Sunday, 7 February 2016

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும் 

நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீது மக்களின் கவனம் அதீத முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. இதற்கு காரணம் நம் பிள்ளையும் ஆங்கிலத்தில் உரையாட வேண்டும் US (அப்படின்னா உழவர் சந்தையா?) செல்ல வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றும் நினைக்கும் பெற்றோர்களும் ஒரு முக்கிய காரணம். 

சினிமா என்னும் கூறிய வாள்

தமிழக திரைப்படங்களில் முஸ்லீம்களை மட்டுமே தீவிரவாதிகளாக காட்டும் விஷயத்திற்காக நாம் கொந்தளித்தால் (சமீபத்தில் வந்த விஸ்வரூபம்), நம் மாற்று மத சகோக்களான இந்து நண்பர்கள் இதற்கு ஏன் வருத்தப்படுகிறீர்கள், எங்கள் மதத்தையும் தான் கேலிக்குரியதாக்குகிறார்கள், எங்கள் மதத்தையும் தான் இழிவுபடுத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள். அவர்களின் புரிதலுக்காகவே இதை பகிர்கிறேன். 

Saturday, 28 March 2015

நேர்மையின் பரிசு என்ன?

அஸ்ஸலாமு அலைக்கும்.

நீங்க ஒரு அரசாங்க வேலையுல இருக்கீங்க, பெயர் வேணாம். நல்ல நேர்மையான அதிகாரியா இருக்கீங்க, தனியாளா இருந்த உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாய்ங்க. இது வரை இருந்த நேர்மைக்கு லைட்டா சோதனை வருது. மனைவி லேசா ஆரம்பிக்கிறாங்க, அவுங்க கிட்ட சொல்லி புரிய வைக்கிறீங்க. ஊர் உலகத்துல இல்லாததானு சொல்றாங்க, அப்படியும் அவுங்க கிட்ட சொல்லி அவுங்க மனச மாத்துறீங்க. இலஞ்சம் வாங்காததால மிரட்டல் வருது. லைட்டா பயமா இருந்தாலும் சமாளிக்குறீங்க. பின்ன குழந்தை பொறக்குது. அந்த குழந்தைக்காகவாவது மாறுங்கன்னு சொல்றாங்க குடும்பத்தினர். எப்படிம்மா தப்ப சரினு இவுங்களால சொல்ல முடியுதுனு அம்மாகிட்ட அழுது புலம்புரீங்க. பொழைக்க தெரியாதவனா இருக்கியப்பா, இந்த காலத்துலையும் பிள்ளையை கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்து படிக்க வச்சிருக்க என்று ஏச்சுகளும், பேச்சுகளும் வருது. இருந்தாலும் கொண்ட கொள்கையில் உறுதியா இருக்கீங்க. இதுவெல்லாவற்றையும் தாண்டி இலஞ்சம் வாங்காததால ஊர் மாற்றம் பணி மாற்றம்னு ஊர் ஊரா சுத்துறீங்க. யார் வாய அடைச்சாலும் மனைவியும், பிள்ளையும் ஊர் ஊரா மாறி / நாறி போறத விரும்பாம தினம் தினம் கரிச்சு கொட்டுறாங்க. 

Wednesday, 19 November 2014

வியாபாரம் பாரமா - ஒரு உற்சாக தொடர் - பகுதி - 3


அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்! - அல் குர்ஆன் 2:42


தொழில் செய்யும் இடத்தில் அரட்டை கூடாது:


சிலர் தொழில் செய்யும் இடத்தில் வீண் அரட்டை, அரசியல் என்று சகலமும் பேசுவார்கள். அவர்கள் கடையில் எப்போதும் ஒரு வெட்டி ஆஃபிஸர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இப்படி இருந்தால் தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியாது. அரட்டை அடிக்கும் அப்பாடக்கர்கள், வேலை இல்லாத வெட்டி ஆஃபிஸர்களுக்கு பொழுது கழிக்க வேறு இடம் இல்லாததால் அவர்கள் உங்கள் கடையை நோக்கி வருகிறார்கள். முகதட்சனை பார்க்காமல் இங்கு கடை வியாபாரத்தை கெடுக்க வேண்டாம் என்று சொல்லி உங்கள் நண்பர்களுக்கு பறிய வையுங்கள். 
no chat

இப்படி எந்நேரமும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருந்தால் உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்து கொண்டே வருவார்கள்; எப்படி? 

Monday, 17 November 2014

வியாபாரம் பாரமா - ஒரு உற்சாக தொடர் - பகுதி - 2



அனுபவம் இல்லாத தொழிலை செய்ய கூடாது:

அனுபவம் இல்லாத வேலையை ஆரம்பிக்க கூடாது. உதாரணத்திற்கு நீங்கள் ஹோட்டல் வைத்தால் உங்களுக்கு புரோட்டாவும் போடத் தெரிய வேண்டும், டீயும் போடத் தெரிய வேண்டும். டீ / புரொட்டா மாஸ்டர் வரவில்லையென்றால் களத்தில் இறங்கி வேலை செய்வதற்கு கேவலமாக எண்ணவும் கூடாது. இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் டீ / புரோட்டா மாஸ்டர்களிடம் கடினமாக நடந்து கொண்டால் / அல்லது அவர்கள் திடீரென்று நோய்வாய்பட்டால் நாம் வேலை செய்ய கற்றிருந்தால் தான் அன்று கடை திறந்திருக்கும். இல்லையேல் கடையை அடைத்து விட்டு வீட்டில் தான் உட்கார்ந்து இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரு தொழில் செய்ய ஆசையாக இருக்கிறது, ஆனால் உங்களுக்கு அதில் அனுபவம் இல்லையென்றால் சென்னை போன்ற நகரங்களில் அந்த தொழில் செய்யும் கூடத்தில் ஒரு 6 மாதம் வேலை செய்து தொழிலை கற்று கொண்டு, நெளிவு சுளிவுகளை தெரிந்து கொண்டு தொழிலை ஆரம்பிப்பது நல்லது. இன்று பலர் தொழிலாளிகளை நம்பி தொழிலை ஆரம்பிக்கின்றனர், ஆனால் அந்த நம்பிக்கைக்குரிய தொழிலாளி தன்னுடைய கடையை விட்டு போனவுடன் செய்வதறியாது திகைக்கின்றனர்.

Sunday, 16 November 2014

கல்வி முதலீடா

அஸ்ஸலாமு அலைக்கும்.

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நேரத்திலேயும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேரத்திலேயும், அதில் எடுத்த மதிப்பெண்கள் பற்றியும், அதில் தேறிய தவறிய மாணவ மாணவிகள் பற்றியும், தேர்ச்சி சதவிகிதம் பற்றியும் ஒரே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில் நாம் நம்முடைய குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வியை வழங்குகிறோமா? நம்முடைய அடுத்த சந்ததிகளை சரியான முறையில் வழி நடத்துகிறோமா என்று கேட்டால் பெரும்பாலான இடங்களில் அது நேருக்கு மாறாகவே இருக்கிறது. உண்மையான கல்வி என்பது பொய்த்து போய் இன்று பலருக்கும் சங்கடம் தரும் கல்வியாகவே மாறி வருகிறது. இதற்கு பெருகி வரும் கல்வி கூடங்களும், தன் மகனும் / மகளும் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரியில் சேர வேண்டும் என்பது மட்டுமே காரணமாக இருக்கிறது. என்னது என் மகன் / மகள் நல்ல மதிப்பெண் பெறுவது என்பது என் மகன் / மகளுக்கு செய்யும் துரோகமா? என்று நீங்கள் கேட்டால் பெரும்பாலான இடங்களில் அது துரோகமாக தான் இருக்கிறது.

Saturday, 30 November 2013

வியாபாரம் பாரமா - ஒரு உற்சாக தொடர் - பகுதி - 1

'தொழுகை முடிக்கப்பட்டதும் அல்லாஹ்வின் அருளை பூமியில் அலைந்து தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! அல்-குர்ஆன் : 62:10 

ஊரில் செட்டிலாக வேண்டும் என்று பலர் சொல்லி கொண்டு வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ் சொந்த ஊரில், சொந்த நாட்டில் போய் செட்டிலாக வேண்டுமென்ற எண்ணமே பெரிய விஷயம். இதை சமயம் பார்த்து தான் நம் வீட்டில் உள்ளவர்களிடத்தில் சொல்ல வேண்டும். இதனால் பலரிடத்தில் இருந்து கேட்காமலே பல இலவச அறிவுரைகள்(?) வரும். இன்னும் சிலர் அவனை பார்த்தியா, அவனும் உன்னை போல் தான் வெளிநாட்டில் இருந்து வந்து தொழில் செய்றான், எவ்வளவு கஷ்டப்படுறான்னு பார்த்தியா அப்படின்னு கேட்பார்கள். எல்லாருக்கும் ஒரே மாதிரியான எண்ணமும் திறமையும் இருக்காது, சில பேர் hard work பண்ணுவார்கள், சில பேர் smart work பண்ணுவார்கள். Smart work is better than Hard work. அதே போல் நம்மை யாருடனும் கம்பேர் செய்ய வேண்டாம் என்று உங்கள் குடும்பத்தில் கட் அண்டு ரைட்டாக சொல்லி விடுங்கள், இதில் நீங்கள் நளினத்தை / பணிவை மேற்கொண்டால் உங்கள் வீட்டிலேயே உங்களை மாற்றி விடுவார்கள். 

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...