போன பதிவில் விடா முயற்சி, மற்றும் கடும் உழைப்பை பற்றியும் பார்த்தோம். இந்த பகுதியில் சரியான திட்டமிடல் பற்றி எனக்கு தெரிந்த விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இன்று பலரும் தொழில் செய்ய ஆர்வப்பட்டு என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்திருக்கையில் எல்லோருக்கும் தோன்றுவது அந்த ஊரிலேயே இலாபம் தரக்கூடிய தொழில் எது என்று கூர்ந்து கவனித்து அந்த தொழிலை ஆரம்பிப்பது. இப்படி பார்த்து மட்டும் தொழிலை ஆரம்பிக்க கூடாது.
தொழில் தொடங்கும் போது யோசிக்க வேண்டியது
- ஆரம்பிக்கும் தொழிலை பற்றிய நுன்னறிவு நம்மிடம் இருக்கிறதா?
- தொழிலை ஆரம்பிக்க தேவையான பணம் மற்றும் தகுந்த இடம் போன்றவை கைவசம் இருக்கிறதா?
- இந்த தொழிலில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?
- தொழில் ஆரம்பிக்கும் முன் ஏதெனும் தடங்கள் வந்தால் வேறு தொழில் செய்வதற்கான மாற்று சிந்தனை.
- தொழிலில் மேற்கொண்டு முதலீடு ஏதேனும் செய்ய வேண்டுமானால் அதற்கு தேவையான பணம் நம்மிடத்தில் இருக்கிறதா?
- செய்யும் தொழிலில் எந்த ஆள் துணை இல்லாமல் இருந்தாலும் தன்னால் மட்டும் கூட அந்த தொழிலை நடத்த முடியுமா? என்று ஆராய்வது மிக முக்கியம். உதாரணத்திற்கு ஹோட்டல் வைத்து நடத்துபவர்கள் திடிரென்று புரொட்டா மாஸ்டர் ஹோட்டலுக்கு வராமல் விடுப்பு எடுத்தாலோ அல்லது வேலையை விட்டு நின்றாலோ முதலாளிக்கு புரோட்டா போட தெரிந்திருக்க வேண்டும். (இது எல்லா தொழிலுக்கும் ஒத்துவராது, சொல்லவந்தது தொழிலை பற்றிய அறிதல் வேண்டும்)