இரத்தம் கொடுப்பவர்களை இரத்த கொடையாளர்கள் அல்லது குருதி கொடையாளர்கள் (Blood Donars) அன்று அழைப்பர். இரத்தம் கொடுக்க நினைப்பவர்கள் எல்லாம் கொடுக்க இயலாது. அதற்கு பல்வேறு விதமான சோதனைகள் செய்ய வேண்டும். இரத்தக் கொடையாளருக்கு முதற்கட்ட சோதனையாக இரத்த வகை கண்டறியப்பட்டு பின்னர் இரத்த அழுத்தம் சோதனை செய்யப்படும். இரத்த அழுத்த சோதனையிலோ அல்லது இரத்த அனுக்களின் சோதனையிலோ குறைந்த அல்லது அதிகமான அளவில் இருந்தால் இரத்தம் கொடுக்க முடியாது. உதாரணத்திற்கு ஹிமோக்ளோபின் (Hemoglobin) குறைவாக இருந்தாலோ அல்லது இரத்த அழுத்தம் குறைவாக (அ) அதிகமாக இருந்தாலோ தொற்று வியாதிகள், குணமளிக்காத வியாதிகள் இருந்தாலோ குருதி கொடையளிக்க முடியாது.
இரத்த வகை:
A
B
AB
O
Duffy
Lutheran
Bombay
MN system
குருதி கொடையாளரின் பாதுகாப்பு முறைகள்:
குருதி கொடுக்க நாடுவோர் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே குருதி கொடுக்க அனுமதிக்கப்படுவர். ஓறினைச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் HIV கிருமி பரவும் அபாயம் இருப்பதால் குருதி கொடுக்க முடியாது.
கல்லீரல் அழற்சி, (Hepatatis B, Hepatatis C), எய்ட்ஸ், கிரந்தி நோய் (Syphilis) ஆகிய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் குருதி கொடுக்க முடியாது. Autologous donars என்று சொல்லக்கூடிய குருதி கொடையாளர்களுக்கு மேலே சொன்ன அனைத்து சோதனைகளும் விதிவிலக்கு. குருதி கொடையாளர்கள் dutasteride போன்ற மருந்துகள் உங்கொண்டு இருந்தால் குருதி கொடுக்கும் முன் தெரியப்படுத்தவும். ஏனெனில் dutasteride கலவை மருந்து குருதி பெறும் போது கர்ப்பினி பெண்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். குருதி கொடையாளர்கள் பயணம் மேற்கொண்ட நாடுகள் பற்றி விசாரிக்கப்பட்டு அந்த நாடுகளுக்கு சென்றதால் ஏற்படும் நோய்கள் பற்றியும் அறிந்து அதன்படி குருதி அளிப்பதா வேண்டாமா என்பதை மருத்துவர்கள் முடிவு எடுப்பர். இரத்தம் கொடுப்பவரின் இரத்தத்தையும், இரத்தம் பெறுபவரின் இரத்தத்தையும் Cross Matching என்னும் முறை கொண்டு சோதனை செய்து இரண்டு இரத்தமும் பொருந்துமா என்று ஆராய்ந்த பின்னர் தான் கொடுத்த இரத்தத்தை மற்றவருக்கு ஏற்ற முடியும்.
கொடையளிக்கப்பட்ட குருதி கீழ்கானும் சோதனைகளுக்கு உட்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் (WHO) அறிவித்துள்ளது.
Hepatitis B Surface Antigen
Antibody to Hepatitis C
Antibody to HIV, usually subtypes 1 and 2
Serologic test for Syphilis
இரத்தம் இருவகையில் கொடையாளரின் உடம்பிலிருந்து எடுக்கப்படும். முழு இரத்தத்தையும் எடுத்து தேவைப்படுபவரின் உடலில் செலுத்துதல் (Whole blood)
முழு இரத்தத்தையும் கொடையாளியின் உடலிலிருந்து எடுத்து centrifuge என்னும் இயந்திரத்தை பயன்படுத்தி இரத்தத்தை பிரித்து தேவைப்படும் இரத்த அனுக்களை தேவைப்படுபவரின் உடலில் செலுத்தி மிதமுள்ள இரத்தத்தை எடுத்து கொடயாளிக்கே மீண்டும் செலுத்தும் முறையாகும். இதை asphersis என்று கூறுவர்.
இப்போது விஞ்ஞானம் வளர்ந்து இரத்த தட்டுக்கள் (Blood Platelets) மட்டும் இரத்தத்திலிருந்து பிரித்தெடுத்து இரத்த தட்டுக்கள் (Blood Platelets) தேவைப்படுபவரின் உடலில் செலுத்தி விட்டு மீண்டும் இரத்தத்தை குருதி கொடையாளரின் உடலிலேயே செலுத்தி விடுவர். பொதுவாக, சாதாரண வகை இரத்த தானத்தில், உடலிலிருந்து இரத்தம் (Whole Blood) எடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். இரத்தத் தட்டுக்கள் தேவை ஏற்படும்போது, 6 யூனிட் (நபர்கள்) இரத்தத்தில் இருந்து தான் ஒரு யூனிட் இரத்தத்தட்டுக்கள் பிரித்தெடுக்க வேண்டி வரும். ஆனால், இரத்தத்தட்டுகள் தானத்தில், ஒரே நபரிடமிருந்து இரத்தம் எடுக்கப்பட்டு, அதே சமயத்திலேயே பிரித்தெடுக்கப்பட்டு விடுவதால், மீண்டும் இரத்தம் உடலிலேயே செலுத்தப்பட்டு விடும். இதனால், எந்த இரத்த இழப்பும் ஏற்படாது. மேலும், ஒரே மாதத்தில் மீண்டும் இரத்தத்தட்டுக்கள் கொடையளிக்க உடல் தயாராகி விடும்.
இந்த இரத்தத் தட்டுக்கள் மிகவும் இன்றியமையாததாகும். நம் உடலில் சிறு கீறல் ஏற்பட்டாலும், தொடர்ந்து இரத்தம் வெளியேறாமல் இரத்தத்தை உறையச் செய்து நம்மைக் காப்பது இந்த இரத்தத் தட்டுக்களே. மிகப்பெரிய அறுவைச் சிகிச்சைகளின் போது, நோயாளியின் இரத்த இழப்பை தடுப்பதற்கு இந்த இரத்தத் தட்டுக்கள் நோயாளிக்கு செலுத்தப்படும்.
இரத்தம் கொடுப்பவர்கள் இரத்தம் கொடுத்து ஒரு மணி நேரத்துக்குள் நேரடியாக சூரிய ஒளி பட நடக்க கூடாது. அன்றைக்கு மட்டும் எந்த கடுமையான வேலையும் செய்யக் கூடாது. இரத்தம் கொடுப்பதற்கு முன் சாப்பிடிருக்க வேண்டும். சிலருக்கு இரத்தத்தை கண்டவுடன் மயக்கம் வந்து விடும். அப்படிபட்டவர்கள் தவிர்த்துக் கொள்ளுதல் நல்லது.
இவை அனைத்தும் படித்து விட்டு மறப்பதற்கு அல்ல. நாமும் நம் குடும்பத்தில், உற்றார் உறவினர்களிடத்தில், இரத்த பந்தகளில், இன்னும் தெரிந்த தெரியாத மக்களிடத்தில் யாருக்கேனும் இரத்தம் தேவைப்பட்டால் தன்னார்வத்துடன் கொடுக்க முன்வர வேண்டும். அது உங்கள் சுயநலமாக கூட இருக்கலாம். ஆனெனில் நீங்கள் இரத்தம் கொடுத்தால் உங்களுக்கு புது இரத்தம் கிடைக்கும், ஆனால் பொதுநலத்துடன் கூடிய சுயநலத்துடனாவது நாம் செயல்பட வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம். இரத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகளையும், இரத்தம் கொடுப்பதால் எந்த தீங்கும் வராது என்பதையும் நாம் ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க வேண்டும்.
நன்றி : ததஜ இனையதளம் மற்றும் விக்கிபீடியா இணையதளம்.
தோழமையுடன்
அபு நிஹான்
Good one article. Congrats.
ReplyDelete