ல இருந்தீங்கலே ஞாபகம் இருக்கா? அத மாதிரி ஆயிடப்போவுது 

கஸ்: அதுவும் தெரிஞ்சிருச்சா? (மயங்கி விழுகிறார்) 

பி.ஹ.ஆ: sir, r u still there? Hello? 

டிஸ்கி: அமீரக அடையாள அட்டை அறிவிப்பு வந்த சில நாட்களில் ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சல். கொஞ்சம் என்னுடைய கற்பனையும் சேர்த்து எழுதியிருக்கிறேன்.

தோழமையுடன்
அபு நிஹான்


6 comments:

  1. அந்த அடையாள அட்டைக்குச் செய்யப்பட்ட சோதனைகளைக் கண்டு ரு பயம்தான் வந்துது, என்னதிது, நாம என்ன கிரிமினலான்னு டவுட் வந்துடுச்சு.

    ReplyDelete
  2. நடந்தாலும் நடக்கும்!

    ReplyDelete
  3. உண்மை தான், அதிலும் நம் கை ரேகையை பதியவைக்கும் போது ஏதோ கிரிமினல்களின் கை ரேகையை பதிப்பது போல் பதிப்பதால் பயம் தொற்றிக் கொள்கிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி

    ReplyDelete
  4. @சென்னை பித்தன்:

    இதைப் போல் இந்தியாவிலும் அடையாள அட்டை கொண்டு வரப் போகிறார்களாம்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரா

    ReplyDelete
  5. பாதி படித்து விட்டு பின்னூட்டத்துக்கு வந்து விட்டேன்.

    அடையாள அட்டையை நகைச்சுவையாக்காமல் அதன்
    நலன்களை பலரும் அறியச் செய்திருக்கலாம்.ரேஷன் கார்டு,
    வாக்காளர் அட்டை இன்னும் பல அறிமுக தகவல் காகிதங்களை
    தடை செய்யவும் அனைத்து தகவல்களும் சின்ன அட்டைக்குள்
    அடக்கம் என்பதும் பலரையும் போய்ச் சேர வேண்டிய செய்தி
    நண்பரே!

    ReplyDelete
  6. சகோ நடராஜன் அவர்களுக்கு,

    இப்போது அமீரகம் இருக்கும் நிலையில் அடையாள அட்டையின் முக்கியத்துவம் குறித்தோ அல்லது அவற்றை எடுக்க வேண்டும் என்றோ யாரும் விரும்பவில்லை, காரணம் அடையாள அட்டை எடுக்க வருடம் 100 திர்ஹம் தங்களுடைய பணத்தை சிலவு செய்தல் வேண்டும். இப்போது அமீரக இருக்கும் சூழ்நிலை அனைவருக்கும் தெரியும். கிடைக்கும் சம்பளத்தில் இதற்கு வேறு சிலவு செய்தால் மிகவும் கஷ்டம். அதிலும் கடைநிலை ஊழியர்களும் இதற்கு சிலவு செய்து எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பதால் அனைவரும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

    தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...