சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த சில நாட்களாகவே நமது தஞ்சை மாவட்டத்தில், அதிலும் நம் பாபநாசம் வட்டத்தில் அதிகம் விபத்து நடப்பது நாம் அறிந்ததே.
1. இரண்டு மாதங்களுக்கு முன்னர் சூஃபி நகரில் ஒரு வாலிபர் விபத்துக்குள்ளாகி, 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்து பின்னர் இறந்தது நம் ஊர் மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
2. அந்த கோர விபத்து நடந்து சில நாட்களிலே பண்டாரவாடையை சேர்ந்த வாலிபரும், நம் மாற்று மத சகோதரர்களும் விபத்துக்குள்ளானதில் இறந்தது மனதிற்கு மிகவும் வேதனையையும், கவலையையும் அளித்தது.
3. அது நடந்து சில நாட்களிலே நெடுந்தெரு அருகில் இரு பஸ்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட காரில் இருந்த அனைவரும் இறந்தது இன்னும் நம் பகுதி மக்களை சோகத்திலும், கவலையிலும், பயத்திலும் ஆழ்த்தியது.
விபத்துக்கான காரணங்களை நாம் ஆராயத் தேவையில்லை. அது நடந்து முடிந்த விஷயம். நம்மால் ஆராயவும் முடியாது. பொதுவாக ஆராய்ந்ததில் இறந்த இரு வாலிபர்களும் இரு சக்கர வாகனத்தில் இரவில் அடிபட்டு இறந்தனர் என்பதை மட்டும் நம்மால் ஊகிக்க முடிகிறது.
விபத்துகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்:
தற்போது நம் ஊர் உள்ள சூழ்நிலையில் நம்மால் இரு சக்கர வாகனங்கள் ஓட்டாமல் இருக்க முடியாது. ஆனால் நம்மால் கவனமாக, மெதுவாக, நிதானமாக போக முடியும். இப்போது சில இளைஞர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை பார்த்தாலே பயமாக இருக்கிறது. வேகமாக ஓட்டுவதால் நாம் எதையும் சாதித்துவிட முடியாது. என்ன தான் அவசரமாக இருந்தாலும் வேகமாக வண்டியை ஓட்டுவதால் இழப்பு என்று ஏற்பட்டால் (நமக்கோ அல்லது பிறருக்கோ) அதை நம்மால் ஈடு கட்ட முடியாமல் போய்விடலாம்.
1. முடிந்தவரை இரவில் இருசக்கர வாகனத்தில் தொலைதூர பயனம் செல்வதை நாம் தவிர்ந்துக் கொள்வோம்
2. இரவில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தால் மனைவி மற்றும் குழந்தையோடு செல்வதை முற்றிலும் தவிர்ப்போம்.
3. இரவில் இருசக்கர வாகனத்தில் தொலைதூர பயணம் செய்தால் (தவிர்க்க முடியாமல்) தனியாக பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்வோம்.
4. வீட்டிற்கு தெரியாமல் ஊர் சுத்துவது இப்போது ஃபேஷனாகிவிட்டது. எங்கு சென்றாலும் வீட்டில் சொல்லிவிட்டு செல்வோம்.
5. ஹெல்மெட் அணியும் பழக்கத்தை நம் வாழ்க்கையில் கொண்டு வருவோம். (வெளியூர் பயணத்திலாவது)
6. பெண்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றால் அவர்களுடைய புர்கா, ஷால் சக்கரத்தில் சிக்காது பார்த்துக் கொள்வோம்.
7. ஆட்டோவில் அதிகம் பேர் பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்வோம்.
8. நம்மிடத்தில் தான் எல்லா கண்ட்ரோலும் இருக்கிறது என்று நினக்காமல் இறைவன் நம்மை கன்ரோல் செய்கிறான் என்ற எண்ணத்தை நம் மனதில் வைத்து மெதுவாக, நிதானமாக வண்டிகளை ஓட்டிச் செல்வோம்.
9. நம்முடைய தஞ்சை – குடந்தை சாலை மிகவும் குறுகிய சாலை(சில இடங்களில்) ஆகவே அவ்விடங்களில் வாகனங்களை முந்துவதை தவிர்த்துக் கொள்வோம்.
10. வண்டிகளுக்கு இன்ஷுரன்ஸ், ஓட்டுனருக்கு லைசன்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். விபத்து நடந்தால் இது இல்லாமல் இருந்தால் கோர்ட், வழக்கு என்று இன்னமும் சிக்கலாகி விடும். (இன்ஷுரன்ஸ் இல்லாததற்க்கு, வழக்கு, லைசன்ஸ் இல்லாதற்கு வழக்கு போன்ற வழக்குகள்)
11. எவ்வளவு முக்கிய செல் அழைப்புகளாக இருந்தாலும், வண்டி ஓட்டும் போது (காரோ அல்லது இரு சக்கர வாகனமோ) அழைப்பை ஏற்காதீர். (கால்களை அட்டெண்ட் செய்யாதீர்)
12. முடிந்தவரை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் நலம் கருதி இரு சக்கர வாகனங்கள் (பைக்) வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்போம்.
இரு சக்கர வாகனங்கள் (பைக்) நம்முடைய சவுகரியத்திற்க்காக நம் பெற்றோர் வாங்கி கொடுத்திருக்கிறார்கள், வேகமாக செல்வதற்க்கு அல்ல, சோகத்திலே பெரிய சோகம் புத்திர சோகம் (பிள்ளையை இழந்து தவிக்கும் பெற்றோரின் சோகம்) என்றல்லாம் நான் படிக்கும் போது என்னுடைய கல்லூரி ஆசிரியர் வேகமாக செல்லக்கூடாது என்பதற்காக சொல்லி காட்டுவார். ஆனால் இன்றோ ஆசிரியர் சைக்கிளில் வந்தால் மாணவன் பல்சரில் வருகிறான். தவறில்லை. அதற்குரிய வசதி இருந்தால் அனுபவித்துக் கொள்ளலாம். சில இடங்களில் நான் பத்தாவது பாஸ் செய்தவுடன் எனக்கு பைக் வாங்கித்தர வேண்டும் என்ற வேண்டுகோளுக்கினங்க மாணவர்கள் படிக்கிறார்கள். தாங்கள் படிப்பது பெற்றோர்களுக்காக தான் என்ற நினைப்பு பல மாணவர்களுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. தங்களுடைய தகப்பனார் வெளிநாடுகளில் (குறிப்பாக வளைகுடா நாடுகளில்) எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தும் கூட குழந்தைகள் பெற்றோர்களை அகல கால் வைக்க முனைப்பு காட்டும் போது லோனில் பைக் எடுத்து, அவர்கள் படும் அல்லல் பல மாணவர்களுக்கு புரிவதில்லை. இத்தனையும் மீறி அவன் ஏதாவது விபத்தில் சிக்கி உயிரிழந்தாலோ, அல்லது உறுப்புகளை இழந்த்தாலோ அதனால் வரும் தொடர் இன்னல்கள் அனுபவித்தவர்களுக்கே தெரியும்.
என்னுடைய நண்பர் ஒருவர் விபத்தில் சிக்கியதால் அது அவருடைய வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. நடுரோட்டில் ரோட்டை கடந்து செல்ல காத்திருக்கும் போது ஒரு இரு சக்கர வாகண ஓட்டி என் நண்பரை இடித்ததில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து, பின்னர் அவர் பிழைக்க சொல்லென்னாத் துயரங்கள்.
பொருளாதார சிக்கல், படித்து மறந்த நிலையில் ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு, இப்போது சுகமாக இருக்கிறார். அவர் நலமடைய எடுத்துக் கொண்ட காலங்களில் அவர்களின் நண்பர்கள் செட்டிலாகி விட்டார்கள். இதெற்கெல்லாம் காரணம், வேகமாக வண்டி ஓட்டுகிறேன் என்று பந்தாவோடு வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவனே.
மீல முடியாத சோகத்தை தாய்க்கு, தந்தைக்கு, தமையனுக்கு, சகோதரிகளுக்கு, பிள்ளைகளுக்கு, நண்பர்களுக்கு கொடுக்க உங்களுக்கு விருப்பமாக இருந்தால் வேகமாக செல்லுங்கள்.
அன்புடன்
அபு நிஹான்
No comments:
Post a Comment
உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்