உள்ளூரில் விலைப் போவாததால்
வெளி நாட்டில் நான்!
வெள்ளை முடியும் பல் இழிக்க
கலர்ச் சாயம் தேடியது கண்கள்
கறுப்புச் சாயத்தை தவிர்த்து!
முதுமையென
முத்திரையிட்டால்
முடியாது இனி வளைகுடாவில் குப்பைக் கொட்ட!
நரைத்த ரோமங்கள்
விதைத்த நினைவுகளால்
விடுப்புக் கேட்டு விரைந்தேன்
விமான நிலையத்திற்கு!
சிறகுகளோடு பறந்த விமானத்தில்
சிறகுகளே இல்லாமல் நானும் பறந்தேன்!
தொட்டுப் பார்க்க என் மழலை;
முத்தமிட என் மனைவி;
கட்டியணைக்க என் தாய் - எனக்
கட்டாத கோட்டையுடன்
கனவுகளில் நான்!!
முடிந்துவிட்டது எல்லாம் ;
எரிகிற வைக்கோலாய்
முடிந்து விட்டது எல்லாம் உள்ளுக்குள்ளே!
பாசங்களுக்கு பதில் சொல்லாமலே
பயணித்துவிட்டேன் என் இறுதி இலக்கிற்கு!!
இருக்கின்ற காலத்தை
இழந்துவிட்டேன் கடல் கடந்து;
எல்லாம் முடிந்து உணர்ந்து பயனென்ன
காலம் கடந்து!!!
எழுதியது யாரோ (மின்னஞ்சலில் பெற்றது)
இறைவனின் வேதமும் தூதர் மொழியும் மட்டுமே ஈருலக வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்
Subscribe to:
Post Comments (Atom)
குழந்தைகள் ATM மெஷின்களா?
அஸ்ஸலாமு அலைக்கும் நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...
-
நாமெல்லாம் ஒரு சாதரண பிரச்சணை என்றாலே மனம் உடைந்து என்ன செய்வது என்று கவலைப்பட்டு கொண்டிருப்போம். ஆனால் சிலர் என்ன பிரச்சனை நடந்தாலும் வாழ்...
-
டெரர்கும்மியில் அடித்த நகைச்சுவை பதிவிற்கு சகோதரர் இரமணிதரன் அளித்த பதில் பதிவர்களை பலரை மிகவும் வருத்தமடையச் செய்தது. இதோடு நில்லாமல் இ...
-
எனக்கும் சென்னைக்கும் இடையேயான உறவு சிறு வயது தொடங்கி அதிகமாக ஏற்போட்டோடு முடிந்து விடும். ஆம், என்னுடைய உறவினர்களை அழைக்க விமான நிலையத்து...
No comments:
Post a Comment
உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்