விழாவிற்கு பள்ளிச் செயலாளர் ஏ. சாகுல் ஹமீது தலைமை வகித்தார். ஆர்.டி.பி. கல்விக் குழுமத் தலைவர் எம்.ஏ. தாவுத் பாட்சா, மருத்துவர் பரீதா பஷீர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனர். மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கு தேர்வு பெற்றுள்ள, பள்ளியின் முன்னாள் மாணவிகள் எம். சமீமா, எம். சைமா, பி. மோசினா உள்ளிட்டோருக்கு பள்ளித் தலைவர் என்.ஏ. அப்துல் மஜீது நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக பள்ளி ஒருங்கிணைப்பாளர் எம். முகமது உமர் வரவேற்றார். நிறைவாக அரபி ஆசிரியை ஷகீலா பானு நன்றி கூறினார்.
விழாவில் பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முகமது பாரூக், ஆர்.ஏ. நூர் முகமது, நிர்வாக அதிகாரிகள் எம்.கே. அப்துல் ஹமீது, பி.ஏ. முகமது பாரூக், பள்ளி முதல்வர் எஸ். கஸ்தூரி, துணை முதல்வர் பூங்கோதை, வணிகவியல் ஆசிரியர் ஆர்.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி : ராஜகிரி ஆன்லைன் இணையதளம்
No comments:
Post a Comment
உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்