Monday, 20 December 2010

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? - பாகம் - 1

தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிப்பதாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.
இந்த பகுதியில் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள், தேர்வில் சாதிக்க தேவையா அடிப்படை விஷயங்களை காண்போம்....

குறைவான மதிப்பெண் எடுப்பதினால் ஏற்படும் விளைவுகள்:

நல்ல கல்லூரியில் இடம் : மதிப்பெண் குறைவாக எடுப்பதினால் நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை, அல்லது நல்ல கல்லூரிகளில் இடம் வேண்டும் என்றால் லட்ச கணக்கில் பணம் கேட்கின்றனர். பொதுதேர்வில் அதிக மதிப்பெண் இல்லாவிட்டால் அண்ணா பல்கலை கழகம் மற்றும் சிறந்த கலை, அறிவியல் கல்லூரிகளிலும், நுழைவு தேர்வில் அதிக மதிப்பெண் இல்லாவிட்டால் IISc, IIT, NIT என்று உயர் கல்வி நிறுவனக்களில் படிக்கும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படுகின்றது.

நல்ல தரமான கல்வி: மதிப்பெண் குறைவாக எடுப்பதினால் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காததால், கல்வி தரம் குறைவாக உள்ள கல்லூரிகளில் சேர வேண்டிய கட்டயம் ஏற்படுகின்றது, இதானால் நமக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை, பாடங்களில் தேர்ச்சி பெற இயலாமல் ஃபெயிலாகக்கூடிய (அரியர் வைக்க வேண்டிய) நிலைக்கு ஆளாகின்றோம். படித்து தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாகின்றது. நாம் எந்த துறை பற்றி படிக்கின்றோமோ அதை பற்றிய ஆழ்ந்த அறிவு (Subject knowledge) இல்லாமல் போகின்றது.

வேலை வாய்ப்பு: மதிப்பெண் குறைவாக எடுத்து தரம் குறைவான கல்லூரியில் சேர்வதினால் தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாகின்றது. இதனால் நம்முடைய பிற திறன்களை (Extra curricular activities) வளர்த்து கொள்ள முடியாமல் போகின்றது. குறிப்பாக நல்ல வேலையில் சேறுவதற்கு ஆங்கில பேச்சாற்றல் (English speaking skill) மற்றவர்களோடு கலந்துரையாடும் திறன் (communication skill) மிக மிக அவசியமாகும். படிக்கும் காலத்தில் நமது துறை சார்ந்த அறிவோடு (Subject knowledge) இது போன்ற திறன்களை (English speaking skill and communication skill) வளர்த்து கொள்வது மூலம் எளிதில் வேலை பெறலாம். 

மேலும் படிக்கும் காலத்தில் பிற கல்லூரிகளில் நடக்கும், (நாம் படிக்கும் துறை சார்ந்த) போட்டிகளில் (Technical competitions : Paper presentation and technical debate etc..) கலந்து கொள்வதன் மூலமும், வெற்றி பெறுவதன் மூலமும் நமக்கு சான்றிதழ்கள் கிடைக்கின்றன. இந்த சான்றிதழ்கள் படித்ததிற்க்கு தகுந்த வேலை கிடைப்பதற்க்கு பெறிதும் உதவியாக இருக்கின்றன, நல்ல கல்லூரிகளில் படிப்பதன் மூலமே இது போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்க்கு வாய்ப்புகளும் தொழில் நுட்ப உதவிகளும் (Technical assistance) கிடைக்கும்.

கல்வி உதவி: குறைவான மதிப்பெண் எடுப்பதினால் கல்வி உதவி கிடைப்பது கடினமாகின்றது, ஏனெனில் கல்வி உதவி செய்யும் செல்வந்தர்கள் முதலில் பார்ப்பது மதிப்பெண்னைத்தான், பிறகுதான் குடும்ப வறுமையை பார்கின்றார்கள். மதிப்பெண் குறைவாக இருந்தால் வறுமையான குடும்பமாக இருந்தாலும் கல்வி உதவி செய்ய தயங்குகின்றனர்.

அதிக மதிப்பெண் எடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள்:

அதிக மதிப்பெண் எடுப்பதினால் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். நல்ல கல்லூரிகளில் படிபதன் மூலம் நமக்கு நல்ல கல்வி கிடைக்கின்றது, கல்வி உதவியும் எளிதில் கிடைக்கும் நல்ல தரமான கல்வியினால் நமக்கு எளிதில் வேளையும் கிடைத்துவிடும். நம்முடைய எதிர்கால வாழ்வும் நலமாக இருக்கும். (இன்ஷா அல்லாஹ்). எனவே நாம் அதிக மதிப்பெண் எடுக்க முயற்சி செய்யவேண்டும்.

அதிக மதிப்பெண் எடுக்க என்ன செய்ய வேண்டும்:

நம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள் இருக்கும், நம்முடிய ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால் நமக்கு நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.

நம்பிக்கை:

முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும் (Increase your confident level). இதற்க்கு தடையாக இருப்பது உங்களை பற்றிய உங்களுடைய எண்ணம். இந்த காரியம் நம்மால் இயலாததாக இருக்கலாம் ஆனால் நம்மை படைத்த இறைவனால் இயலாத காரியம் ஏதும் இல்லை.

இலக்கை அடைய அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கைவைக்க வேண்டும், அல்லாஹ் நமக்கு நிச்சயம் உதவி செய்வான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

உறுதியான நம்பிக்கை இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் நிச்சயம் அல்லாஹ்வின் உதவியோடு அதை உங்களால் அடைய முடியும், நமக்கு பண வசதி இல்லாமல் இருக்கலாம், நம் பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருக்கலாம் இப்படி என்ன தடை இருந்தாலும் அதை எல்லாம் தகர்த்தெரிந்து நமக்கு உதவி செய்ய அல்லாஹ் இருகின்றான்,

"(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்". (அல் குர் ஆன் : 33:3 ).

நமக்கு உதாவாமல் போவதற்க்கு அல்லாஹ் இயலாதவனோ, இரக்கம் இல்லாதவனோ இல்லை. உங்களுக்கு உதவ அல்லாஹ்விடம் செல்வமும் உண்டு, அறிவும் உண்டு, கொடுக்கக்கூடிய கருனையும் உண்டு. அல்லாஹ்விடம் கேளுங்கள் அல்லாஹ் நிச்சயம் உங்கள் கனவை நினைவக்குவான் .

".....நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது". (அல் குர் ஆன் : 30: 47 ).

நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்பதற்க்கு ஒரு வழியும் இல்லையே என கவலை பட வேண்டம், நமக்கு அல்லாஹ் இருக்கின்றான்.

"அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார்". (அல் குர் ஆன் : 26 : 62).

ஆர்வம்:

எந்த ஒன்றில் வெற்றி பெருவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்கம் வேண்டும். படிக்கும் போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும் போது “கடினமான பாடம்” என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது,” கடினமான பாடம்” என்று எதுவும் இல்லை, நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் Centum(100%) எடுக்கின்றனர். விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.

மறதி: மாணவர்களுக்கு பொதுவாக உள்ள குறை மறதி, நன்றாக படித்தேன் ஆனால் தேர்வறைக்கு சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது, என பல மாணவர்கள் கூறுவார்கள். இது மறதி என்று கூற முடியாது, நம்முடைய ஆர்வமின்மையை இது காட்டுகின்றது. சினிமா படல் மறப்பதில்லை, ஆனால் படிக்கும் பாடம் மறக்கின்றது, சினிமா பாடல் கேட்க்கும் போது கவனத்துடன் கேட்கின்றனர், கவனமாக பாடல் கேட்க்கும் போதே பாடல் வரிகளை மனனம் செய்கின்றனர். ஆனால் பாடம் படிக்கும் போது பல மாணவர்கள் பாட்டு கேட்டுக்கொண்டு படிப்பது, ,டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது,இப்படி கவனமில்லாமல் படிக்கின்றனர். இதானால் நமது கவனம் சிதறடிக்கப்பட்டு நாம் படிப்பது முழுமையா நமது மனதில் பதிவதில்லை, அல்லது தேர்வு வரைக்கும் நினைவில் நிற்ப்பதில்லை.

மறதியை போக்க: கவனமாக படியுங்கள், படிக்கும் போது யாரிடமும் பேசாதீர்கள், பாட்டு கேட்க்காதீர்கள், டிவி பார்க்காதீர்கள் இரவு படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள், அதிகாலையில் படியுங்கள். படித்தை எழுதி பாருங்கள்.

நாம் நமக்காக படிக்கின்றோம் : நாம் ஏன் படிக்கின்றோம் என்பதை முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும். ஆசிரியர் சொல்வதற்க்காகவோ அல்லது பெற்றோர்கள் சொல்வதற்க்காகவோ படித்தல் நிச்சயம் மறக்கத்தான் செய்யும், நீங்கள் படிப்பது உங்களுக்காக படிக்கின்றீர்கள், நீங்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் வீணாபோகும், இதில் ஆசிரியருக்கோ, பெற்றோருக்கோ எந்த நஷ்டமும் இல்லை. எனவே நான் படிப்பது என்னுடைய நலனுக்காதான் என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர்ந்து, நல்ல வேலையில் சேர்ந்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் சிறப்பாக அமையும். (இன்ஷா அல்லாஹ்)

சினிமா பாட்டு கேட்கும் போது உள்ள கவனம் படிப்பதில் குறைவாக உள்ளது, கிரிக்கெட் விளையாட்டில் உள்ள கவனம் படிப்பில் இல்லாமல் போகின்றது, நம்முடைய நேரத்தை நம்மை வளர்த்துகொள்ள பயன் படுத்த வேண்டும். சினிமா பார்ப்பதினாலும், கிரிக்கெட் பார்ப்பதினாலும், நடிகர்களும், கிரிக்கெட் விளையாடுபவர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர், நீங்கள் செலவிடும் உங்கள் பொன்னான நேரத்தின் மூலம் அவர்கள் சம்பாதிக்கின்றனர், மாணவர்கள் படிப்பை கோட்டைவிட்டு வேலை தேடுவதே வேலையாக அலைகின்றனர். இதை மாற்ற உங்கள் நேரத்தை உங்களுக்காக செலவளியுங்கள் (படியுங்கள்)

கடின உழைப்பு:

அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துவிட்டோம், இனிமேல் படிக்க வேண்டாம் எல்லம் தானாக நடந்துவிடும் என்று படிக்காமல் இருக்கக் கூடாது. அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்துவிட்டு கவனத்துடனும் படிக்க வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்

"நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்." (அல் குர் ஆன் : 29: 69).

1. அதிக நேரம் : அதிக நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும், படிக்கும் காலத்தில் வீண் விளையாட்டு, நண்பர்களுடன் வீண் பேச்சு என்றும், ஊர் சுற்றுவது என்றும் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும், நமது படிப்பில் இலக்கை நிர்னையித்து அதை அடைய தொடர்ந்து முயச்சிக்க வேண்டும், பள்ளி கூடம் சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர்கள் சரியில்லை எனவே நான் நன்றாக படிக்க முடியவில்லை என்று அடுத்தவர்களை குறை சொல்லி நம் வாழ்க்கையை வீணாக்க கூடாது, நாம் எந்த பள்ளியில் படித்தாலும் கவனமாக உழைத்து படித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இன்ஷா அல்லாஹ்.

2. எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட எப்படி படிக்கின்றோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தை படிக்கும் போது அந்த பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும் எப்படி கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்திற்க்கு செல்ல வேண்டும்.

3. குறிபிட்ட பாடத்திற்க்கு அதிக கவனம் செலுத்தி படிப்பது : பொறியியல் சேர்வதாக இருந்தால் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடத்தில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே முக்கியமானதாகும், இதே போல் மருத்துவம் படிக்க இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) முக்கியமானதாகும். எனவே குறிபிட்ட பாடத்தில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.

4. படிப்பதை தள்ளிபோடாதீர்கள் : படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளி போடாதீர்கள், இப்படி தள்ளி போட்டுக்கொண்டே போனால் தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும், நம் வாழ்க்கையும் வீணாகிவிடும், எப்போது சுறுசுறுப்பாக (Active -ஆக) இருங்கள்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில் எழுதும் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்,பெற்றோர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் இன்னும் பல பயனுள்ள தகவல்களை பார்க்கலாம்…..

மேலும் தேர்வுகள் சம்ந்தமான கேள்விகளுக்கும், ஆலோசனைகளுக்கும் sithiqu.mtech@gmail.com என்ற மெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும். 

நன்றி : S.சித்தீக்.M.Tech

No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...