Thursday, 6 May 2010

2010 ஹஜ்


ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்.
                                                -அல்குர்ஆன் 2:196 

ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.

ஹஜ் செய்பவர், உம்ராச் செய்பவர், போரில் ஈடுபட்டவர் ஆகிய மூவர் அல்லாஹ்வின் விருந்தினராவர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : இப்னுஹிப்பான், இப்னுமாஜா

இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் ஹஜ் செய்வதன் சிறப்பையும் அதனால் கிடைக்கும் பயன்களையும் அறிவிக்கின்றன.

இந்த வருடமும் சென்ற வருடம் போல் ஹஜ்ஜுக்கு செல்ல விருப்பமுடையோர் தயாராகி வருகிறார்கள். அவர்களுக்கு ஹஜ் கடமை பூர்த்தியாகி அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக பிராத்திக்கிறேன்.

ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ்ஜுக்கு செல்வோர் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை கீழே குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு  ரூ 200 வீதம் (ஒரு நபருக்கு), ஐந்து நபர்கள் சேர்ந்து ஒரு குழுவாக ரூ1000 டி.டி. எடுத்து அனுப்பவும்.  குலுக்களில் தேர்ந்தெடுப்பவர்கள் மட்டுமே ஹஜ் கமிட்டியில் ஹஜ் செல்ல  அனுமதிக்கப்படுவார்கள்.

Tamil Nadu State Hajj Committee
Rosy Tower, Third Floor, New No.13,
Mahathma Gandhi Road (Nungambakkam High Road)
Chennai-34

ஹஜ் கமிட்டி விண்ணப்பம் மற்றும் வங்கி Pay-in Slip ஆகியவை www.hajtn.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவும்.

2010 ஆம் ஆண்டு ஹஜ்ஜுக்கு செல்வோருக்கு ஒரு கூடுதல்  செய்தி:

ஹஜ் கமிட்டியில் விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி 30.04.2010 என்று முன்பு  அறிவிக்கப்பட்டது. பிறகு அந்த தேதி  நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கீழே கொடுத்துள்ள சுட்டியில் உள்ள செய்தியின்படி விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி 15.05.2010.


மறக்க வேண்டாம், வங்கி டி.டி இல்லாமல் அனுப்பும் விண்ணப்பங்களை ஹஜ் கமிட்டி நிர்வாகம் நிராகரித்து விடும்.

பாஸ்போர்ட்:

ஹஜ்ஜுக்கு செல்வோர் ஹஜ் கமிட்டியில் கொடுத்த பாஸ்போர்ட் (பாஸ்புக்மூலம் ஹஜ்ஜுக்கு போக முடியாது. சென்ற வருடத்தில் இருந்து இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எல்லோரும் International பாஸ்போர்ட் கண்டிப்பாக எடுத்தே ஆக வேண்டும். ஆனால் ஹஜ்ஜுக்கு மட்டும் செல்ல் விருப்பமுடையோர் ஒரு வருடத்தில் காலவதியாகும் International பாஸ்போர்ட் எடுத்து கொள்ளலாம். இதை வைத்தும் நாம் வேறு நாடுகளுக்கும் செல்லலாம், ஒரு வருடத்திற்குள் மட்டும். இந்த ஹஜ் விஷேஷ பாஸ்போர்ட் எடுக்க பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனியாக கவுண்டர்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கிறதுஎல்லோரும் நிற்கும் கவுண்டரில் நிற்க வேண்டிய அவசியமில்லை. பாஸ்போர்ட்டும் விரைவில் கிடைத்து விடும்

இந்த வருடம்  ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகள் அனைவரும் பூரண உடல் சக்தியோடு இறைவனும், அவனுடைய தூதரும் சொன்ன வழியில் ஹஜ் செய்து இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய இருகரம் ஏந்தி பிராத்திக்கிறேன். 

அன்புடன் 
அபு நிஹான்


No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...