Monday, 11 April 2011

பெண்கள் யாருக்கு ஓட்டு போட போகிறீர்கள்? ஒரு அவசர வேண்டுகோள்






வாக்களிக்க காத்திருக்கும் பெண்கள்
படித்த பெண்களை பொருத்தவரை நாட்டின் இன்றைய சூழலில் யார் ஆட்சிக்கு வந்தால் நாடு நலமாக இருக்கும் என்று சிந்திக்கின்ற ஆற்றலை வைத்து வரும் தேர்தலில் வாக்களிப்பர். ஆனால் படிக்காத உலகம் / அரசியல் அறியாத பெண்கள் தற்போது நாட்டின் நிலைமை என்ன? யாருக்கு ஓட்டு போட்டால் நம்ம தொகுதி சிறப்பாக இருக்கும்/ அல்லது நமது நாடு நலமாக இருக்கும் என்று சிந்திப்பது மிக குறைவு.

அப்படிபட்ட பெண்கள் பொதுவாக தங்களின் வீட்டில் உள்ள தந்தை, உடன்பிறந்தோர், கணவன் அல்லது பிள்ளை யாருக்கு ஓட்டு போட சொல்கிறார்களோ அவர்களுக்கே ஓட்டு போடுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். பெண்களுக்கு அரசியல் பற்றி அதிக ஞானம் இல்லாமையும், அதில் ஈர்ப்பு இல்லாமையும் இதற்கு காரணம் என்றாலும் ஒட்டுரிமை என்பது ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமான தனிப்பட்ட உரிமை (கவனிக்கவும், இங்கு உங்களின் கருத்தை யாருக்கும் திணிக்க முடியாது) என்ற உயரிய தத்துவத்தின் அடிப்படையில் பெண்கள் ஓட்டு போடும் போது சிலவற்றை யோசிக்க வேண்டும்.

அதாவது யாருக்காவது தங்களின் குடும்பத்து ஆண்கள் ஓட்டு போட சொன்னால் அந்த குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டு போட சொல்லும் காரணத்தை கேளுங்கள். நியாயமான காரணங்களாக இருந்தால் அவர்கள் சொல்வது போல் வாக்களியுங்கள். இதுவல்லாமல் கீழ் காணும் காரணங்களை சொன்னால், பெண்களே தயவு செய்து யார் ஆட்சிக்கு வந்தால் நாடு நலமாக இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களோ, யாருக்கு வாக்களித்தால் உங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியுமென்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்களுக்கு உங்கள் வாக்கை அளித்து உங்கள் உரிமையை வென்றெடுங்கள்.

ஆண்கள் பெண்களிடம் சொல்லும் காரணங்களில் சில

  • நம்ம காலங்காலமாக இந்த கட்சிக்கு ஓட்டு போட்டுருக்கோம், அதனால இந்த தடவையும் அதே கட்சிக்கு ஓட்டு போடுவோம்.
  • நம்ம உறவினர் இந்த கட்சியில தான் இருக்கார், அதற்காக அதே கட்சிக்கு ஓட்டு போடுவோம்
  • நம்ம மத / சாதி கட்சிக்காரர்கள் இந்த கூட்டணிக்குத் தான் ஆதரவு தெரிவிக்கிறார்கள், ஆதலால் நாமும் அதே கூட்டணிக்கு ஓட்டு போடுவோம்
  • நமக்கு பிடித்த நடிகர் / நடிகையர் இந்த கூட்டணிக்கு தான் ஆதரவு தெரிவிக்கிறார்கள், ஆதலால் நாமும் அதே கூட்டணிக்கே ஓட்டு போடுவோம்
  • நமக்கு தெரிந்தவர் நம்ம தொகுதியில நிக்கிறார், அதுனால அவருக்கே (அவர் தகுதியில்லாதவராக இருந்தாலும்) ஓட்டு போடுவோம்
போன்ற சப்பையான காரணங்களை உங்கள் வீட்டு ஆண்கள் உங்களிடம் சொன்னால், கட்டாயம் இதற்கு உடன்படாமல் உங்கள் விருப்பத்திற்கு வாக்களியுங்கள் பெண்களே! ஆனால் உங்கள் வாக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும், உங்களின் நலனுக்கும் உதவும் என்பதை மனதில் வைத்து வாக்களியுங்கள். தேர்தல் நேரத்தில் கிடைக்கின்ற பணத்திற்காகவோ, அல்லது அவர்கள் கொடுக்கும் ஏதேனும் பொருளுக்காகவோ உங்கள் வாக்குகளை விற்காமல் நியாயமான முறையில் சிந்தித்து வாக்களியுங்கள். உங்களிடம் ஒரு ஓட்டு வாங்குவதற்கே பணம் கொடுக்க கட்சிக்காரர்கள் முன்வருகிறார்கள் என்றால் அவர்களின் எண்ணம் என்ன என்பதை சாமானிய, படிக்காத பெண்களும் தெரிந்து கொள்வார்கள்.

தேர்தல் நாள் அன்று உங்களுக்கு விடுமுறை கிடைக்கிறதென்று கிடைத்த விடுமுறையை வீணாக்க மாட்டேன் என்று கூறாமல் உங்களின் ஓட்டுரிமையை யாரும் களவாடாமல் உங்களின் ஜனநாயக உரிமையை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் யாருக்கும் அஞ்சாமல் வாக்களியுங்கள்.

உப்பு சப்பில்லா வாக்குறுதிகளையும், வார்த்தை ஜாலங்களையும், அனல் பறக்கும் பிரச்சாரங்களையும், நடிகர், நடிகைகளின் பிரச்சாரத்தையும் நம்பி வாக்களிக்காமல் மனசாட்சிக்கு வாய்ப்பளித்து வாக்களியுங்கள், பிறரையும் வாக்களிக்க தூண்டுங்கள்.
 
யாருக்குமே ஓட்டளிக்க உங்கள் மனம் இடம் தரவில்லையென்றால் "49 ஓ" வையாவது போட்டு நீங்கள் சிறந்த குடிமகனாக / குடிமகளாக விளங்குங்கள்.

படங்கள் : கூகிள்

தோழமையுடன்
அபு நிஹான்



2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் அபுநிஹான்...

    நல்லாத்தான் எழுதி இருக்கீங்க... ஆனா...
    அதெப்படி...? நீங்க சொல்றதெல்லாம் சரியா..?

    எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பெண்கள் எல்லாரும் ஆண்கள் சொல்ற சின்னத்துலதான் ஒட்டை குத்துறாங்கன்னு முடிவு பண்ணினீங்க?

    என்னமோ போங்க... இவ்வளவு வெகுளியாக எல்லாம் இருக்ககூடாது சகோ..!

    ReplyDelete
  2. //படிக்காத உலகம் / அரசியல் அறியாத பெண்கள் தற்போது நாட்டின் நிலைமை என்ன? யாருக்கு ஓட்டு போட்டால் நம்ம தொகுதி சிறப்பாக இருக்கும்/ அல்லது நமது நாடு நலமாக இருக்கும் என்று சிந்திப்பது மிக குறைவு.//

    இவங்களத்தான் நான் சொல்றேன் சகோ.

    நம்ம கேள்வி பட்டதை வைத்து தான் சொல்றேன் சகோ.

    //என்னமோ போங்க... இவ்வளவு வெகுளியாக எல்லாம் இருக்ககூடாது சகோ..!//

    ஆரம்பிச்சிட்டீங்களா?

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...