Sunday, 8 August 2010

ஹஜ் பயணிகளுக்கு - விஷேஷ பாஸ்போர்ட்

காவல் துறை நிரூபண - சான்றிதழ் இல்லாமலேயே ஹஜ் பயணிகளுக்கு 8 மாத பாஸ்போர்ட்

முதல் பாஸ்போர்ட் சென்னையில் 15 நாளில் வழங்கப்பட்டது

காவல் துறையின் நிரூபண சான்றிதழ் இல்லா மலேயே ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு 8 மாதம் செல்லத்தக்க பாஸ் போர்ட்டை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள் ளது. அதன்படி 15 நாளில் முதல் பாஸ்போர்ட் சென் னையில் கடந்த திங்கட் கிழமை வழங்கப்பட்டது. 

வழக்கமாக பாஸ் போர்ட் வாங்க ஒருவர் விண்ணப்பம் செய்தால் அவரை பற்றி காவல் துறையினர் விசாரித்து ஒரு நிரூபண சான்றிதழ் வழங்க வேண்டும் அதன் அடிப் படையிலேயே பாஸ் போர்ட் வழங்கும் அலுவ லகம் சம்பந்தப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட்டை வழங்கும். இந்த முறையில் கால தாமதம் ஏற்படுகிறது. 

சமீபத்தில் சவுதி அரேபியா சர்வதேச பாஸ்போர்ட் வைத்தி ருப்பவர்கள்தான் தங்கள் நாட்டிற்கு ஹஜ்பயணம் மேற்கொள்ள முடியும் என்று அறிவித்தது 

இந்த நிலையில், ஹஜ் பயணிகளுக்கு பாஸ் போர்ட் வழங்க மத்திய அரசு காவல் துறையின் நிரூ பண சான்றிதழ் இல்லாமலேயே 8 மாதம் செல்லத் தக்க தற்காலிக பாஸ் போர்ட்டுகளை வழங்கும்படி அனைத்து பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Wednesday, 4 August 2010

யெஸ் மெண் குழுவினர்

நம்பியவர்கள் ஏமாற்றப்படுவார்கள்! 


Yes Men? அப்படியென்றால் என்ன? திரைப்படம் போலல்லவா இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். திரைப்படங்களில் செய்யும் அனைத்து ஹீரோயிஸத்தையும் இரு நண்பர்கள் இணைந்து செயல்படுத்தி காட்டி கொண்டிருக்கிறார்கள். 

Andy Bichlbaum, Mike Bonanno இருவரும் The Yes Men குழுவைச் சேர்ந்தவர்கள். உலகின் பணக்கார நிறுவனங்களுக்கு இவர்கள் எதிரிகள். பிபிசி தொடங்கி நியூ யார்க் டைம்ஸ் வரை பல செய்தி நிறுவனங்கள் இவர்களைக் கண்டு அலறியிருக்கிறது. திரைப்படங்களில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய அசாதாரணமான விஷயங்களை இந்த இருவரும் நிஜ வாழ்வில் நடத்திக்காட்டியிருக்கிறார்கள்.

எது பிடிக்கவில்லையோ அதுவாக மாறிவிடு என்பதுதான் இவர்களது சித்தாந்தம். புஷ்ஷின் அராஜக ஆட்சி பிடிக்கவில்லை என்பதால் அவர் பெயரில் கிண்டலாக ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தார்கள். (www.gwbush.com என்னும் முகவரியில் தொடங்கப்பட்ட அந்தத் தளம் தற்போது உபயோகத்தில் இல்லை.) என்னை அபாண்டமாகவும் அநியாயமாகவும் விமரிசனம் செய்கிறார்கள் என்று புஷ்கூட வருத்தப்பட்டுக்கொண்டார்.

Tuesday, 3 August 2010

பகிரங்க விவாதத்திற்கு ஒபாமா தயாரா? - நிஜாத்!

அமெரிக்க அதிபர் "பராக் ஹுசைன் ஒபாமாவுடன்" விவாதம் செய்ய நான் ஆவலாக உள்ளேன் என ஈரான் அதிபர் "அஹ்மத் நிஜாத்" கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்: "நான் ஒபாமாவை சந்திக்க விரும்புகிறேன். நான் வரும் செப்டெம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்க்காக அமெரிக்கா வருகிறேன்.

அந்நேரம் நான் அங்கு பராக் ஒபாமாவை சந்தித்து அவருடன் உலக பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்: உலகளாவிய ஊடகங்களுக்கு மத்தியில் இவ்விவாதம் நடைபெறவேண்டும் எனவும், யாருடைய கருத்தை மக்கள் அதிகம் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை பார்க்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்". இவ்வாறு அஹ்மத் நிஜாத் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

ஈரான் மீது பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழைப்பு கொடுக்கும் ஒபாமாவிற்க்கு அஹ்மத் நிஜாத் விவாதத்திற்க்கு அழைப்பு கொடுத்திருப்பது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : இந்நேரம்.காம்

Monday, 2 August 2010

உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் - பகுதி 1

ஏக இறைவனின் திருப்பெயரால் 

நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம். திறந்து விசாரிக்கும் போது, 'எனது தாயார் கார் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார், எனவே அவருக்கு இரண்டு யூனிட் இரத்தம் தேவை, இரத்தம் தந்து எனது தாயாரைக் காப்பாற்றுங்கள்' என்று தனது தாயாருக்காக மகன் கெஞ்சிக் கொண்டு நிற்கின்றார். உடனே தன்னார்வ இரத்த தானக் கழகத்தின் பொறுப்பாளர், 'உங்கள் தாயாரின் இரத்தப் பிரிவு என்ன?' என்று கேட்க, அவர் இரத்தப் பிரிவைக் கூறுகின்றார். இரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அமைதியாக, உங்கள் இரத்தப் பிரிவு என்ன என்று கேட்கும் போது, 'எனது இரத்தப் பிரிவும் அது தான். எனினும் நான் இதுவரை இரத்தம் கொடுத்ததில்லை. பயமாக இருக்கின்றது' என்று மகன் கூறுகின்றார். 

இது போல், மனைவிக்குப் பிரவச வேதனை, அறுவை சிகிச்சை என்று ஓடோடி வரும் கணவனிடம், நீங்கள் உங்கள் இரத்தத்தைக் கொடுத்து விட்டு, நீங்கள் கேட்கும் இரத்தப் பிரிவை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அந்தக் கணவனின் முகத்தில் இறுக்கம் ஏற்பட்டு விடுகின்றது. அம்முகத்தில் பேயறைந்தாற்போல் ஒரு தோற்றம்! 

பிளாக் பெர்ரி போன்களுக்கு சவுதி, அமீரகத்திலும் தடை ?

துபாய் : பாதுகாப்பு காரணங்கள் கருதி ஏற்கனவே இந்தியாவில் பிளாக் பெர்ரி போன்களை தடை செய்ய இந்தியா பரீசிலித்து வருவதை இந்நேரத்தில் பிரசுரித்திருந்தோம். தற்போது அதே காரணங்களை கூறி வரும் அக்டோபரில் இருந்து பிளாக்பெர்ரி போன்களை தடை செய்ய போவதாக ஐக்கிய அரபு அமீரகமும் அதனை தொடர்ந்து சவூதி அரேபியாவும் கூறியுள்ளது.
இது பற்றி கருத்து கூறிய ஐக்கிய அரபு அமீரக தொலை தொடர்பு அதிகாரி பிளாக்பெர்ரியின் மின்னஞ்சல், அவுட்லுக் மற்றும் பிற வசதிகள் அரசின் கண்காணிப்பில் கொண்டு வர முடியாத படி கனடாவில் உள்ள சர்வரோடு இணைக்கப்பட்டிருப்பதால் நாட்டின் சமூக மற்றும் அரசியல் ஸ்திரதன்மைக்கு அச்சுறுத்தலாய் உள்ளது என்று கூறினார்.
இது இறுதி முடிவு என்று கூறிய அவ்வதிகாரி பிளாக்பெர்ரி தங்கள் நிபந்தனைகளுக்கு கட்டுபட்டால் அவை அனுமதிக்கப்படும் என்றும் அதன் போட்டியாளர்களான் நோக்கியா, ஸாம்ஸங் போன்களில் எப்பிரச்னையும் இல்லை என்றார். ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் எடிஸலாட், தூ இரண்டும் இம்முடிவை ஆதரிப்பதாகவும் சொன்னார்.
அமீரக முடிவு பற்றிய செய்தி வெளியான சிறிது நேரத்தில் சவூதி அரசாங்கமும் பிளாக்பெர்ரியை தடை செய்வது குறித்து பரீசிலித்து வருவதாக சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே பாதையை பிற வளைகுடா அரசுகளும் பின்பற்றினால் பிளாக்பெர்ரிக்கு பெரும் பிரச்னை ஏற்படும் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி: இந்நேரம்.காம்

Monday, 26 July 2010

முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை

சகோதர சகோதரிகளே, இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது  உண்டாகட்டுமாக! 

தலைப்பை படித்தவுடன் முஸ்லீம் சமுதாயத்தில் கல்வியின் நிலை விகிதாச்சார அடிப்படையில் குறைந்தது பற்றி இந்த பதிவு என்று நினைக்க வேண்டாம். இதில் அரசாங்க கல்லூரிகளின் சலுகைகள் பற்றி, நம்மவர்கள் அதில் கவனம் செலுத்தாதது பற்றியும் விரிவாக காணலாம். சமீபத்தில் நான் படித்த செய்தி இந்த பதிவு எழுதுவதற்கு உந்தியது. 

Wednesday, 14 July 2010

மார்க்கத்தின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்து விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்ராயம் கொள்வதற்கு, விசுவாசியான எந்த ஆணுக்கும், எந்த பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ அவர், பகிரங்கமான வழிகேடாக திட்டமாக வழி கெட்டுவிட்டார். (அல்குர்ஆன்:33:36) 

இந்த ஒரு அத்தியாயம் மட்டுமே போதும், மார்க்கத்தின் உரிமை அல்லாஹ்விற்கே உரியது என்று சொல்வதற்கு. இறைவனுடைய சொல்லையே வாழ்க்கையாக வாழ்ந்து காட்டிய நபி (ஸல்) அவர்களுக்கே மார்க்கத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை அல்லாஹ் கொடுக்கவில்லை என்றால், இன்று மவ்லவிகள், இமாம்கள், ஷெய்குமார்கள் என்று சொல்லக் கூடியவர்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஒளியில்லாமல் மார்க்கத்தின் அதிகாரத்தில் கை வைக்க, மார்க்கத்தில் புதிதாக ஒரு விஷயத்தை இபாதத் என்று சொல்லவோ அல்லது மார்க்கத்தில் சொல்லப்பட்ட இபாதத்களை நீக்கவோ, திருத்தம் செய்யவோ என்ன அதிகாரம் இருக்க முடியும். 

எத்தனையோ விஷயங்களில் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருந்தாலும் இமாம்களின் பெயரால், மவ்லவிகளின் பெயரால், 7 வருடம் ஓதியவர்கள் என்ற பெயரால் எவ்வளவு அனாச்சாரங்களை நாம் நித்தம் நம் வாழ்க்கையில் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு விஷயம் இபாதத் என்று முடிவு செய்வதற்கு அதிகம் தகுதியானவன் அல்லாஹ். அவன் அல்லாது அவனுடைய திருத்தூதருக்கே தனிப்பட்ட முறையில் அல்லாஹ்விடமிருந்து வஹி வராமல் எதையும் இபாதத் என்றோ அல்லது மார்க்கம் என்றோ முடிவு செய்ய அனுமதி இல்லை. 

நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்படாத அதிகாரம் 

“லவ்லாக லமா கலக்துல் அஃப்லாக்” – உம்மைப் படைக்கும் நோக்கமில்லாது இருந்தால் இந்த உலகையே படைத்திருக்க மாட்டேன்”. (ஹதீஸ் குத்ஸி) என இறைவனே நபி பெருமானாரை சிறப்பித்துக் கூறியுள்ளான். 

அப்படி சிறப்பு வாய்ந்த நபிக்கே மார்க்கத்தில் சொந்த கருத்தைக் கூற அனுமதி இல்லை என்னும் பட்சத்தில் நான்கு இமாம்களுக்கு/ மவ்லவிகளுக்கு / ஷெய்குமார்களுக்கு எப்படி அனுமதி/அதிகாரம் இருக்க முடியும். நான்கு இமாம்களுக்கு/ மவ்லவிகளுக்கு/ ஷெகுமார்களுக்கு அனுமதி / அதிகாரம் இல்லை என்று சொன்னால் இமாம்களை கண்ணியக் குறைவாக பேசுகிறோம் என்று சிலர் கூறுகின்றனர். நபி(ஸல்) அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மார்க்கத்தில் சட்டம் இயற்ற அனுமதி அளிக்கப்படவில்லை என்று சொன்னால் நபி (ஸல்) அவர்களை கண்ணியக் குறைவாக பேசுகிறோம் என்று யாராலும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வே நபி(ஸல்) அவர்களை தனிப்பட்ட முறையில் தன்னிடம் இருந்து வஹி வராமல் மார்க்க அதிகாரத்தில் முடிவு எடுக்கக் கூடாது என்று கூறியிருக்கிறான். 

இதற்கு சான்றாக நிறைய சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றில் உள்ளது. 

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...