Wednesday, 25 August 2010

அரசியல் வா(வியா)திகளின் 2010 தேர்தல் களத்தில் நகைச்சுவை:

கருணாநிதி : ஊழலைப்பற்றி விஜயகாந்த் பேசுவது வாய்விட்டுச் சிரிக்கும் கேலியாக இருக்கிறது. 

பி.கு: ஊழல் செய்தவர்கள் தான் ஊழலை பற்றி சொல்ல வேண்டும் என்று கூறுகிறாரோ என்னவவோ?
ஜெயலலிதா 1 :கால்பந்து vs புல்லாங்குழல் - இப்தார் விருந்தில் ஜெ.சொன்ன குட்டிக்கதை, மேலும் படிக்க : http://www.inneram.com/2010081910146/jayalailathaa-praised-islamic-fasting-and-charity

ஜெயலலிதா 2: வெற்றியைக் குவிக்கும் நேரம் வந்துவிட்டது 

மேலும் படிக்க : http://www.inneram.com/2010082210213/its-time-to-acheive-victory-jayalalith 

பி.கு: 1. யாருக்கு வெற்றியை குவிக்கப் போகுதுன்னு தெரியலையே. 

           2. கதை சொல்லியே காலத்தை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் அம்மா? 

ராமதாஸ்: பாமக உதவி இல்லாமல் யாரும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது 

பி.கு: ஒரு வேளை கள்ள ஓட்டு போடுவதற்கு, மரம் வெட்டுவதற்கு தான் பாமக உதவி வேண்டும் என்று சொல்கிறாரோ என்னவோ?

ராகுல்: பிரதமர் செயலை இப்போதே செய்கிறேன். 

பி.கு: ஒரு வேளை பிரதமர் பதவி தராமல் போய் விடுவார்களோ என்ற பயத்தில் செய்கிறாரோ என்னவோ? 

விஜயகாந்த்: திமுக. அதிமுக இல்லாத கூட்டணிக்கு தலைமை ஏற்கத் தயார்! 

பி.கு: அப்படியென்றால் நீங்கள் மட்டும் தான் அந்த கூட்டணியில் இருப்பீர்கள், பரவாயில்லயா? 

ஸ்டாலின் : மனைவியுடன் மு.க.ஸ்டாலின் திடீர் லண்டன் பயணம் 

ஒரு வேளை மனைவியுடன் லண்டன் போனால் தான் முதல் மந்திரி ஆக முடியும் என்று குன்றக்குடி ஜோசியர் சொல்லி விட்டாரோ என்னவோ? 

தோழமையுடன்

அபு நிஹான்

No comments:

Post a Comment

உங்கள் சிந்தையில் ஓடும் சிந்தனைகள்

குழந்தைகள் ATM மெஷின்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்  நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 20 வருடங்களாக ஆங்கில வழி கல்வியின் மீ...