Saturday 30 November 2013

வியாபாரம் பாரமா - ஒரு உற்சாக தொடர் - பகுதி - 1

'தொழுகை முடிக்கப்பட்டதும் அல்லாஹ்வின் அருளை பூமியில் அலைந்து தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! அல்-குர்ஆன் : 62:10 

ஊரில் செட்டிலாக வேண்டும் என்று பலர் சொல்லி கொண்டு வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ் சொந்த ஊரில், சொந்த நாட்டில் போய் செட்டிலாக வேண்டுமென்ற எண்ணமே பெரிய விஷயம். இதை சமயம் பார்த்து தான் நம் வீட்டில் உள்ளவர்களிடத்தில் சொல்ல வேண்டும். இதனால் பலரிடத்தில் இருந்து கேட்காமலே பல இலவச அறிவுரைகள்(?) வரும். இன்னும் சிலர் அவனை பார்த்தியா, அவனும் உன்னை போல் தான் வெளிநாட்டில் இருந்து வந்து தொழில் செய்றான், எவ்வளவு கஷ்டப்படுறான்னு பார்த்தியா அப்படின்னு கேட்பார்கள். எல்லாருக்கும் ஒரே மாதிரியான எண்ணமும் திறமையும் இருக்காது, சில பேர் hard work பண்ணுவார்கள், சில பேர் smart work பண்ணுவார்கள். Smart work is better than Hard work. அதே போல் நம்மை யாருடனும் கம்பேர் செய்ய வேண்டாம் என்று உங்கள் குடும்பத்தில் கட் அண்டு ரைட்டாக சொல்லி விடுங்கள், இதில் நீங்கள் நளினத்தை / பணிவை மேற்கொண்டால் உங்கள் வீட்டிலேயே உங்களை மாற்றி விடுவார்கள். 

அப்படி வருபவர்களுக்கு சில டிப்ஸ்

சரியான திட்டமிடல்: 

நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போதே உங்களின் இந்தியா பொருளாதாரத்தை சரி செய்து கொள்ளுங்கள். நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போதே இந்தியாவில் என்ன வியாபாரம் செய்ய போகிறோம் என்பதை முடிவு செய்து அதற்கு தகுந்தாற் போல் உங்களுடைய திட்டங்களை செயல்படுத்துங்கள். ஆரம்பிக்கும் முன் பல முறை யோசியுங்கள், ஆரம்பித்தவுடன் இதை தொடர வேண்டுமா என்று யோசிக்காதீர்கள். 

நீங்கள் இந்தியாவிற்கு விடுப்பில் வரும் போதே வியாபாரத்தை ஆரம்பித்து உங்கள் நண்பரிடத்திலோ அல்லது உங்கள் உறவினர்களிடத்திலோ வியாபாரத்தை நடத்த சொல்லி இன்னும் ஓரிரு வருடத்தில் நான் இந்தியாவில் வந்து இதே வியாபாரத்தை தொடர போகிறேன். அப்போது என்னிடத்தில் இந்த வியாபாரத்தை ஒப்படைத்தால் போதும் அல்லது நாம் இருவரும் தொழில் பாட்னராக இருப்போம் என்று கூறுங்கள். 

இதில் இரண்டு வகையான நன்மைகள் இருக்கிறது, ஒன்று உங்கள் வியாபாரம் புதிதாக இல்லாமல் பழகியதாக ஆகிவிடும், மற்றொன்று உங்கள் வியாபாரம் சரியாக போக வில்லையென்றால் வேறு வியாபாரத்தை புதிதாக ஆரம்பிக்க கடினமாக இருக்காது.

ஆங்கிலத்தில் ஒரு விஷயம் சொல்வார்கள். "If Plan A doesn't work, dont worry Alphabet has another 25 letters" அதாவது உங்களுடைய ப்ளான் A வேலை செய்யவில்லை என்றால் கவலைப்படாதீர்கள், ஆங்கில எழுத்துக்களில் இன்னும் 25 எழுத்துக்கள் இருக்கின்றன என்பது தான் அந்த ஆங்கில சொற்றொடொரின் விளக்கம். 



உங்களுக்கு தொழில் செய்யும் ஊரை பற்றியும் சந்தை நிலவரம் பற்றியும் அதிக விவரம் இல்லயென்றால் வியாபாரம் ஆரம்பிக்கும் முன் விடுப்பில் இந்தியாவுக்கு வந்து அதன் நுணுக்கங்களை கற்றறிந்து விட்டு அடுத்த பயணத்தில் கேன்சலில் இந்தியா வந்து வியாபாரத்தை ஆரம்பிக்கலாம். ஆனால் கற்றறியும் பயணத்துக்கும் கேன்ஸல் பயணத்துக்கும் அதிக காலம் இடைவெளி எடுத்து கொள்ளுதல் கூடாது. இப்படி செய்யாமல் ஊருக்கு கேன்ஸலில் வந்து விட்டு கடைத்தெருவில் உட்கார்ந்து கொண்டு எந்த யாவாரம் ஆரம்பிச்சா நல்லா இருக்கும் மாப்ள என்று போறப் போக்குல ஒரு டீயும், வடையும் வாங்கி தின்று விட்டு அக்கறை / மட்டும் திட்டமிடல் இல்லாமலும், வியாபாரத்தை பற்றிய நுணுக்கங்கள் இல்லாமலும் ஆரம்பிக்க கூடாது.

பலர் இதை போல் ஆரம்பித்து சில வருடங்களில் அந்த வியாபாரத்தை மூடி விட்டு மறுபடியும் வளைகுடா நாடுகளுக்கு செல்வதை பார்த்ததால் இதை சொல்கிறேன். 

திட்டமிடலில் முக்கிய விஷயம்:


ஊரில் ஒரு வியாபாரம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் அதே வியாபாரத்தை அருகிலேயே ஆரம்பிக்கும் வழக்கத்தை நம்மவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். மாற்று யோசனை இல்லாமல் இப்படி கடிவாளம் கட்டிய குதிரை போல் ஓடிக் கொண்டிருந்தால் நம்மால் சாதிக்க முடியாது. தவிர இரு வியாபாரிகளுக்குமே நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதே போல் வியாபாரத்தை பற்றி உங்கள் நண்பர்களிடம், உறவினர்களிடம், குடும்பத்திடம் விவாதியுங்கள். ஆனால் முடிவு நீங்கள் எடுங்கள். ஏனெனில் உணர்ச்சி வயப்படு எடுக்கும் எந்த முடிவும் சரியானதாக இருக்காது. நீ சொல்றியேன்னு இந்த கடை வைக்கிற மாப்ள என்று நண்பர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் அவர்கள் சொன்ன வியாபாரத்தை தொடங்காதீர்கள். ஏனெனில் உங்களை வீழ்த்த அவர்கள் இதை போன்ற சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கலாம். எந்த கருத்தையும் / யாரையும் துட்சமாக நினைக்காதீர்கள், எல்லோரிடத்திலும் ஆலோசனைகளை கேட்டு விட்டு முடிவை நீங்கள் மட்டும் எடுங்கள். 

செய்ய போகும் வியாபாரம்
இடம், 
கடை மற்றும் அலுவலகங்கள் புக்கிங்
ஆட்கள் 

போன்றவற்றை சரி செய்த பின்னரே வியாபாரத்தை ஆரம்பிக்க வேண்டும். அதை போல் நாம் விற்க போகும் பொருட்கள் கிடைப்பது எளிதாக கிடைக்கலாம், அது எங்கு மலிவாக கிடைக்கிறது, எங்கு தரமாக கிடைக்கிறது, எங்கு விற்றால் இலாபம், போட்டியாளர்களை எப்படி சமாளிப்பது போன்ற வியாபார உத்திகளை கையாண்டால் தான் வெற்றி பெற முடியும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

வித்தியாசமான சிந்தனை

நீங்கள் வியாபாரம் செய்ய தேர்ந்தெடுத்த ஊரில் என்ன வியாபாரம் நன்றாக இருக்கிறது என்று ஆராய்ந்து வியாபாரத்தை ஆரம்பிக்க கூடாது. என்ன வியாபாரம் அந்த ஊரில் இல்லை என்று ஆராய வேண்டும். வித்தியாசமான சிந்தனை உங்களின் வெற்றிக்கு வழி காட்டும். பெரும்பாலான ஊர்களில் / கிராமங்களில் மகளிர் தையல் கடை இருப்பதில்லை, அதிக மக்கள் வீட்டில் தைக்கும் பெண்களிடத்திலேயே கொடுத்து தைக்க சொல்வார்கள். இன்று இருக்கும் சூழ்நிலையைல் பெண்களுக்கான யூனிஃபார்ம்கள் முதல் மற்ற அனைத்து முக்கிய துணிகளையும் ஆண்கள் தைக்கும் தையலகத்திலேயே தைக்க கொடுக்கின்றனர். நான்கு அல்லது ஐந்து பெண்களை வைத்து ஒரு மகளிர் தையலகம் வைத்தால் கண்டிப்பாக பல இடங்களில் சூடு பிடிக்கும். இது போல் யோசிக்க வேண்டும். 

டீலர்ஷிப் எடுப்பவர்கள் கவனத்திற்கு:

எந்த பொருள் மார்க்கட்டில் நன்றாக விற்பனை ஆகிறது என்று அறிந்து அதை டீலர்ஷிப்பாக எடுப்பது ஒரு வகை. ஆனால் அப்படி எடுக்கும் போது safety deposit, critical credit terms, target sales என்று பல சிக்கல்களை உங்கள் நிறுவணம் உங்கள் மீது திணிக்க கூடும். ஆனால் ஒரு புது ப்ராடக்ட் மார்க்கட்டிற்கு வந்து அதை மக்களுக்கு புரிய வைத்து அதை விற்று காண்பிப்பது மற்றொரு முறை. இதில் முன் சொன்னது போன்ற சில சிக்கல்கள் இல்லாமல் இருக்கும். மற்றும் உங்களுக்கு உங்களுடைய புதிய ப்ராடக்டை மார்க்கட்டிங் செய்து பலருக்கும் விற்று இலாபம் பார்க்க வேண்டும் என்ற வெறி வரும். தற்போது சோலார் பேனல்கள் எல்லோரும் உபயோகிக்கின்றனர். ஆக அந்த சோலார் பேனலை டீலர்ஷிப் எடுக்கலாம். அது போல் PACKAGED DRINKING WATER இப்போது பிரபலமாகி வருகிறது. அதை டீலர்ஷிப் எடுக்கலாம். ஆக எப்படி வியாபாரம் செய்தாலும் அதை பற்றிய நுணுக்கங்கள் பற்றி அறிந்து செய்வது நலம். 

மாற்று வருமானம்:

உங்களிடத்தில் 10 லட்சம் ரூபாய் இருந்தால் உங்கள் வியாபாரத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்து விட்டு மீதி பணத்தை வேறு விஷயத்தில் (வருமானம் வரும் விஷயத்தில்) முதலீடு செய்யுங்கள். வியாபாரம் சரியாக போகவில்லையென்றாலோ அல்லது வியாபாரத்தில் அதிக முதலீடு தேவைப்பட்டாலோ நாம் அதில் இருந்து எடுத்து கொள்ளலாம். இல்லயெனில் குடும்ப சிலவுக்கு நாம் அதை உபயோகப்படுத்தி கொண்டு வியாபாரத்தில் வரும் பணத்திதை வியாபாரத்திலேயே முதலீடு செய்யலாம். வியாபாரத்தில் இருந்து எடுத்து குடும்ப சிலவு செய்தால் ஜாக்கிரதையாக சிலவு செய்யுங்கள். சில சமயம் வியாபாரத்தின் முதலில் (capital) இருந்து குடும்ப சிலவுக்கு எடுத்து விட்டு கொள்முதலுக்கு கடன் வாங்கி சிரமப்படும் பலரை நான் பார்த்து இருக்கிறேன். 

எக்காரணம் கொண்டும் வட்டியில் இறங்காதீர்கள். வட்டியை பற்றி இறைவன் கடுமையாக தன்னுடைய வேதத்தில் சாடுகிறான்.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். – அல் குர்ஆன் 2:275

ஒரு தொழில் என்றில்லாமல் பல தொழில்களிலும் ஒரே நேரத்தில் ஈடுபடுங்கள். உதாரணத்திற்கு செல்போன் ரீசார்ஜ், வெஸ்டர்ன் யூணியன், விமான டிக்கட்டுகள் புக் செய்தல், பஸ் மற்றும் ரயில்களுக்கான முன்பதிவு, பைக் வாடகைக்கு விடுதல், பைக் கார் வாங்கி விற்றல் போன்ற விஷயங்களில் துணை தொழிலாக செய்யலாம். ஆனால் உங்கள் பிரதான தொழிலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இந்த துணை தொழில்கள் இருக்க வேண்டும். மேலும் பிரதான தொழிலில் கிடைக்கும் இலாபத்தையோ அல்லது பிரதான தொழிலின் முதலையோ எடுத்து துணை தொழிலுக்கு போட கூடாது.

டிஸ்கி: சவுதியில் தற்போது நிலவும் சூழ்நிலை அனைவரும் அறிந்ததே. பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் இன்று அந்த நாட்டவருக்கே முன்னுரிமை அளிக்க முன் வந்துள்ளனர். அதே போல் சிங்கப்பூரிலும் படித்த வேலைக்கு முதலில் சிங்கப்பூர் குடிமகன்களையே தேர்ந்தெடுக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஏதேனும் வெளிநாட்டிலிருந்து நம் சகோக்கள் வேலையில்லாமல் அனுப்பப்பட்டால் அவர்கள் மறுபடியும் வேறு நாட்டிற்கு செல்ல ஆசைப்படாமல் வெளிநாட்டில் சம்பாதிக்க நினைக்கும் அதே வெறியை / உற்சாகத்தை / தன்னம்பிக்கையை / முழு ஈடுபாட்டை தங்களுக்கு தெரிந்த தொழிலை இந்தியாவிலேயே ஆரம்பித்து செய்தால் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் வெற்றி பெறலாம். குவைத்திலிருந்து வளைகுடா போரின் போது திரும்பி வந்தவர்கள் அதே வெறியில் ஆரம்பித்த வியாபாரங்கள் இன்று இறைவனின் கிருபையால் சிறந்து விளங்குகின்றன. சவுதியிலிருந்து வெளியேற்றம் என்பதை பின்னடைவாக எண்ணாமல் வாழ்க்கையின் முக்கிய திருப்பு முனையாக நினைத்து தடைக்கற்கலையும் படிக்கற்கலாக மாற்றுவோம் இன்ஷா அல்லாஹ்.

பின்வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்.

தோழமையுடன் 
அபு நிஹான்

8 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    கலக்கிபுட்டீங்க அண்ணே. மாஷா அல்லாஹ் மிக அருமையான காலத்திற்கு ஏற்ற கட்டுரை. ஜசாக்கல்லாஹ். தொடருங்க...

    ReplyDelete
  2. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

    ReplyDelete
  3. masha allah,wonderful thought,nice encouragement may ALLAH accept your good deeds bro.

    ReplyDelete
  4. http://manithaneyaexpress.blogspot.com/2013/12/blog-post.html

    ReplyDelete
  5. அருமையான கட்டுரை

    ReplyDelete

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...