sample advertisment |
வியாபரத்திற்கு முக்கியமான மூலதனம் விளம்பரம். அந்த விளம்பரங்கள் மக்களிடம் எப்படி பிரபலமாகிரது என்று கணித்தாலே வியாபாரத்தின் வெற்றியை நாம் கணிக்கலாம். அந்த அளவிற்கு இன்று விளம்பரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விளம்பரங்கள் மக்களிடம் எப்படி சென்றடையும் என்று எல்லா வியாபாரிகளுக்கும் தெரிய வாய்ப்பில்லை. அந்த சமயத்தில் தான் விளம்பர கன்சல்டண்ட்ன்னு சொல்லி ஒரு amount ஐ ஆட்டைய போட்டுருவாங்க. அப்புறம் அத விளம்பர பட எடுக்குற கம்பெணிட்ட சொல்லி விளம்பரத்த படம் புடிச்சு டிவியில ஒளிபரப்புவாங்க/வானொலியில் ஒலிபரப்புவாங்க.
இப்ப நான் சொல்ல வந்த மேட்டரு என்னன்னா, இப்படி எடுக்கிற விளம்பரம் மக்கள்ட்ட சென்றடையனும்கிறதுதான் முக்கியம், அதுல பெருசா சமூக அக்கறை உள்ள விஷயமா நம்ம மக்கள்ட்ட கொண்டு போய் சேர்க்கனும்கிறதுல்லாம் முக்கியமில்லை. சரி அதெப்படி அவன் காசு போட்டு எடுக்கிற விளம்பரத்துல சமூக கருத்தை சொல்லனும்னு நீங்கள் எதிர்ப்பார்க்கிறீங்கன்னு கேட்கலாம். அட சமூக கருத்தை சொல்ல வேண்டாம்பா, சமூகமே கூச்சப்படும் அளவுக்காவது விளம்பரங்கள் இல்லாமல் இருந்தா அதுவே சமூக சேவை மாதிரிதான்.
உதாரணத்திற்கு சாதரணமாக ஆண்கள் வெளியில், குளத்தில், அருவியில் குளிப்பதும், பெண்கள், குளியறையில், மறைவான இடத்தில் குளிப்பதும் அதை வெளிக்காட்டுவதும் வழக்கம். ஆனால் ஒரு சோப்பு விளம்பரத்தில் ஆண்கள் குளியறையில் குளிப்பது போலவும், அதன் தொடர்ச்சியாக பெண் தன் அங்கங்களை காட்டிய படி கவர்ச்சியாக அருவியில் குளிப்பது போலவும் காட்டுகிறார்கள். கேட்டால் இது தான் லேட்டஸ்ட் tactice என்று கூறுகிறார்கள்.
have a happy _______ என்று முடிகிறது ஒரு விளம்பரம். நான் தெரியாமல் கேட்கிறேன், இந்த விளம்பரத்தால் அவர்கள் சமூகத்திற்கு சொல்ல வரும் கருத்தென்ன? ஆனுறை விளம்பரம், மறைவான உள்ளாடை பற்றிய விளம்பரங்கள் மிகவும் கவர்ச்சியாக அதுவும் ஆண்கள் உள்ளாடைகளுக்கு பெண்களும் சேர்ந்து வருகிறார்கள், இந்த சமூக அவலங்களை களைய அரசுக்கு தெரியவில்லையா? அல்லது இது இக்காலத்திற்கு தேவைதான் என்று எல்லோரும் சொல்லும் latest trend என்று அரசு சொல்கிறதா? தெரியவில்லை.
இதெல்லாம் பரவாயில்லங்க, ஒரு மிட்டாய் விளம்பரத்தில் ஒருவன் காதலியை இன்னொருவன் மயக்க வைத்து தள்ளிக் கொண்டு போகிறான், அப்போது அந்த மிட்டாயிக்கு அந்த மயக்கும் தன்மை இருக்கிறது என்று நினைக்கும்படி இருக்கிறது. ஒரு சட்டை போட்டால் தன்னுடைய நண்பரின் மனைவியும் தன்னுடைய கணவரை ரசிப்பதை விரும்புகிறாள் மனைவி. எந்த மதத்தில்/ சமூகத்தில்/ நாட்டில் இப்படி நடக்கும் என்று தெரியவில்லை. வயிற்று வலிக்கும், சோப்புக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. வயிற்று வலிக்கிறது, மருத்துவரிடம் சென்றால் சோப்பை மாற்றுங்கள் என்று சொல்கிறார் (போலி டாக்டர் போல). இந்தியர்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் எதை வேண்டுமானாலும் காட்டலாம். யாருக்கும் எதுவும் புரியாது என்று நினைத்துக் கொண்டார்களோ என்னவோ.
செய்திகள், குறும்படங்கள், குழந்தைகளுக்கென்று போடப்படும் சிறப்பு படங்கள், விஷேஷ நாட்களில் போடப்படும் திரைப்படங்கள் என அனைத்திலும் கவர்ச்சியான, அருவருக்கத்தக்க விளம்பரங்கள் இடையிடையே வந்து கொண்டே இருக்கின்றன. ஆண்களுக்கான விளம்பரங்களில் ஆண்களை மட்டும் பயன்படுத்தினாலே பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். பெண்களை மையமாக கொண்டு எடுக்கும் விளம்பரங்கள் கவர்ச்சியில்லாத, நல்ல பல கருத்துக்களை சொல்லக் கூடியதாக இருந்தாலும் மக்களிடம் சென்றடையத்தான் செய்கிறது, _________ சோப்பில்லன்னா குளிக்காதே , இந்த ஒரு வார்த்தை மக்களிடம் பிரபலமாகி எல்லோரிடத்திலும் சென்றடைகிறது, வாஷிங் பௌடர் நிர்மா விளம்பரம் இன்று வரை எல்லோருக்கும் நினைவில் இருக்கிறது, I am a complan boy, I am a complan girl என்று சொல்லக்கூடிய விளம்பரம், சொட்டு நீலம் (உஜாலா) இன்றும் மக்களிடையே பேச்சு வழக்கிலேயே காணப்படுகிறது.
கோடாரி ஆண்களின் deodorant விளம்பரம் என்று சொன்னாலும், ஒரு ஆண் மற்றும் பல பெண்கள் என்று பெண்களையே மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டு, பெண்களுக்கு மட்டுமே பிடிக்கக்கூடிய வாசனை திரவியம் பெண்களுக்குரியது தானே என்று கேலி செய்யும் அளவிற்கு விளம்பரம் அமைகிறது. பிளைவுட்டுக்கு விளம்பரம் செய்யச் சொன்னால் யானைக்கு நம்பிக்கை, பிளைவுட்டுக்கு தும்பிக்கை, சாரி யானைக்கு தும்பிக்கை, பிளைவுட்டுக்கு நம்பிக்கைன்னு பிளைவுட்டையே காண்பிக்காம விளம்பரம் பண்றாங்க, எந்த புன்னியவான் ஐடியா கொடுத்தானோ??
பை (fast track) விளம்பரத்தில் தன் காதலியை (அ) மனைவியை அருகில் வைத்துக் கொண்டே இன்னொருத்திக்கு ரூட் விடும் சமூக(?) கருத்துள்ள விளம்பரத்தை பார்க்கலாம்.
Nature Power soap – tamanna
Jeeva soap simran
Saravana textiles – sneha
Jeyachandran textiles – anushka
Kazhana jewelry – kushboo
Pothys – trisha
இப்படி நடிகர்/நடிகைகளை அதிகம் விளம்பரங்களிலேயே காண முடிகிறது. முன்னர் ஏதாவது ஒரு நடிகர்/நடிகை விளம்பரத்தில் வந்தால் ஆச்சரியமாக இருக்கும், இன்று மலிந்து கிடக்கும் நவ நாகரிக உலகில் நடிகர்கள் அல்ல, எந்த கொம்பன் வந்து விளம்பரம் செய்தாலும் விஷயம் இருந்தால் மட்டுமே வியாபாரத்தில் ஜெயிக்க முடியும் என்பது மறுக்க முடியாத விதி.
ஆகவே வியாபரத்தில் நேர்மை என்பது கொடுக்கல், வாங்கலில் மட்டும் இருந்தால் போதாது, நாம் செய்யும் விளம்பரத்திலும் இருக்க வேண்டும். தரமான பொருட்களை, சரியான விலைக்கு விற்பதும், மக்களிடம் பொய் சொல்லாமல் வியாபாரம் செய்வதும் இறை வணக்கமே. நீங்கள் இந்த சோப்பை போட்டால், 10 நாட்களில் கருப்பிலிருந்து வெள்ளையாக மாறி விடுவீர்கள், அல்லது 30 நாட்களில் இந்த கிரீமை போட்டால் உங்களுக்கு கலர் வந்து விடும் என்று சொல்லும் விளம்பரங்கள் இன்று மலிந்து காணக்கிடக்கின்றன.
சில விளம்பரங்கள் போட்டிக்காகவே எடுக்கப்படுகின்றன. இதுவெல்லாம் ஆரோக்கியமான வியாபாரத்திற்கு உதவாது என்றும் இந்த விளம்பரத்தில் போட்டி போடுகின்ற இரண்டு நிறுவணங்களின் மீதும் மக்களின் அபிமானம் குறைந்து போய்விடும் என்றும் பணத்தை போட்டு விளம்பரத்தை எடுக்கும் முதலாளிகளுக்கு உரைக்க வேண்டும்.
சில நல்ல விளம்பரங்கள் உங்கள் பார்வைக்கு:
http://billboardom.blogspot.com/2006/06/transparent-billboard-by-nike.html
http://www.toxel.com/inspiration/2008/06/17/24-clever-advertisements/
http://www.toxel.com/inspiration/2008/06/28/24-unforgettable-advertisements/
தோழமையுடன்
அபு நிஹான்
No comments:
Post a Comment
உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்